செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தீவீரவாதிகளா விடுதலை புலிகள் ஒரு சிறப்பு கண்ணோட்டம்.

விடுதலை புலிகள் பற்றி பல தரப்பு மக்களாலும் பலதரப்பு அரசியல் வாதிகளாலும் பல எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டாலும் அவர்களை பற்றி ஒரு சரியான புரிதல் இல்லாமல்தமிழ் பேசும் மக்கள் இன்றும் இருப்பது மிகவும் வேதனையான விடையமாகவே இருக்கின்றது .

தமிழ் பேசும் தமிழர்கள் நாங்கள் வேறு பட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொண்டு இருப்பது உலக அரசியலுக்கும் மிதவாத கொள்கை உள்ள ஆளும் தரப்பிற்கும் சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது.

நாங்கள் எல்லோரும் விட்ட வரலாற்று தவறாக பலம் பொருத்திய ஆட்சி இருக்கும் போதே எமது உரிமையை வென்று எடுக்காதது தான். தலைவர் ஒரு தனிப்பட்ட மனிதனாக யாராலும் அவரின் மேல் குற்றம் சாட்ட முடியாது. ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொரு குழந்தைகள் ஒரு மாதிரி இருக்கும் போது அந்த பெரிய கட்டமைப்பில் சிலர் விட்ட தவறுகளால் விடுதலை போராட்டம் என்பது தீவிரவாதமானது என்றோ  இல்லை வன்முறையானது என்றோ நாம் வரையறுக்க முடியாது.

விடுதலை புலிகள் போல ஒழுக்க வாதிகள் எந்தவொரு கட்டமைப்பிலும் இல்லாததை உலகமே வியந்ததை நாம் அறிவோம்.
விடுதலை புலிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டாக இளம் வயதில் போராளிகள் என்பது தான். அது அரசாங்கத்தால் முன் வைக்கபட்ட குற்றசாட்டே தவிர ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மேலைத்தேய நாடுகளிலேயே பதினாறு வயது தாண்டிய இளம் ஆண்களும் சரி பெண்களும் சரி நாட்டிற்காக இருவருடம் சேவை செய்ய வேண்டும் என்பது சட்டமாக இருந்தது . இப்போது அந்த சட்டம் வலுவுடையதாக இல்லாமல் இருந்தாலும் இப்போதும் விரும்பிய பதினாறு வயது நிரம்பிய ஆணும் பெண்ணும் நாட்டிற்காக இராணுவத்தில் தம்மை இணைத்து கொள்ள முடியும். அதே போல நமது ஈழத்திலும் விரும்பியவர்கள் தம்மை விடுதலை போராட்டத்தில் இணைத்து இருந்தால் அவர்கள் எப்படி இளம் வயது போராளிகள் ஆகா முடியும்.

அது போக பதின்நான்கு, பதின் மூன்று வயது குழந்தைகளால் எப்படி கனரக ஆயுதங்களை கையாள முடியும்?இது மிகவும் அடிப்படையில் ஆதாரமற்ற குற்ற சாட்டாகவே பார்கின்றேன்.

அடுத்ததாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட பெரிய குற்றச்சாட்டு தீவிரவாதிகள்,எல்லோருக்கும் புரியும் படியான உலகமே வியந்த தாக்குதலான கட்டுநாயக்கா தாக்குதலை எடுத்துகொள்வோம். விமான  நிலையம் என்பது எவ்வளவு பரபரப்பும் சன சந்தடியும் நிறைந்தது என்பது ஒரு சிறு குழந்தைக்கும் புரியும். அந்த இடத்தில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படாமல் தாக்குதல் நடத்திய உன்னத வீரர்களை கொண்ட கட்டமைப்பா  தீவிரவாத கட்டமைப்பு .....

ஈழத்தில் நடந்த இறுதிகட்ட போரிலும் பிரிகேடியர் தீபன் அண்ணா பிரிகேடியர் விதுசாக்கா , உட்பட முன்னூறு  வரையான உயர் பதவியில் இருந்த  பிரிகேடியர்களும் கேணல்களும் லெப்டினன்  கேணல்களும்,இரண்டாம் லெப்டினன் கேணல்களும்,     கப்டன்களும்,மேஜர்களும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் ஸ்ரீலங்கா படைத்தரப்பால் மனிதாபிமானமற்ற முறையில் உலக நாடுகளே தடைசெய்த எரிவிஷ வாயு குண்டை பாவித்து  அழித்து   ஒரே நாளில்  நம் விடுதலை போராட்டத்தின் திசையை மாற்றி அமைத்த போதும் பன்மடங்கு பெரிய இரணைமடு குளத்தை உடைக்காமல் கல்மடு குளத்தை மட்டும் உடைத்து ஆயிரகணக்கான இராணுவத்தை மட்டும் அழித்த வீர மறவரை கொண்ட கட்டமைப்பா தீவிரவாத கட்டமைப்பு ...

வேற்று மொழி இனத்தவராக இருந்தாலும் தம்மை நம்பி வந்த மக்களிற்கு எந்த விதமான துரோகமும் செய்யாமல் எத்தனை சிங்கள யுவதிகளை திருப்பி அனுப்பி இருப்பார்கள். விடுதலை புலிகளிடம் சிக்கிய அந்த இராணுவ வீரருக்கும் அவர் குடும்பத்துக்கும் மட்டுமே இந்த உண்மைகள் நிச்சயம் தெரிந்து இருக்கும். அவர்கள் பிடியில் சிறையில் இருந்து வெளிவந்த ராணுவத்தில் ஒன்று இரண்டு பேர் மட்டும் துணிச்சலாக இந்த விடையத்தை தொலைக்காட்சிகளில் சொல்லி உள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்க இறுதி சண்டையில் விடுதலை புலிகள் தமது மக்களை தமது பாதுகாப்பு வேலிகளாக பயன்படுத்தினார்கள் என்பது இன்னுமொரு குற்றச்சாட்டு. நாற்புறமும் உலகின் வல்லரசு நாடுகளின் ராணுவம் புடைசூழ நான்கு லட்சம் மக்கள் அவர்களின் அந்த ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த போதும் இலங்கையின் வருமான வரி திணைக்களத்தின் மீது குண்டு வீசிய விடுதலை புலிகள் சிங்கள மக்கள் செறிந்து வாழும் ஒரு இடத்தில் குண்டு வீசவில்லையே இப்படிபட்ட போர் வரைமுறையையும்,நெறிமுறையும் கொண்ட ஒரு கட்டமைப்பா தீவிரவாத கட்டமைப்பு . இவர்களா தம் மக்களை காவலரணாக   பயன்படுத்தி இருப்பார்கள்? சரியான சாட்சிகள் இல்லாமல் ஒரு புனிதமான கட்டமிப்பின் மீது சேறு பூச முனைவதும் அதில் கிடைக்கும் லாபத்தில் தம்மை வளர்த்து கொள்வதும் தமிழனாக தமிழ் பேசும் எந்தவொரு குடிமகனுக்கும் கேவலம் ....

இறுதியாக என் கருத்தின் படி விடுதலை புலிகளும் அரசாங்கமும் சமாதான நடவடிக்கையில் ஜெனிவா பேச்சு வார்த்தையில் இருந்தபோது விடுதலை புலிகளை தீவிரவாதியின்  பட்டியலில் முதலில்  முத்திரை குத்திய நாடு இந்தியா.அதை பார்த்துவிட்டு அமெரிக்காவும் பிரிட்டனும் வழிமொழிய எல்லா ஐரோப்பிய நாடுகளும் தீவிரவாதியாக விடுதலை புலிகளை பட்டம் சூட்டியது.இதில் சுவிஸ் மட்டும் விதிவிலக்கு.

 இப்போது சொல்லுங்கள் விடுதலை புலிகள் தீவிரவாதியா? ஆளும் வல்லரசு நாடுகள் தீவிரவாதியா?

12 கருத்துகள்:

  1. Sim Card Data Recovery மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://adf.ly/BftZc

    பதிலளிநீக்கு
  2. //விடுதலை புலிகள் போல ஒழுக்க வாதிகள் எந்தவொரு கட்டமைப்பிலும் இல்லாததை உலகமே வியந்ததை நாம் அறிவோம்.//

    ஒத்துக் கொள்கின்றேன் -- போராளி இயக்கங்களுக்கு ஒழுக்கக் கட்டுபாடு வேண்டும் தான்.. ஏனெனில் தமிழ் புலிகள் ஒரு கற்பழிப்புத் தாக்குதலையும் நிகழ்த்தியது இல்லை என்பதில் இருந்தே அறிந்துக் கொள்ளலாம்

    //விடுதலை புலிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டாக இளம் வயதில் போராளிகள் என்பது தான். அது அரசாங்கத்தால் முன் வைக்கபட்ட குற்றசாட்டே தவிர ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.//

    சகோ. எந்த ஊர்ல நீங்க இருக்கீங்க .. தமிழ் புலிகள் சிறுவர் போராளிகளை வைத்திருந்தது மிக மிக உண்மை. நீங்க எந்த இலங்கைத் தமிழர்களிடமும் இதனை கேட்டு உறுதி செய்துக் கொள்ளலாம். அம்னஸ்டி போன்ற அமைப்புகள் அதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளன ... !!! தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    //அதே போல நமது ஈழத்திலும் விரும்பியவர்கள் தம்மை விடுதலை போராட்டத்தில் இணைத்து இருந்தால் அவர்கள் எப்படி இளம் வயது போராளிகள் ஆக முடியும்.//

