ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தமிழ் மக்களிற்கு இளையராஜாவின் துரோகம்


இசை உலகில் தமிழ் மக்களால் முன்னிலைபடுத்தபட்டு தமிழ் மக்களால் மட்டுமே பிரபலபடுத்தப்பட்டு இன்று தமிழ் மொழிக்கும் தமிழுக்கும் துரோகம் இழைப்பவர்கள் பட்டியலில் இப்போது புதிதாக தம்மை இணைத்து கொண்டவர் பட்டியலில்,  இசைஞானி இளையராஜா அடங்குகின்றார்.
தமிழ் மக்களால் மட்டுமே முன்னிலைபடுத்தபட்டார் என்பதற்கான ஆதாரமாக அவர் இசையமைத்த 950 மேற்பட்ட படங்களில் 440 மேற்பட்ட படங்கள் தமிழ் படங்களாகும். பிற மொழி படங்களில் அவரால் 500 படங்களுக்கு மட்டுமே இசையமைக்க கூடியதாக இருந்தது. ஆரம்ப காலங்களில் நாட்டுபுற பாடல்களாலும் கிராமிய மனம் கமழும் பாடல்களாலுமே தமக்கு என ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

இது தவிர அவர் தெலுங்கு ,இந்தி ,மலையாளம் , கன்னடம் ஆகிய மொழி திரை படங்களுக்கு இசை அமைத்திருந்த போதும் தமிழ் படங்கள் மட்டுமே அவருக்கான  அந்தஸ்தை வழங்கியது. "வளர்த்த கடா மார்பில் பாய்வது போல" இன்று அந்த மனிதன் தமிழ் மக்களின் மனதில் மிகவும்   வேதனையை தரும் வேலையை வெளிப்படையாகவே செய்கின்றார். காங்கிரசின் மேல் தீராத பற்று கொண்ட அவர், விடுதலை புலிகளின் சில ஈழத்து கலை நிகழ்சிகளில் பங்கு பெற மறுத்த விடயமானது மிக குறைந்தளவிலான வட்டமே அறிந்து கொண்ட போதிலும் மிகவும் வெளிப்படையாக ஈழ மக்களிற்கு எதிராக செயற்படுவது இதுவே முதல் தடவையாகும்.

பரந்து கிடக்கும் இந்த பிரபஞ்சமே அறிந்திருப்பது செப்டம்பர் 11 இது அமெரிக்க வர்த்தக கோபுரங்கள் தாக்குதலுக்கு உள்ளான மாதம்.அதேபோல் உலகில் தமிழர் பரந்து வாழும் இப் பூகோளத்தில் நவம்பர் மாதமும் மறக்க முடியாத தமிழ் மனங்களில் என்றும் நிலையாக வாழும் மாதமாகவும் கொண்டாடப்படுகின்றது. ஆம் ......எம் நாட்டையும் எம் இனத்தையும் காப்பதற்காக தம்மை ஆவுதி ஆக்கிய மாவீர செல்வங்களினதும், மக்களினதும் நினைவுகளை மீட்கும் ஒரு நினைவு மாதமாகவே கொண்டாடப்படுகின்றது. இந்த நவம்பர் மாதத்தில் எந்தவொரு களியாட்ட நிகழ்வுக்களுமோ இல்லை வேடிக்கை நிகழ்வுக்களுமோ இடம்பெறுவதில்லை. அந்த மாதத்தில் தமிழ் மக்களால் முன்னிலைபடுத்தபட்ட இளையராஜா என்ற நபர் களியாட்டம் நடத்துவதற்காக கனடா நோக்கி பயணிப்பதும் அந்த நிகழ்வை பிரபலபடுத்துவதற்காக கைக்கூலி வாங்கி கொண்டு செயற்படும் ஊடகங்களும் தன் தாயை விற்று பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட பிறவிகளுக்கு நிகரானவர்கள்.

இந்த மானம் கெட்ட நிகழ்வுகளை ஒழுங்கமைத்த கனவான்களிற்கு உங்கள் எதிர்ப்புக்களை தெரிவிப்பதும் இந்த நிகழ்வை முழுமையாக பஷ்கரிப்பு செய்வதுமே எமது இன்றைய தேவைபாடாகும். இந்த நிகழ்வு சம்பந்தமாக நாடு கடந்த தமிழ் ஈழ பேரவை அமைதி காப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது .அத்துடன் இந்திய தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற விஜய் தொலைகாட்சி இந்த நிகழ்வை விளம்பர படுத்துவதும் ஆண்டாண்டு காலமாக எம் இனத்தை வல்லாதிக்க சிந்தனை உள்ள சக்திகள் ஆண்டு வருவதை தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது.(விஜய் தொலைக்காட்சி அதிகளவில் மறைமுகமாக காங்கிரசு பற்று உள்ள தொலைக்காட்சி என்பது மக்கள் அறியாத ஒன்று)

எமதினிய தமிழ் மக்களே !
நாம் காலம் காலமாக எமது விடுதலையையும் சுதந்திரத்தையும் போராடியே பெற்று வந்திருக்கின்றோம். எமது விடுதலை பாதையானது மிகுந்த கரடுமுரடான சிக்கல்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. நாம் விட்டு போன பாதையை எமது இளம் சந்ததி தொடர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தான் எமது விடுதலை வேட்கையை உலகளாவிய ரீதியில் எடுத்து சென்றோம். ஆனால் உலகளாவிய ரீதியில் எடுத்து செல்ல பட்ட எமது போராட்டம், இப்போது மீண்டும் குழந்தையாக தவழ்ந்து திரிகின்றது. இதில் எமது கணக்கில் அடங்காத துரோகங்களும் காட்டி கொடுப்புகளும் மேலோங்கி உள்ளது. எம்மால் முற்றிலுமாக நிராகரிக்கபட்ட கேளிக்கை கொண்டாட்டங்கள் முன்னிலை படுத்தபடுவதும் விடுதலை கீதங்கள் மட்டுமே ஒலிக்கபடவேண்டிய காலப்பகுதியில்
களியாட்டம் நடப்பதும்  எம்மால் ஒருபோதும் விரும்பப்படுவதில்லை.
எனவே எமது விடுதலையின் பெயரால் எம்மால் ஏற்றுகொள்ள முடியாத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது நிச்சயம் ஒரு நாள் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில் எமது கண்கள் உறங்கிவிட மாட்டாது.
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

8 கருத்துகள்:

  1. 02- 11- 2008 இல் வீரச்சாவடைந்த தமிழ்ச்செல்வனின்
    நினைவு தினத்தை 03-11-2012 ல் கனடா கந்தசுவாமி
    கோயிலின் முன் கனேடியத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.

    தமிழ்ச்செல்வன் என்பது
    விடுதலைப்புலிகளின்அரசியல் வடிவம்.
    அவரின் புன்னகை ஆளுமை மிக்கது.
    அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு பிறகு
    விடுதலைப்புலிகளின்
    சர்வதேச முகம் தமிழ்ச்செல்வனுடையது.
    விடுதலைப்புலிகளின் ஜனநாயக முகம் தமிழ்ச்செல்வனுடையது.
    விடுதலைப்புலிகளின் சமாதான முகம் தமிழ்ச்செல்வனுடையது.


    விடுதலைப்புலிகளை பயங்கரவாத தோற்றத்துடன்
    காட்ட வேண்டிய தேவை
    இலங்கை-இந்திய கூட்டுப் புலனாய்வு சக்திகளுக்கும்
    மற்றும் கூட நின்று விடுதலைப்புலிகளை அழித்த பல நாடுகளுக்கும் இருக்கிறது.

    அந்த வகையில் தமிழ்ச்செல்வனின்
    ஞாபக தினம்
    மாவீரர்தினத்தை காட்டிலும்
    வலிமையானது என எதிரிகள் நினைக்கிறார்கள்.
    அது ஒரு வகையில் உண்மையும் கூட.

    அது தான் நவம்பர் - 03 ன் முக்கியத்துவம்.
    அது தான் இளையராஜா நிகழ்ச்சியின் இரகசியம்.
    இதில் தெரிந்தோ..தெரியாமலோ...இளையராஜா
    பங்கேற்றுக் கொண்டிருக்கிறார். நடத்துகிற உரிமையாளர்களும்
    அதை நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    நாம்
    தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுதினத்தை
    மிகப்பிரமாண்ட அளவில் நினைவு கூரவேண்டிய
    அவசியத்தை இந்த நிகழ்வு எமக்கு கற்பிக்கிறது.

    தமிழ்ச்செல்வன்..
    தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச அரசியல் முகம்
    என்று மட்டும் சொல்லிக் கொள்ள முடியாது.
    அவர்
    தமிழர்களின் சர்வதேச அரசியல் முகம்.
    தமிழர்களின் சர்வதேச அரசியல் பலம்.

    நீதியுடன் வந்து கைகுலுக்கிய அந்த முகத்தை..
    அந்த வெள்ளைப் புன்னகையை...
    திட்டமிட்டு படுகொலை செய்ததை
    அவருடன் கைகுலுக்கிய எந்த உலகத் தலைவர்களின்
    மனங்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    அவரின் நினைவு நாளை
    மேலும் பிரமாண்டமாய் நினைவு கூர வேண்டிய தேவை
    உலகத் தமிழினத்திற்கு இருக்கிறது.

    தமிழ்ச்செல்வன்
    தமிழர்களின் வரலாற்றில் அசைக்கமுடியாத
    அரசியல் குறியீடு.

    அந்த நாளை
    இனிவரும் காலங்களில்
    நாம் மிகப்பெரிய அளவில் நினைவு கூரவேண்டியது மிகமிக அவசியம்.

    முற்றும்.

    தீபிகா.
    22-10-2012

    பதிலளிநீக்கு
  2. தமிழ் செல்வன் தேசந்தின் முகம் அன்ரன் பாலசிங்கம் தேசத்தின் குரல். இவர்கள் எல்லோரும் எமது மனதில் என்றும் நீங்காத ஒளிதீபங்கள் .....அவர்களின் நினைவு நாளில் தெரிந்தே இவ்வாறு களியாட்டம் செய்ய நினைத்த துரோகிகளின் குரல் வளையை அறுத்து எறிவோம்

    பதிலளிநீக்கு
  3. நவம்பர் மாதம் இலங்கை தமிழர்கள் யாரும் திரைப்படப் பாடல்கள் கேட்பதில்லையா?

    பதிலளிநீக்கு
  4. புலிகள் இருந்திருந்தால் இவருக்கும் துரோகிப் பட்டம் கொடுத்துக் கொன்றிருக்கலாம். தப்பித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  5. absolute rubbish and how many legal audio cassettes and cds you bought to support IR's music

    பதிலளிநீக்கு
  6. வெளிநாட்டிற்கு தமிழ் மக்கள் இடம் பெயர்ந்த பின்னர் தான் சினிமாதுறையினரின் வருமானம் கோடி கணக்கில் அதிகரித்தது என்பதினை யாராலும் மறுக்க முடியாது.அத்துடன் இளையராஜாவின் பாடல்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்து பாடல்களை ஒலிபரப்பு செய்ததில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பங்களிப்பை நீங்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் அறிந்திருப்பீர்கள்.விஜய் தொலைகாட்சி பதிவு

    பதிலளிநீக்கு
  7. துரோகி பட்டம் கொடுப்பார்களே தவிர கொன்று இருக்கலாம் என்ற உங்கள் சிந்தனை தவறானது. அப்படி என்றால் விடுதலை போராளிகள் கொலைகாரர்கள் என்றால் கண்ணோட்டத்தில் உங்கள் பார்வை செல்வதனை ஏற்று கொள்ள முடியாது.

    பதிலளிநீக்கு
  8. //கனேடியத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.///

    என்னது? கொண்டாடுகிறார்களா? இளையராஜா ஒரு பம்மாத்துக்காரன். ஆனால் ‘கொண்டாடுகிறார்கள்’ என்ற பதம் தவறானது.

    பதிலளிநீக்கு