வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

தந்தை பெரியாரின் வரலாற்று தவறு


கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?


கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?

- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970 ) இது Kr  Vijayan பதிவு.

தந்தை  பெரியார் ஒரு வரலாறு ஒரு நூல் ஒரு சிந்தனை அந்த கருத்தில் எனக்கு ஒரு மாற்று சிந்தனையும் இல்லை . ஆனால் பெரியாரின் சில கருத்துக்களில் நாம் முரண்பட வேண்டி உள்ளது.
கடவுள் இல்லை என்று அவர் நினைப்பது அவரின் நம்பிக்கை ஆனால் அதனை மற்றவரிடமும் செலுத்த முற்பட்டது மிகவும் தவறாக நான் பார்க்கின்றேன்

உலக திருமறை திருக்குறள். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏன் மேலைத்தேய மக்களுக்கே இந்த விடையம் தெரிந்ததால் தான் ரஷ்யாவில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளையும் பகவத் கீதையையும் பத்திரப்படுத்தி உள்ளான்.

அதில் வரும் முதல்  அதிகாரமே "கடவுள் வாழ்த்து" என்று தான் வருகின்றது. சரி இப்போது கடவுள் இல்லை என்று சொல்லும் மக்கள் கூட்டம் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் எப்படி தோற்றம் பெற்றீர்கள். 

பிறப்பு சாவு தோற்றம் அழிவு எதற்கு தேவை ? என்ன சின்னபிள்ளைதனமாக இருக்கின்றது. இந்த மாற்றம் மனிதனுக்கு மட்டும் இல்லை உலகில் உள்ள எந்தவொரு (உயர்திணை அகுறிணை) 
எல்லாவற்றிற்கும் பொருந்தும். 

காலத்தின் மாற்றத்தால் உருவான விஞ்ஞான வளர்ச்சி இதற்கு சாட்சி.....மனிதனின் அழிவு தேவையானது ஒன்று. மனிதன் அழிந்து புது மனிதன் தோற்றம் பெறாவிட்டால்  உலக இயக்கம் என்னாவது ?

கடவுளை வணங்கும் மனிதன் ஏன் கவலையுடனேயே காணப்படுகின்றான் என்றால் கடவுளை வணங்காத மனிதன் கவலை இல்லாமல்  வாழ்கின்றானா? இல்லவே இல்லை.

 கவலை என்ற உணர்வு எல்லோருக்கும் பொதுவானது. எந்த ஒரு விடையத்தையும் ஆழமாக சிந்துக்க தெரியாத மனிதனுக்கும், தம்மை தாமே யார் என்று புரிந்து கொள்ளாத மனிதனுக்கும், இல்வாழ்க்கையின் இன்பம் மட்டுமே பெரிது என்று எண்ணுபவனுக்கும் தனக்கு மட்டுமே எல்லாம் சொந்தம் என்றும் நினைப்பவனுக்கும் கவலை என்ற உணர்வின் பிடி ஆழமாக இருக்கும். இதில் இருந்து யாருமே தப்ப முடியாது .....

முடிவாக கடவுள் என்ற ஒரு வார்த்தையின் அர்த்தத்தை தேட நினைப்பது பூமிக்கடியில் அமைதியாக இறுக்க பாறையின் நடுவே உறங்கி கொண்டு இருக்கும் எரிமலையை கையால் தட்டி எழுப்ப முற்படுவது போன்றது. என்னை பொறுத்தவரை மனிதனுக்கு மேலான சக்தி அணு பொறி இயக்கம் எதுவாக சொன்னாலும் அதை கடவுள் என்பேன்.

ஆனால் கடவுள் இல்லை என்ற பெரியார் அதற்கு பதிலாக கடவுளின் பெயரால் மனிதன் செய்யும் அநியாயத்திற்கு எதிராக சங்கம் அமைத்திருந்தால் முதலாவது ஆளாக அந்த இயக்கத்தில் இருந்திருப்பேன்.அவர் காலத்தில் வாழ்ந்திருந்தால் ......

அன்புடன் நிலாகவி 

20 கருத்துகள்:

  1. கடவுள் இல்லை என்ற பெரியார் அதற்கு பதிலாக கடவுளின் பெயரால் மனிதன் செய்யும் அநியாயத்திற்கு எதிராக சங்கம் அமைத்திருந்தால் முதலாவது ஆளாக அந்த இயக்கத்தில் இருந்திருப்பேன்.அவர் காலத்தில் வாழ்ந்திருந்தால் ......
    -----யதார்த்தமான உண்மை தோழி....வாழ்த்துகளுடன் உங்கள் செந்தில்...........

    பதிலளிநீக்கு
  2. periyar karuthukalai innum neenga purinthukolla villai.. Periyar karthukalai nandraga padikavum.

    Neengalum nanum ivvaru kalvin paindru ippadi eluthuvathurku karaname periyar than..

    marupadiyum padiyungal, periyar sonnatharkaga nammbavendam, neengale thaniyaga sinthanai pannugal.

    vanakam
    vadivel

    பதிலளிநீக்கு
  3. பெரியாரின் நோக்கமும் அதுதானே...
    கடவுள் இருப்பது உண்மை என்றால்
    மனிதரில் உயர்ந்தவன் தாழ்ந்தவன்
    என்பது எதற்கு....?
    கடவுள் சிலையை திருடும்போது
    தடுக்கமுடியாதது ஏன்....?
    கடவுள் பெயரால் ஏமாற்றும் கயவர்
    தண்டனை பெறாதது ஏன்.....?
    இதையெல்லாம் பெரியார் கேட்டது
    இளம் வயதில் அவர்
    சந்நியாசம் போய் பெற்ற
    கசப்பான அனுபவங்களுக்குப் பிறகுதானே.......

    பதிலளிநீக்கு
  4. meendum meendum muttalagave vaale murpadugirirgale...unggalukku evalavu sonnalum puriyathu..enendral neengal tanakkene oru ellayai amathu kondu sinthikum aal..ungal virupam pol vaalungal..

    பதிலளிநீக்கு
  5. சரி கடவுள் இருக்கிறார்...என்றால் எத்தனை கடவுள்...உன், என், அவன் கடவுள்கள் எத்தனை பேர் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது....சரி இத்தனை பேர் வணங்கும் கடவுள் இருந்தால் முன்னே வர வேண்டியது தானே...இந்த ஆராய்ச்சியே தேவை இருக்காதே...சரி இப்படி இருக்கும் கடவுள் இல்லாமல் போனால் என்ன ஆகும்...ஏற்றதாழ்வுகள் இல்லாமல் போகும்.....கடவுள் இருக்கிறானோ இல்லையோ அவன் பெயரை சொல்லி இந்த உலகத்தில் நடக்கும் கொடுமைகளே அதிகம்...உலகம் உருண்டை என்று சொன்னதால் கலீலியோ வை சாத்தானின் தூதன் என்று கடவுளின் பெயரை சொல்லி கல்லால் அடித்து கொன்ற உலகம் இது
    ஆதி மனிதர்கள் முதல் அடுத்தடுத்து மனிதனை சீர்படுத்த தோன்றியவை, தோற்றப்பட்டவை தான் சமயம் மதம் கடவுள் இன்ன பிற.. மாறாக அவை மனிதனுக்கு
    ஊறு விளைவிப்பது தான் கடந்த நூற்றாண்டில் பெரியார் காலத்தில் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.....ஒரு எந்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்...ஒரு பயன்பாட்டிற்காக மனிதன் அதை உருவாக்குகிறான்..அனால் அது அவனுக்கு அவன் நினைப்பதற்கு எதிராக வேலை செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்.... அதை எறிந்து விடுகிறான்...அது போல தான் மனித குல மேம்பாட்டிற்காக பயன்பட வேண்டிய சமயம் அதற்க்கு நேர் எதிரான திசையில் சென்றுகொண்டிருந்தது... ஆனால் அதை எதிர்க்க யாருக்கும் தைரியமில்லை...சாமி கண்ணை குத்திவிடும் என்ற பயம்.... தைரியமாக சமய மறுப்பு கொள்கையை எடுத்து மனித குலத்தின் சீர்திருத்தத்திற்க்காக போராடியவர் தான் பெரியார்......முடிவாக....இத்தனை தீவிரமாக போராடியும் கூட தான் நினைத்ததில் ஐம்பதில் ஒரு பங்கு தான் அவரால் செய்ய முடிந்தது...இன்னும் கடவுள் இருக்கத்தான் செய்கிறார்... இன்னும் சாதி இருக்கத்தான் செய்கிறது...மதமும் இருக்கத்தான் செய்கிறது... அதன் பெயரில் அக்கிரமங்களும் இருக்கவே செய்கின்றன...திருக்குறளைப்பற்றி கூறும் நீங்கள் பாரதிதாசனை படியுங்கள் தெளிவடைவீர்கள்....

    பதிலளிநீக்கு
  6. சரி கடவுள் இருக்கிறார்...என்றால் எத்தனை கடவுள்...உன், என், அவன் கடவுள்கள் எத்தனை பேர் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது..../////

    பலரின் கேள்வி இது தான். ஏன் இத்தனை கடவுள். உலகம் இன்று ஒரு கிராமமாக இருந்தாலும் - கிராமமே உலகமாக இருந்த காலமும் இருந்திருக்கிறது. அந்தந்த பிரதேசத்திற்கென்று ஒரு கடவுள் உருவாக்கப்பட்டார். ஆரம்ப காலம் இப்படி தான் இருந்தது. மக்கள் இடம் பெயர தங்கள் கடவுளை கொண்டு போய் இடம் பெயர்ந்த இடத்தில் வைத்தான், ஒரு கடவுள் ஒரு நூறு கடவுள் ஆனது இப்படி தான். பெருந்தன்மையுடன் இருந்தவன் எல்லா கடவுள்களையும் வணங்கினான். ஆனால் என் கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்போன் சண்டையிட்டு கொண்டு இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  7. பெரியார் மிக பெரிய முரண்பாட்டாளர். அவரின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்தால் அவரின் முரண்பாடுகளை அறிய முடியும். அந்த முரண்பாடுகளை இணையத்தில் பலரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தேடி படியுங்கள். அவர் மீதான கொஞ்ச நஞ்ச மரியாதையும் காணாமல் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்வது போல சமயம், மதம் மனிதனை நெறிப்படுத்த மனிதனால் உருவாக்கப் பட்டதாக இருக்கலாம், ஆனால் கடவுள் உருவாக்கப் பட்டவர் அல்ல.. உருவாக்கியவர். ஆதியும் அந்தமுமான அவரை அறிந்து கொள்ள முடியாத பலவீனனான மனிதன் தனக்குத் தெரிந்த படி தனக்கென ஒருவரை உருவாக்கிக் கொண்டான்...
    நீங்கள் நினைத்தவுடன் ஓடிவந்து உங்கள் முன் நிற்க கடவுள் உங்கள் வீட்டு வேலைக்காரன் அல்ல.. தெய்வத்தை தரிசிக்க சில முறைகளும் தகுதிகளும் வேண்டியிருக்கின்றன... யாரும் காணமுடியாத ஒளியில் வாசம் பண்ணும் அவர் பரிசுத்தர்..உள்ளத்தில் பரிசுத்தமில்லாதவர்கள் காண முடியாது..
    //தைரியமாக சமய மறுப்பு கொள்கையை எடுத்து மனித குலத்தின் சீர்திருத்தத்திற்க்காக போராடியவர் தான் பெரியார்......முடிவாக....இத்தனை தீவிரமாக போராடியும் கூட தான் நினைத்ததில் ஐம்பதில் ஒரு பங்கு தான் அவரால் செய்ய முடிந்தது..// ஒருவேளை கடவுள் இருக்கிறார் அவருக்குப் பயந்து நடவுங்கள் என்று பெரியார் போதித்திருந்தால் 100% அவரால் சாதித்திருக்க முடியுமோ என்னவோ...
    முதலில் உங்கள் கொள்கைக்கு மாறானவர்களை முட்டாள்கள் என்று தீர்ப்பிடுவதை நிறுத்துங்கள்.. நீங்கள் அந்தளவுக்கு புத்திசாலிகளா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kalla nampi veena pooganuma...
      kall manithanaal vuruvaakka pattathu thaan....
      fever vantha vivuthi poosikikunga or koovila erukura old oil eduthu thadavikkunga...
      sariya poidum... doctor kita pooagathinga...
      ok.....
      kadavula koopidurathuku ungala poola pazam paal lanjam koduthaal thaan varuvaara.......

      நீக்கு
  9. அன்பின் பூங்கோதை வணக்கம். முழுமையாக இந்த பதிவை படிக்காது உங்கள் கருத்தை பதிந்து உள்ளீர்கள் என்பது எனது அபிப்பிராயம். முடிந்தால் முழுவதையும் வாசித்து உங்கள் கருத்தை பதிய முயலுங்கள். நன்றி நிலாகவி

    பதிலளிநீக்கு
  10. தோழர் ரசியாவில் பகவத் கீதை பாலியல் வன்முறையை வளர்க்கும் புத்தகம் என சொல்லி குப்பையில் வீசியதை எதிர்த்து சங்பரிவார் அமைப்புகள் சண்டைபோட்டு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  11. நிலாகவி அவர்களே உங்களது கட்டுரையானது கடவுள் உள்ளார் என்பதை ஆமோதிப்பதாக உள்ளது , சரி உங்களின் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன், ஆனாலும் ஒரு ஐயம் உள்ளது நீங்கள் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், அது என்னவென்றால் ஈழத்தில் நடந்த கொடூரத்தில் எம் தாய் தமிழ் உறவுகள் , குழந்தைகள் பிய்ந்து எறிந்த போதும், எம் தாய் , சகோதரிகள் கொடூரமான வன்பாலுரவுக்கு உட்படுத்தப்பட்ட போதும் , இந்த கடவுள்கள் என்ன செய்து கொண்டிருந்தன அந்த கொடூரங்களை கண்கொண்டு ரசித்தனவோ, சட்ட்று விளக்கமாக கூறுங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதிரவன் மலேசியா14 ஆகஸ்ட், 2014 அன்று PM 6:28

      கடவுள் எதற்கு என்று சற்று சிந்தியுங்கள்,எனது பார்வையில் அவர் கும்பிடுவதற்கு மட்டுமே!!!

      நீக்கு
    2. கதிரவன் மலேசியா14 ஆகஸ்ட், 2014 அன்று PM 6:31

      அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும்,கடவுள் எதற்கு ?அது கும்பிடுவதற்கு மட்டுமே!

      நீக்கு
  12. ..பெரியார் மக்கள் நலன் குறித்து சிந்தித்து செயல்பட்டார் ஓயாது ......அவரையே விமர்சிக்கின்ற அறிவாளிகள் அவர் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவும்...........

    பதிலளிநீக்கு
  13. தந்தை பெரியாரிலும் தலைவர் காமராயருக்கு தலை வணங்குவோம்

    பதிலளிநீக்கு
  14. kadavul uruvakka pattavar illanu neenga paathingala......
    kalla nampi than 98% mutta payaluvaala erukuraane..
    kadavul selaiye adichuttu poiduraanuvoo...
    thanaiye kaapathika mudiyatha samy ungala eppadi kaapathum.... poongoothai madam......

    பதிலளிநீக்கு
  15. கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
    பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
    Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
    இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
    https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
    https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
    https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
    https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
    https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
    https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
    https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
    https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
    evr in nokkam enna ?

    பதிலளிநீக்கு
  16. "தன் நிராதரவான நிலமையை உணர்ந்த மனிதன் கடவுள் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டான். குழந்தைப் பிராயத்தில் பாதுகாப்பு வேண்டி உண்டாகும் அச்சமும் திகிலும் தன்னைப் பாதுகாக்க தன்னைவிட சக்திவாய்ந்த ஒரு தந்தையை நாடிப் போவதுபோல மனிதன் தகப்பனைவிட ஆற்றல் உள்ள ஒரு சக்தியாக கடவுளை உருவாக்கி அதை இறுகப் பற்றிக் கொண்டான்......... உளவியல் ரீதியில் நோக்கும்போது ஒரு மதம் என்பது ஒரு பிரமையே”. - Sigmund Freud The future of an illusion 1927

    Religion is an illusion and it derives its strength from the fact that it falls in with our instinctual desires." --Sigmund Freud, New Introductory Lectures on Psychoanalysis,1933.

    "Religion is comparable to a childhood neurosis." --Sigmund Freud, The Future of an Illusion, 1927

    பதிலளிநீக்கு