    விரும்பியும் விரும்பாமலும் வலுக் கட்டாயமாக பல சிறுவர்கள் இணைக்கப்பட்டது உண்மமை தான் சகோ. 13 வயதுடைய சிறுவனாக தாம் விபு அமைப்பில் சேர்ந்தது முதல் அனைத்து தகவலையும் ஒரு முன்னாள் விபு கனடாவில் உரையாடும் போது கூறினார். கனடா வந்த பின்னும் அவர் இயக்கத்துக்கு காசு எல்லாம் சேர்த்துக் கொடுத்தவர். ஆக ! அது உண்மை இல்லை என நீங்கள் கூறுவது வியப்பைத் தருகின்றது.

    //அந்த இடத்தில் கூட ஒரு பொதுமகன் கூட கொல்லப்படாமல் தாக்குதல் நடத்திய உன்னத வீரர்களை கொண்ட கட்டமைப்பா தீவிரவாத கட்டமைப்பு .....//

    உண்மை தான் கட்டுநாயக்கா, அனுராதபுரா தாக்குதல்களில் பொது மக்கள் கொல்லப்படவில்லை என்பபது வியப்பான உண்மையே. ஆனால் கொழும்பு, கண்டி, மட்டக் களப்பு என பல இடங்களில் பொது இடங்களில் குண்டு வைத்து பல பொது மக்கள் இறந்துள்ளனர். அதற்கு விபு பொறுப்பேற்றுக் கொண்டதையும் நாம் அறிவோம். உச்சக்கட்டமாக தலதா மாளிகையில் குண்டு வைத்தது அவர்களின் நற்பெயர்கள் கொட்டுப் போக ஒரு முக்கிய காரணம் .. பிரேமதாசாவை கொல்லும் போதுக் கூட பொது மக்கள் பலர் இறந்தத்தை தாம் அறியவில்லையோ !

    பதிலளிநீக்கு
  3. மற்றப்படி நீங்கள் சொல்வது உண்மை தான். போர்க்குற்றவாளிகளை தகுந்த முறையில் ஒப்படைத்தமை போல நற்காரியங்கள் பல செய்துள்ளனர் தான்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு தோழன் இக்பால் முதலில் நீங்கள் என்னை சகோ என்று அழைத்ததற்கு என் நன்றிகள்.......
    தாங்கள் கூறியது போல கொழும்பு, மட்டகளப்பு, கண்டி ஆகிய இடங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதையும் அதை விடுதலை புலிகள் செய்தார்கள் என்றும் பத்திரிகைகள் எழுதுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. சரி விடுதலை புலிகள் செய்தார்கள் என்றே வைத்து கொண்டாலும் கொழும்பு கண்டி மட்டகளப்பு மக்கள் மட்டும் தான் பொதுமக்களா? எமது யாழ்பாணத்தில் எத்தனை எத்தனை ஆயிரம் மக்கள் தேவாலயத்திலும் பள்ளிகளிலும் கோவில்களிலும் கொல்லப்பட்டதை நீங்கள் அறியவில்லையா? அப்போது இலங்கை ராணுவமும் தீவிரவாதி தானே!

    சில விடையங்களை நான் இன்னமும் சொல்ல விரும்புகின்றேன். இரட்டை கோபுர தாக்குதல் அல்கெய்தா குழுவினரால் நடத்தப்படவில்லை என்பது ஒரு தரப்பு வாதம். அதற்கான சில ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டதை நீங்கள் சில வேளைகளில் அறிந்து இருப்பிர்கள். இவ்வளவு வாசிப்பு ஆற்றல் கொண்ட நீங்கள் நிச்சயமாக ஒசாமா பற்றியும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து இருப்பீர்கள். முஸ்லிம் நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தை மட்டும் முன்னிலை படுத்தி அமெரிக்காவும் இதர ஐரோப்பிய நாடுகளும் தமக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த சதாம் & ஒசாமாவை அழித்ததும் லட்சகணக்கான சொத்துக்களை சூறை ஆடியதும் அதை மூடி மறைக்க தீவிரவாதம் பேசியதும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.....

    ஒரு சிறுபான்மை இனத்தின் மீது எப்போது வன்முறை பிரயோகிக்கப்படுகின்றதோ அங்கு விடுதலை வேட்கை அதிகரிக்கும்.

    நானும் ஒரு ஈழ தமிழ் மகள் தான். நாங்கள் சிறு குழந்தைகளாக ஒரு பத்து வயது இருக்கும் என்று நினைக்கின்றேன், பாடசாலை பேச்சுக்களில் அரசியல் துறையினர் வந்து பேசுவதும் சில அக்காமார் எழுந்து போவதும் சில அக்காமார் விடுதலை புலிகளால் திருப்பி அனுப்பபட்டதும் அவர்கள் தமக்கு வயது குறைவு என்று அழுததும் இன்னும் என் மனதில் பசுமரத்தாணியாய் உள்ளது.எனது பதின் ஓராவது வயதில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் சில விடையங்களை இன்னும் மறக்க முடியவில்லை .....

    பதிலளிநீக்கு
  5. விடுதலை புலிகள் போல ஒழுக்க வாதிகள் எந்தவொரு கட்டமைப்பிலும் இல்லாததை உலகமே வியந்ததை நாம் அறிவோம்.
    *****
    பொறுகிக்களால் போராளிகளை கொல்லத்தான் முடியும் ..என்றும்
    வெல்ல முடியாது.... ........வாழ்த்துகளுடன் உங்கள் செந்தில்....

    பதிலளிநீக்கு
  6. எங்களை எவன் ஆயுதம் தூக்க வைத்தானோ அவனே தீவிரவாதி. எங்கள் போராட்டதை மதியாது எவன் எங்களை நசுக்க நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் சர்வதேச பயங்கரவாதிகள்

    பதிலளிநீக்கு
  7. மக்கள் தான் புலிகள். புலிகள்தான் மக்கள். வேண்டுமென்றால் பாருங்கள், விறைவில் இன்னொரு போர் விரைவில் வெடிக்கும்

    பதிலளிநீக்கு
  8. இன்னொரு போர் விரைவில் வெடிக்கும்., நிச்சயமாக..

    பதிலளிநீக்கு
  9. இந்தியப் பிரதமரைக் கொன்று, இலங்கையில் மற்றபிற சக தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றுகுவித்து, விடுதலை வேட்கையினை முன்னிறுத்திய மற்ற குழுக்களையும் இல்லாமலாக்கி அவர்கள் நடத்தியதற்குப் பெயர் விடுதலைப்போரா? சொல்லுங்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதுதான் முக்கியம். ஒரு சர்வாதிகாரிக்கு வக்காலத்து வாங்குவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இப்படியாக இலங்கைத்தமிழர்கள் எல்லோரையும் கருவறுத்தவர்கல்தாம் புலிகள். உங்களுக்குள்ள பிரச்சினை என்பதாலேயே எல்லோரையும் கொன்றுகுவிக்கும் கலாச்சாரத்தை என்னவென்று சொல்வது.

    பதிலளிநீக்கு
  10. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய படைகளை ஈழத்திற்கு அனுப்பி 25000க்கு மேற்ப்பட்ட எம் மக்களை கொன்றது சரியா சிறு வயது பெண்களில் இருந்து வயது முதிர்ந்த பெண்கள் வரை கேவலம் கெட்ட இந்திய படைகள் பாலியல் துஸ்பிரயோகம் அவர்களை கொன்றது சரியா...

    புலிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல இழப்புகளை சந்தித்த இந்திய படையினர் பின்பு புலிகளை அழிக்கிறோம் அழிக்கிறோம் என்று சொல்லி கொண்டு கண் மூடித்தனமாக இந்திய படைகள் மக்களையே அழித்தார்கள்...

    வீரமான எம்மினத்தில் பிறந்து எதிரிக்கு வால் பிடிக்கும் எவனா இருந்தாலும் சரி அவனுடைய விதி விடுதலைக்கு போராடும் தமிழனாலையே எழுதப்படும்...

    இந்திய படைகளுடனும் ஸ்ரீலங்கா படைகளுடனும் சேர்ந்து....
    விடுதலைக்கு போராடும் தமிழ் மக்களையும் தமிழீழ போராளிகளையும் காட்டி கொடுத்த மற்ற அமைப்பு ஒரு சில போராளிகளையே விடுதலை புலிகள் சுட்டு இருந்தார்கள்...

    பதிலளிநீக்கு
  11. நிங்கள் யார் என்னத்தை சொன்னாலும் எமது விடுதலை அமைப்பான (தமிழிழ விடுதலைப்புலிகள்) மீதும் தேசத்தின் விடுதலைக்காக போராட புறப்பட்ட எந்தவொரு போராளியையும் குற்றம் சொல்வதை தயவு செய்து நிறுத்துங்கள்!!!

    பதிலளிநீக்கு