சனி, 15 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணு மின்நிலையம் ரஷ்யாவை சாந்திபடுத்தவா?


கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதில் தீவிரம் காட்டியுள்ள மத்திய அரசும் மாநில அரசும் பல தார்மீக கோட்பாடுகளில் இருந்து தவறியதும், பல ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டதும், தமிழ் இன அழிப்பை முன் நின்று நடத்தியதுமே அவர்களுக்கு எதிரான இந்த போராட்டம் வலு பெற்றதற்கான சான்றாக பார்க்க முடியும். 

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியால் ஜப்பானில் ஏற்பட்ட அணுஉலை வெடிப்பும் அதன் மூலம் ஏற்பட்ட சேத விபரத்தையும் தணிக்கை செய்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சும்,அணுஉலை நிலையம் பற்றி இன்னும் தீர்க்கப்படாத பல கேள்விகளும் சந்தேகங்களும் மக்கள் மனங்களில் இருக்கும் போது, அணுஉலை நிலையத்தின் பாதுகாப்பு பராமரிப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசோ இல்லை மாநில அரசோ மிக தெளிவான ஒரு அறிக்கையை சமர்பிக்காமல் இருப்பதும், நாட்டில் உள்ள மிக குறைந்த அடிப்படை வசதியற்ற கடற்தொழிலை மட்டும் வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களின் உணர்வுகளை மதிக்க தவறியதும், அதை சில அரசியல் கட்சிகள் தமது நலனுக்காக அணுமின்நிலையம் அமைப்பது சரி என்றும், பிழை என்றும் போராட்டம் நடத்துவதும் மிகவும் கேலி கூத்தாக உள்ளது.

ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கு முன்னால் மத்திய அமைச்சு பாராளுமன்றத்திலும் பின்னர் எந்த மாநிலத்தில் அந்த ஒப்பந்தம் சம்பந்தமான நடவடிக்கைகள் நடைமுறை படுத்தப்பட போகின்றதோ அந்த மாநில ஆட்சி மாதாந்த கூட்டத்திலும் இந்த அணுமின்நிலையம் தொடர்பான வாதி பிரதிவாத கருத்துக்கள் நிச்சயமாக விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது எல்லாம் மௌனம் காத்த அரசியல் வாதிகள் இப்போது குடை பிடிப்பது இவர்கள் உண்மையில் மக்கள் மீதான அக்கறையில் பேசுகின்றார்களா என்ற ஒரு மாபெரும் கேள்வியை தொக்க வைக்கின்றது.

எது எப்படியாக இருப்பினினும் ஒரு நடவடிக்கை சம்பந்தமாக போராட்டங்கள் வெடிக்கும் போது அதை அரச பயங்கரவாதத்தை பயன்படுத்தி அடக்குவதும், தம்மக்கள் மீதே சட்டத்திற்கு முரணான முறையில் கேவலமாக பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துவதும், தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் வன்மையாகவும் ஆணித்தரமாகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடையமாகும்.

பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுவதும் கண்மூடி தனமாக துப்பாக்கி பிரஜோகம் மேற்கொள்ளுவதும் சிறை அடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகம் பேசும் அரசியலையும் இந்தியா ஒரு பேராண்மை மிக்க ஜனநாயக நாடு என்பதையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

உண்மையில் இந்தியா மக்களின் நலனில் அக்கறை இல்லாத தான்தோன்றி தனமாக முடிவெடுக்கும் பழுத்த அரசியல் பெருச்சாளிகளை தன்னகத்தே கொண்ட ஒரு வன்முறை அரசியல்வாதிகளின்  நாடு.
இந்த நிலை மாறவேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் காதல் சினிமா எனது குடும்பம் எனது வாழ்க்கை என்ற ஒரு சிறு வட்டத்தில் இருந்து வெளி வர வேண்டும். மாவீரன் வீரப்பனின் மறைவின் பின்னர் தன் விஷ பற்களை காட்டும் பிற மாநில அரசியல்வாதிகளும், விடுதலை போராட்டம் நசுக்கப்பட்ட பின்னர் தம் சுயரூபத்தை காட்டும் இலங்கையும் பிற அயல் நாடுகளும் எம் மக்களின் குரல் வளைகளை எம் கண்முன்னே அறுத்து எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கூடங்குளம் அணுநிலையம், தானே புயல் , சிவகாசி வெடி விபத்து, கடலோர மீனவர் தாக்குதல், சாலை ஓர விபத்துக்கள் என்று இன்னும் பல தொடர்கதையான விபத்துக்கள் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர ஊழலும், லஞ்சமும் ,வஞ்சமும், துரோகமும் , சுயநலமும் மிகுந்த ஒரு பெயருக்கு மட்டுமான ஒரு ஜனநாயக நாட்டில் வேறு ஏதும் நடப்பது சாத்தியம் இல்லாத ஒன்று ............

இறுதியாக இந்த கூடங்குளம் அணுமின்நிலையம் அமைப்பதால் ரஷ்யாவை சாந்தபடுத்தி சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு அரசியல் ரீதியான எச்சரிக்கையை விடும் ஒரு ராஜதந்திர நடவடிக்கை  யாக கூட இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில் தம் வயிற்று குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அழித்து விட்டு பிறர் குழந்தைகளிடம் மண்டியிட்டு வாழும் கேவலமான நிலையில் தான் இப்போது இந்தியா உள்ளது. ஒரு பெண்ணின் சுயநலமும் அகம்பாவமும் எப்படி எல்லாம் இந்தியாவை ஆட்டி வைக்கப் போகின்றது என்பதை பொறுத்து இருந்து  தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவிற்கு பிற வல்லரசுகளில் இருந்து அச்சுறுத்தல்களும் வராமல் இருக்க வேண்டும் என்றாலோ இல்லை இலங்கையை தமது கைபிடிக்குள் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தாலோ மீண்டும் தென் ஆசிய பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றாலோ ஈழ போராட்டத்திற்கு மீண்டும் ஆதரவு வழங்க வேண்டிய நிலை உருவாக வேண்டும். அப்படி ஆதரவு வழங்கும் பட்சத்தில் தாமே பெரியவர் என்று தலை விரித்து ஆடும் பல பேயும் சப்த நாடியும் ஒடுங்கி அடங்கி விடும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்கப்போவதில்லை.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக