செவ்வாய், 22 ஜூன், 2021

புலம்பெயர் தேசத்தில் ஒன்றுபட்டது தமிழினம்.



மார்ச் மாத மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லை என்று வாக்களித்த தென்னாசிய பிராந்திய நாடாக உள்ள பாகிஸ்தான் , பங்களாதேஷ் , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின்  தூதரகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துச்செல்ல  பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும், நாடுகடந்த அரசாங்கமும், உலக வரலாற்று மையமும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்த பேச்சுவார்த்தையில் ஈடுபபடுகின்றது என்ற நற்செய்தியானது புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமைக்கு வித்தாக அமைகின்றது.


ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இணைந்த பணித்திட்டத்தை மேற்கொண்ட இந்த அமைப்புகள் மீண்டுமொருமுறை இணைந்து செயற்படுகின்ற விடயமானது தமிழ்மக்களிடைய பெரியதொரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. 


விடுதலைப்போராட்டத்தின் அர்ப்பணிப்பில் உருவாகிய அமைப்புகள் எப்போதும் ஒற்றுமையாக காலத்தின் தேவை கருதி செயற்படுவார்கள் என்பதையே குறித்த இந்த செயற்பாடானது எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.


குறித்த இந்த போராடத்திற்கு உலகம் தழுவிய தமிழ்மக்கள் சார்ந்த அமைப்புகள் அனைத்தும் ஆதரவை வழங்குமென தமிழ்மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள். 


முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது ஒன்றுபட்ட தமிழர்கள் மீண்டுமொருமுறை  ஒன்றாக இணைந்து தமது ஒற்றுமையை,தமிழினத்தின் எழுச்சியை  உலகிற்கு எடுத்துக்காட்டுவார்கள் என்றே அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.



வெள்ளி, 19 மார்ச், 2021

#உலக_தமிழ்மக்களின்_விடிவை_தமிழீழத்தை #பெற்றுக்கொள்ள_விரும்பும்_ஒவ்வொரு_தமிழனும் #வாசிக்கவேண்டிய_விடயங்கள்




*இலங்கைத்தமிழர்கள் நீங்கள் யாவரும் அறிந்திருக்கவேண்டிய விழிப்புணர்வுகள்...
*இலங்கைத்தமிழர்கள் சார்ந்து குரல்கொடுக்கின்ற உலகத்தமிழர்கள் அறிந்திருக்கவேண்டிய சிறிய விளக்கங்கள்
* எனக்கு விடுதலைப்புலிகளின் கொள்கையும் அந்தக் கட்டமைப்பின் ஒழுக்க நெறிகளும் ஆழமாக பிடிக்கும்
*நான் வளரும் காலத்தில் விடுதலைப்புலிகள் கட்டமைப்பின் பெயரையே நாம் ஆழமாக கேட்டு வளர்ந்திருந்தேன் .
*நான் புலம்பெயர் தேசத்தில் நாம் வாழ்ந்திருந்தாலும் மாபெரும் சக்தியாகஇருந்த விடுதலைப்புலிகள் கட்டமைப்பு எவ்வாறு மௌனமானது என்ற தேடலை நான் 2009 ஆம் ஆண்டில் இருந்து நுணுக்கமாக தேடிக்கொண்டு இருந்தேன்
*அப்போது தான் விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்திக்கொண்டு அந்த அமைப்பை சிதைக்கவேண்டும் என்று பணியாற்றிய
*சுயநல மனிதர்களையும்,அவர்களின் சொத்து தகராறுகளையும், குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகளை தமிழினத்தின் விடுதலைப்போராளிகள் அமைப்புக்குள் கொண்டுசென்று அந்த கட்டமைப்பின் புனிதத்தை கெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட அசிங்கமான மனிதப் பக்கங்களையும்
*தன்னிருப்புவாத செயற்பாட்டிற்காக தமிழின துரோக செயற்பாடுகளையும் மேற்கொண்ட விடயங்களையும்
*விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு அழியவேண்டும் எனறு அகத்தில் எண்ணிக்கொண்டு பொதுவெளியில் தம்மை தேசியவாதிகளாக காட்டிய நபர்களையும்
*விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்குள் நாசுக்காக தம்மை இணைத்த சிங்கள அரசின் கைக்கூலிகளையும்
*ஆரம்ப காலங்களில் மாற்றியக்கங்களில் இருந்து பின்னர் விடுதலைப்புலிகளின் மீது வெறுப்புக்கொண்டு தப்பியோடி புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துகொண்டு,
விடுதலைப்புலிகள் கோலோஞ்சிய காலத்தில் இலங்கையின் வடக்கு ,கிழக்கு பிரதேசங்களில் தாம் வியாபார நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென்றால் விடுதலைப்புலிகளின் தயவு தேவை என்பதற்காக விடுதலைப்புலிகளின் அமைப்புக்குள் உள்நுழைந்த நபர்களும் அவர்களின் நீறுபூத்த நெருப்பாக விடுதலைப்புலிகளின் மீது இருந்த காழ்புணர்ச்சியையும்
*விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு சர்வதேச ரீதியாக பரிணாமவளர்ச்சி அடைந்தபோது அந்த அமைப்பின் வளர்ச்சிக்கேற்ப அறிவியலில் சிறந்து விளங்கிய நபர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு உள்வாங்க தவறியிருந்த நடவடிக்கையையும்
கடந்த காலங்களில் மேற்கொண்ட நீண்ட ஆய்வுகளால் என்னால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.
*2009 பின்னர்*
*விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின்னர்*
* ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்குள் இருந்த தமிழின துரோகச்செயற்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்த நிலையில் தமிழினத்திற்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உயர்ந்து சென்றது.
*2009 பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பில் இருந்து புலம்பெயர்ந்து வந்த நபர்களுக்கு*
சர்வதேசத்தில் என்னவிதமான செயற்பாடுகள் இடம்பெற்றது என்ற தெளிவும் அறிவியலும் இருக்கவில்லை.அதுமட்டுமன்றி
ஏன் சர்வதேசத்தில் அந்ததந்த நாடுகளில் எவ்வாறு வாழவேண்டும் என்ற அடிப்படை அறிவை பெற்றுக்கொள்ளாத நபர்களாக,அந்தந்த நாட்டு மொழியே புரிந்துகொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் இருந்தார்கள்.
மேலும் கடந்த நீண்ட காலமாக தமிழினப்போராட் டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து வலுவிழந்தவர்களாக, தமிழ்சமூகத்துடன் தம்மை இணைத்து வாழவேண்டியவர்களான சாதாரண வாழ்வியலை கொண்டு நடத்தவே பாரிய சிக்கல்களை கொண்ட நபர்களாக புலம்பெயர் தேசத்தில் குடியேறினார்கள்.
*அதேபோன்று புலம்பெயர் தேசத்திற்கு வரமுடியாத விடுதலைப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த சிலர் இலங்கையில் இருந்துகொண்டு சிங்கள அரசின் கைக்கூலிகளாகவும், புலம்பெயர் தேசத்தில் உள்ள ஏற்கனவே திருடர்களாக விடுதலைப்புலிகளின் அழிவிற்கு காரணமான நபர்களுடன் கரம்கோர்த்து தம்மை இலங்கையில் உள்ள சமூக சூழலில் பின்னிபிணைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையிலும் தள்ளப்பட்டார்கள்*
அதுமட்டுமன்றி
2009 ஆம் ஆண்டின் போரின் இறுதியில் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்புக்குள் தனிமனித ஒழுக்கமாக வாழ்ந்த சமூகத்தை திறந்தவெளி சிறைக்கைதிகளாக அடைக்கப்பட்ட நிலையில்
தன்னின மனித விலங்கியல் செயற்பாட்டின் அம்சங்களை இலகுவாக பலரும் கற்றுக்கொண்டார்கள்.
இத்தகைய மனிதவிலங்கியலை கற்றுக்கொண்ட மனிதர்களை உளவியல் ரீதியாக குணப்படுத்த மிகவும் சிறப்பான உளவியல் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்தில் இருந்த சமூக அமைப்புகளோ, புலம்பெயர்வாழ் தமிழ்சமூகமே, தமிழின விடிவிற்காக தம்மை அர்பணித்ததாக கூறிய புலம்பெயர் தமிழின கொள்ளையர்களோ முன்வரவில்லை. இதனால் இலங்கையில் வாழுகின்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருபகுதி மக்கள் கூட்டமானது
அருவருக்கத்தக்க சமூக, ஒழுக்க சீர்கேட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதை தவறென்று உணரவேயில்லை.
மேலும்
*2009 விடுதலைப்புலிகள் கட்டமைப்பின் அழிவிற்கு காரணமாக இலங்கையில் இருந்த விடுதலைபுலிகள் அமைப்பின் பெயருடன் உலாவிய சிங்கள அரசின் முகவர்களும் விடுதலைப்புலிகளின் பெயரை கூறிக்கொண்டு உண்மையான விடுதலைப்புலிகளின் பெயருடன் புலம்பெயர் தேசத்திற்கு இடம்பெயர்ந்து வந்ததுடன்
*விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட அனைத்துவிதமான கட்டமைப்புகளுக்குள்ளும் இலாவகமாக தம்மை இணைத்துக் கொண்டார்கள்.
*புலம்பெயர்தேசத்தில் 2009 முன்னரே விடுதலைப்புலிகளின் அமைப்புக்களுக்குள் உள்நுழைந்த சிங்கள அரசின் செயற்பாட்டினை முன்னெடுத்து செல்லும் நபர்களும், எமது அண்டை நாடான இந்தியாவின் விருப்பிற்குகாக தமது முதுகை முழுவதுமாக வளைந்து கொடுக்க தயாரான நபர்களும்,
*விடுதலைப்புலிகளின் பெயரால் தமிழ்மக்களால் முன்னெடுத்து செல்லப்படும் ஒவ்வொரு நடவடிக்கையையும் இலாவகமாக திசைதிருப்பி கடந்த 12 வருடமாக தமிழ்மக்களுக்கு இலகுவாக கிடைக்கவேண்டிய நீதியை,தமிழினத்தின் இனவழிப்பிற்கான இலங்கைக்கு கிடைத்திருக்கக்கூடிய தண்டனையை கிடைக்கவிடாமல் தடை செய்திருந்தார்கள்.
*குறித்த இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே 2009 க்கும் 2013 ற்கும் இடையில் நிகழ்ந்த தமிழர்களின் நீதிக்கான பயணங்கள்அந்தப் பயணத்திற்கான இலக்கை அடையவிடாமல் திசைதிருப்பட்டு அதன் பயனாக நல்லாட்சி அரசை நிறுவி ஈழத்தமிழர்களின் வாழ்வியல் நிலத்தை இலங்கையில் குறுக்கலடைய செய்த நடவடிக்கையை நாம் அடையாளம் காணமுடியும்.
அதுமட்டுமன்றி
*தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்ற அமைப்பில் இருந்த தம்மை தேசியவாதிகளாக அடையாளப்படுத்திய பொன்னரின் பேரனும் அவரது சகாக்களும் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து விலகி சுமந்திரன் என்கின்ற சிங்கள அரசின் விசுவாசிக்கு இடமளித்து தமிழ்தேசியக்கூட்டமைப்பில் தமக்கு பாராளுமன்ற கதிரை இருந்தால் போதும் என்ற மனநிலையில் வாழ்ந்த மற்றைய தமிழரசியல்வாதிகளின் நிலைப்பாட்டினால், தமிழரசியல்வாதிகளின் அரச அறிவியலில் சிறப்புத்தேர்ச்சி பெற்றிராத இலங்கைத்தமிழ் அரசியல்தலைவர்களால் இலங்கைத்தமிழினம் மிகப்பெரிய சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டது.
*2009 ஆம் ஆண்டின் முன்னரே இருந்து புலம்பெயர் தேசங்களில் இருந்து கொள்ளையடித்த கூட்டம் தமிழரசியல்கட்சிகளுக்குள் உள்நுழைந்து தம்மை தீவிர தமிழின விசுவாசிகளாக காட்டிக்கொண்டு குழுவாத செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் தமக்கு தேவையான இடத்தை குறித்த ஒவ்வொரு தமிழரசியல் கட்சிக்குள்ளும் முன்னிறுத்த தவறவில்லை.
*இதனால் உண்மையான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை தமிழின துரோகியாக சித்தரித்து தமிழினத்தின் விடியலுக்கான அரசியலை தமிழினம் மேற்கொள்ள விடாமல் தடைகளை இட்டு தமிழரசியல்வாதிகளை முற்றுகையிட்டு வந்தார்கள்.
*இவ்வளவு செயற்பாடுகளும் தமிழர்களின் அரசியல் /சமூக பண்பாட்டு/வரலாற்று பாதையில் நிகழ்ந்தபோதும்
இந்த உலகமே எதிர்பாராத கொரோனாவும் அந்த கொரோனவால் தமிழ்மக்கள் தமது இனம்சார்ந்து தீவிரமான சிந்திக்க அதிகளவான நேரங்கள் இருந்த சூழ்நிலையில் தொழிநுட் பத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியும் கடந்த காலங்களில் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் அடையாளம் காட்டக்கூடிய விழிப்புணர்வுகளை தமிழ்மீதும் தமிழினத்தின் மீதும் தமிழ்மக்களின் மீதும் தமிழ்த்தேசியத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த சமூகம் வெளிப்பட்டது.
அத்தகைய நடவடிக்கைகளையும் முடக்கும் நோக்குடனும், அரச அறிவியலில் ஆதாரபூர்வமான தரவுகளுடன் எழுதும் எழுத்தாளர்களையும் கருத்துருவாக்கிகளையும்
இன்றைய காலத்தில் அதிகளவாக தமிழினத்திற்கு எதிரியாக உள்ள அல்லது விடுதலைப்புலிகளின் கட்டமைப்பில் காழ்ப்புணர்ச்சியை கொண்டுள்ள நபர்கள் முடக்க முனைவதையும் என்னால் இங்கே உற்று நோக்க கூடியதாக உள்ளது.
தமிழ்மக்களிடையே உள்ள
*சோம்பேறித்தனம்*
*சுயநலவாதம்*
*அறிவியலை தேடவேண்டும் என்கின்ற அடிப்படை பண்பற்ற செயற்பாடு *
*ஒருதுறை சார்ந்து கற்றுக்கொண்டு தமது குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொண்டால் போதுமென்கின்ற மனநிலையும்*
*குறித்த துறைசார்ந்த வல்லுனர்களை அறிஞர்களாக நோக்குகின்ற அறிவியல்வளர்ச்சி பெறாத சமூகமாக உள்ள எம் தமிழினத்தின் சமூக பண்பாடும்*
*தமிழினத்தின் தொடர்ச்சியான தோல்வியாக உள்ளதை என்னால் ஆழமாக உணரக்கூடியதாக உள்ளது .
ஆகவே
பாசத்திற்குரிய தமிழ்மக்களே!
நாம் எமது இனத்தின் மீதும் எம் மக்களின் மீதும் எமது நிலத்தின் மீதும் தீராத பற்றுக் கொண்டவர்களாக, அரச அறிவியலில் தேர்ச்சி பெற்றவர்களாக ஒவ்வொரு செயற்பாட்டினதும் எதிர்வினை எவ்வாறு அமையும் என்கின்ற எதிர்கால தமிழ்சமூகத்தின் நலனை கவனத்தில் கொண்டவர்களாக வாழவேண்டும்.அவ்வாறு நாம் தீர்க்கமாக ஆராய்வுகளை மேற்கொண்டு இனிவரும் காலத்தை நகர்த்தி சென்றால் மட்டுமே எம்மால் தமிழர்களுக்கான ஒரு விடிவினை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழர்களின் தாகம் ............தாயகம்
நன்றி
காவியா
19/03/21
லண்டன்
08.43

