செவ்வாய், 10 ஜூலை, 2012

முகபுத்தக காதல்



முகப்பு புத்தக உரிமையாளர் Mark Zuckerberg இப்போது உலகில் உள்ள இளம் பணக்காரர்களில் ஒருவர். இவர் முகப்பு புத்தகத்தை நான்கு மாசி இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு கண்டுபிடித்தார்.






முகப்பு புத்தகம்
தெரியாத நபரை
எல்லாம் நண்பராக்கினாய்
தொலைதூர உறவுகளின்
இடைவெளியை சிறிதாக்கினாய்
மறந்திருந்த காதலியை
தேடவைத்தாய்
அவளின் குடும்ப போட்டோவை
பார்த்து அழவும் வைத்தாய்

தெரியாத பல செய்தி
தெரியவும் வைத்தாய்
பாரில் உள்ள கவிகளின்
திறமையை அறியவும் வைத்தாய்
முகம்தெரியா மனிதருடன்
எழுத்து சண்டை இடவும் வைத்தாய்
நாள் பொழுதும் உன்னுடனேயே
உருகவே வைத்தாய்

நினையாத நேரத்தில் புதிதான
பூவொன்றை மனதினில் ஏற்றினாய்
எப்போது விலகியது போகுமென
ஏங்கவும் வைத்தாய்
மணமாகா  இளம் காளையருக்கும் கன்னியருக்கும்
மணமாக பல உதவியை செய்தாய்- இப்படி
நல்ல நல்ல சேவைகளை செய்யும் நீ
எதற்காக போதை போல்
முகப்பு புத்தகத்தில் தொலைய வைத்து
என் முகவரியை அழியவைத்து
இன்னொருவன் கோடிஸ்வரன்
ஆவதை சொல்ல மறந்தாய்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக