வெள்ளி, 19 அக்டோபர், 2012

வைகோ, சீமான் இருவரில் சிறந்தவர் யார் ஒரு அலசல்


கடந்த சில வாரங்களாக நமது மக்களிடையே நிலவும் ஒரு கருத்து என்னவென்றால் ஏன் சீமான் திருமாவளவன், வை.கோ போன்றோருடன் இணைந்து செயல்படவில்லை என்பது தான். சீமான் யாருடன் இணைந்து தனது அரசியலை கொண்டு நடத்த போகின்றார் என்பது அவரது சொந்த விடயம்.

சீமான் ஆரம்பத்தில் இருந்தே தனியாக போராட வேண்டும் என்ற கொள்கை உடையவர். அதன் வழி நடந்து வருகின்றார். ஆனால் எம்மை பொறுத்தவரை இந்தியாவில் வாழும் எந்த ஒரு தமிழ் தலைவர்களும் எமது ஈழ தேசத்திற்காக உயிரை விட போவதில்லை.அத்துடன்  தமது சொந்த நலன்களை இழக்கப்போவதில்லை. உண்மைத் தொண்டனாக இருக்கும் கட்சி நலன் விரும்பிகளும், அடிமைத் தொண்டனுமே எமது உறவுகளுக்காக உயிரை கொடுப்பதும் தீ குளிப்பதும் நடந்து கொண்டு இருக்கும்.

இதில் வை கோ  பற்றி நாம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள கூடியவர்களாக இருக்க வேண்டும். எந்த ஒரு இந்திய தமிழ் தலைவர்களால் எமக்கு ஈழம் கிடைத்துவிட போவதில்லை என்றாலும் அரசியல் ரீதியாக சில தலைவர்களின் உதவி எமக்கு தேவை. அந்த வரிசையில் எமது சுதந்திர போராட்டத்தை ஓரளவு புரிந்த தன்மை கொண்டவர்களாக வை.கோ வையும் சீமானையும் இன்னும் பழநெடுமாறன் ஆகியவர்களையும்  நோக்க முடியும். ஆனாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் ரீதியான பின்னடைவுகளும் வை கோ வின் அரசியல் கட்சி மாற்றங்களும் எமக்கு ஓர் வைக்கோ மீதான ஒரு நம்பிக்கையை தளர்த்தி இருப்பது உண்மையான விடயம். ஆனாலும் வை கோவை ஈழ நலன்களில் அக்கறை இல்லாதவர் என்றோ இல்லை ஈழத்துக்காக பாடு படாதவர் என்றோ கூறிவிட முடியாது.இன்றைய காலகட்டத்தில் வை கோவின் ஆதரவு எமது ஈழ போராட்டத்திற்கு தேவை என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனாலும் எமது ஈழ போராட்டத்தை வைத்து தமக்கு அரசியல் இலாபம் தேடாத எந்த ஒரு தமிழ் தலைவர்களும் இல்லை என்பதினையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

இப்போதுள்ள காலகட்டத்தில் அடுத்து எமது நினைவில் வரும் இந்திய தமிழ் தலைவர் சீமான். உணர்ச்சி மிக்க பேச்சாற்றலும் சினிமா பாணியிலான வசன அமைப்புக்களுமே இவரது வெற்றியின் முக்கிய அம்சமாக கூற முடியும். ஆனாலும்  இவர் பக்கம் இப்போதுள்ள இளம் தலைமுறை நிற்பதும் அரசியல் ரீதியான ஒரு படி வெற்றி என்று சொல்ல முடியுமே தவிர இவர்கள் மட்டுமே எமது ஈழ விடிவின் அச்சாணிகள் என்று கூறி விட முடியாது. ஆனாலும் இவர்களின் வீராவேச பேச்சு எமது அரசியல் ரீதியான காய் நகர்த்தலுக்கு தேவை என்பதினை ஏற்று கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

அது போக எமது தமிழ் தலைவர்கள் திருமா,பழநெடுமாறன், தமிழருவி, வேல்முருகன்,ராமதாஸ் என எல்லோரையும் அரவணைக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதே உண்மையான நிலைபாடாகும்.
ஆகவே எமது அரசியல் செயற்பாடுகளுக்கு எல்லா தமிழ் தலைவர்களும் தேவை என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம். அது தவிர நாம் எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவர்களையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்கப்போவதில்லை. எனவே தமிழ் ஊடகங்கள் ஒரு தலைவருக்கு சார்பாகவும் இன்னொரு தமிழ் தலைவருக்கு எதிராகவும் எழுதுவதனை நிறுத்தி கொள்ளுங்கள். எமது போராட்டத்தில் உண்மையான அக்கறையான ஊடகங்களாக இருந்தால் நடுவு நிலையான கருத்துக்களையும்  தூர நோக்கிலான சிந்தனையுள்ள ஆக்கங்களையும் வெளியிடுங்கள். அன்றைய பொழுதில் உமது செய்தி பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விடுதலை போராட்டத்தின் மீதும் ஒருலட்சம் மக்களின் உயிர்களின் மீதும் நாற்பத்தி ஐந்து ஆயிரம் மாவீரர்களின் கனவின் மீதும் ஏறி நின்று பிரபலமாக நினைக்காதீர்கள்.

இறுதியாக எமது போராட்டம் இன்னும் ஆக்ரோஷமாகவும் முழுவதுமான வீரித்துடனும் மீண்டும் தோற்றம் பெறும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.ஆனால் அந்த விடுதலை தோற்றமானது எமது உண்மையான விடுதலைவேட்கையிலும் தாகத்திலும் தான் தங்கியுள்ளது.

மதிப்புக்குரிய இளம் சமுதாயமே எமது நாட்டுக்காகவும் எமது விடுதலைக்காகவும் நாம் போராட வேண்டும். எமது தலைவன் காட்டிய வழி எமக்கு தெரியும். அந்த பாதையை நாம் கடந்து முடிக்க வேண்டிய தேவையில் உள்ளோம்.ஆகவே எமது போராட்டத்தை வென்று எடுக்க இப்போதே கைகொடுப்போம் .
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

8 கருத்துகள்:

  1. You are totally wrong. Ramadoss, Karunanidhi, Thirumavalavan are the traitors. Think what they done at the time of massacre at Srilanka and the assasination of Prabhakaran. But Nedumaran, Vaiko and Seeman are not as such. Though they are not co-ordinated together, they all fighting for the cause of Tamils. They are not for power at any time. Think Nedumaran's and Vaiko's political career. Are they? Dont compare them with traitors......Venmani, Mayiladuturai.

    பதிலளிநீக்கு
  2. அண்ணா நீங்கள் எமது கருத்தை முழுமையாக உள்வாங்கவில்லை என்று நினைக்கின்றேன். யாரையும் நாம் நல்லவர்கள் என்று குறிப்பிடவில்லை.

    பதிலளிநீக்கு
  3. வைகோவின் பங்களிப்பில் பத்து சதம் பெறுமானமுள்ள சீமான், இளம் தலைமுறையினரிடம் பல தவறான கருத்துகளை பதிகிறார் !. திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில் வைகோவை புறந்தள்ள முயற்சிக்கின்றார் !. பெரியார் போன்றவர்களின் பங்களிப்பை குற்றம் சொல்லும் இவரின் தமிழ் தேசியம், வைகோவால் எழுப்பப்பட்டபோது அவரின் அறிவு இந்த உலகத்தை உணரும்நிலையில்கூட இருந்திருக்காது !. தன்னை முன்னிலைபடுத்திக்கொள்ள, பிறரை அதுவும் முழுதகுதியுள்ள நபர்களை இன,மொழி பிரிவை பேசி களங்கப்படுத்துவது நிச்சயம் நல்ல தமிழனின் செயலல்ல !. ஜாதியின் காரணமாக அவர் தெலுங்கர் என்றாலும் , அவரின் தமிழ் பற்றும்,தியாகங்களும் இந்த சின்னப்பையன் சீமானுக்கு உண்டா?. முறுக்கேறும் பேச்சும்,கண்சிவக்க கத்துவதாலும் ஒன்றும் சாதிக்க இயலாது !. சாஞ்சி சென்று போராடும் மன உறுதியும் ,ஈழத்தமிழர்களின் பிரச்னைகளை லாவகமாக கொண்டு செல்லும் விதமும் அடுத்த ஆறு ஜென்மங்களுக்கும் சீமானுக்கு வராது !. நீங்கள் யாரையும் தூக்கி பிடிக்க வேண்டாம் !. உங்களுக்காக எந்த தமிழகத்தலைவரும் சாகவும் வேண்டாம் !.(ஒருவேளை செத்துவிடுபவர்கள்தான் சரியானவர்கள் என்றால் - நீங்களும் அதில் சேரவேண்டுமே ... என்னவிதமான கருத்து உங்களுடையது???).இருந்து போராடி, இன்றும் நீதிமன்றங்களின் பார்வையில் மதிப்புக்குரியவராகவும், அரசுகளின் பார்வையில் புலிகளின் அதிரடி ஆதரவாளராகவும் தன அரசியல் வாழ்க்கையையும் பலியாக்கி ,ஒரு நெஞ்சுரமிக்க நேர்மையான மனிதனாக உங்களுக்காக போராடி வருகிறார் !. ஆகவே, வைகோவை யாருடனும் ஒப்பிடாதீர்கள் !. நான் ஒருகாலத்தில் வைகோவை வசை பாடியவர்களை கவனித்தேன் !. அது 1990 ! ஆனால் அதே நபர்கள் இன்று அவரின் மனதிடம்,வெளிப்படையான செயல்களால் கவரப்பட்டு புலிகளை எதிர்த்த தங்களின் நிலைப்பாட்டையும் மாற்றிக்கொண்டுள்ளார்கள் !. தயவு செய்து எவரையும் வைகோவுடன் ஒப்பிடாதீர்கள் !. யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள் !. காலம் அனைத்தையும் ஒப்பீடு செய்து தன் தீர்ப்பை வழங்கும் !.யாருமே நல்ல நீதிபதியாக இருக்க முடியாது !.

    பதிலளிநீக்கு
  4. மன்னிக்கவும் நான் எல்லா விசயத்தையும் இங்கே எழுதுவது நாகரீகமாக படவில்லை தயவுசெய்து என் தொலைபேசி இணைப்பிற்கு வாருங்கள் வந்து என்னோடு பேசிவிட்டு பிறகு சீமானை புகழுங்கள் அண்ணா தனியே கை தட்டினால் யாருக்கும் கேட்காது இப்போது எம் இனம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது எம் தமிழ்மொழி புதைகுழியில் அருகில் அமர்ந்து வாழ்வா சாவா என உள்ளது இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் அடுத்து இந்த தமிழினம் தழைக்க நாம் இணைந்து என்ன பணி ஆற்றவேண்டும் என்ற எண்ணம் துளிகூட நாம் தமிழர் கட்சியில் இல்லை என்பது உண்மையிலும் உண்மை அத்துடன் வைகோ ஒரு பாதையிலும் அரசியலி பங்கெடுக்காத கொளத்தூர் மணி மற்றொரு பாதையில் பழ, நெடுமாறன் ஒரு பாதையில் தெளிந்த சிந்தனை உடைய தமிழருவி மணியன் பேச்சை யாரும் கேட்காத ஒரு நிலையில் இருந்துகொண்டு எப்படி நாம் நம் இனத்திற்கான இலக்கை அடைய முடியும்

    முதலில் தயவுசெய்து சீமான் அவர்களை புகழந்து பாடுவதற்கு பதிலாக என்னை போன்ற நாம் தமீிழர் இயக்கத்தினரால் பாதிப்படைந்த பல இளைஞர்களின் மனதில் என்ன உள்ளது என்பதை தெளிந்துகொண்டு பிறகு புகழுங்கள் அண்ணா ஏன் எனில் நான் பிறரை பற்றி இங்கே குறையாக எழுதினால் அது எம் இன எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் அண்ணா

    நன்றி

    சிகா,
    9047357920
    http://kenakkirukkan.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /////////முதலில் தயவுசெய்து சீமான் அவர்களை புகழந்து பாடுவதற்கு பதிலாக என்னை போன்ற நாம் தமீிழர் இயக்கத்தினரால் பாதிப்படைந்த பல இளைஞர்களின் மனதில் என்ன உள்ளது////////// பல இளைஞர்கள் என்று பதிவு இருக்கிறது, என்ன என்று சொல்லுங்கள், நாங்களும் தெரிய வேண்டும், சொல்லுங்கள் தயவு செய்து????

      நீக்கு
  5. விடுதலைப்புலிகளிடம் பிச்சை வாங்கி தேச துரோகம் செய்வதில் என்ன சிறந்தவர் தாழ்ந்தவர்..?

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்
    எமது ஆக்கங்கள் என்ன சொல்கின்றன என்பதினை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோரின் உள்ள கிடக்கைகைளையும் நன்றாக அறிவோம். யாம் யாரையும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று குறிப்பிடவில்லை. நீங்கள் எமது பதிவை வாசிக்கும் போது எந்த ஒரு மனநிலையில் இருந்து வாசிக்கிண்றீர்களோ அந்த எண்ணபாடுதான் உங்களுக்கு புரியும்.எனவே ஒரு பதிவை வாசிக்கும் போது ஒரு சமமான சிந்தனையுடனும் தெளிவான மனநிலையுடனும் வாசியுங்கள்

    பதிலளிநீக்கு
  7. "விடுதலைப்புலிகளிடம் பிச்சை வாங்கி தேச துரோகம் செய்வதில் என்ன சிறந்தவர் தாழ்ந்தவர்..?"
    வைகோ-வை கரித்துக் கொட்டும் மர்மயோகியே, நீ யார்?
    சிங்களனா? அதிமுக - திமுக அடிவருடியா?
    இல்லை ஜாதி மத வெறியனா?
    இல்லை தமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தை சார்ந்தவனா?

    பதிலளிநீக்கு