புதன், 8 ஜூலை, 2020

அம்பாறை மாவட்டம்

சந்திரகாந்தன் அண்ணன்(மாமனிதர் சந்திர நேருவின் மகன்) அம்பாறை மாவட்டம்
யாருக்கும் அறை போட்டு இருந்தால் சரியான காரணம் இருக்கும்///
சொல்லி வையுங்கள்
''புலிகள் வாழ்ந்த காட்டில் சிங்கத்திற்கு இடமில்லை'' என்று....
''அம்பாறையை எந்த கொம்பனும் கொண்டு போக முடியாது'' தமிழீழ வரைபடத்தில் கதிர்காமம் வரை நீண்டிருந்த எமது நிலத்தை இழந்தோம்.அதேபோல சிலாபம் வரையில் நீண்டிருந்த எமது நிலத்தை இழந்தோம்.இவ்வளவு இழப்பின் பின்னரும் இனிமேல் அம்பாறையை தாரைவார்த்து கொடுக்க மாட்டோம்.
பிரதேசவாதம் பேசிக்கொண்டு வீண்கனவு காணும் வீணர்களுக்கு சொல்லிவையுங்கள் .காலம் நிச்சயம் தன் தீர்ப்பினை சரியாகவே எழுதும் என்று ,,,
உடமையை இழந்தோம்
உயிரையும் இழந்தோம்
உணர்வை இழக்க மாட்டோம்
போரிலே வெல்லலாம்
நாளை நாம் சாகலாம்
எம் உரிமையை காத்திடுவோம்
எழுத்தாணி கொண்டுமே
எம் கனவை வெல்லவே
கண் உறங்காமல் எழுதி முடிப்போம்
எம் சிந்தனை ஒன்றென
எம் நாயகர் கனவது
வென்றே நாம் தீருவோம்

காவியா
16.17
05/07/20
லண்டன் ,,,
No photo description available.

Hansard Srilanka

04/07/14 றிற்கும் வெளிவந்த ஹன்சாட் இற்கும் 05/02/19 அன்று வெளிவந்த ஹன்சாட் இற்கும் எத்தனை மாற்றம் ?? தமிழர்களே நீங்கள் உண்மையில் யாருக்கு சேவகம் செய்கின்றீர்கள்?
புலம்பெயர் அமைப்புகளே நீங்கள் யாருக்காக பணிபுரிகின்றீர்கள்
பிரித்தானியாவில் இருந்துகொண்டு வலதுசாரிக்கு வெள்ளையடிக்கும் அனைத்து தமிழ் வெள்ளைக்காரர்களுக்கு இந்த ஹன்சாட் இலவசம் ..எம் மக்களை ஏமாற்றி பிழைக்கும் உங்களை போன்றவர்களை என்ன செய்வது??
உண்மையை சொல்லக்கூட வக்கில்லாமல் வெள்ளையடித்து ?//
சுமந்திரனுக்கு வால்பிடிக்கும் வல்லூறுகள் இவர்கள் ..
எதற்காக வலதுசாரிக்கு வெள்ளை அடிக்கின்றோம் என்று தெரியாமலே வாழும் இந்த ஜென்மங்கள் முதலில் ஈழத்தின் அரசியலையும் வரலாறையும் படித்துவிட்டு வெள்ளை கோட் சூட் போட்டு ஆங்கிலத்தில் கதைக்குமாறும் நீல டை கட்டுமாறும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன் ..
புலத்தில் இருந்து பணியாற்றும் தமிழர்களே..
காலம் உங்களுக்கு தீர்ப்பளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
காவியா
05/07/20
21.18
லண்டன்