புதன், 24 அக்டோபர், 2012

மாவீரர் நாள் உறுதிமொழி


நாம் இன்று அன்றாடம் வாசிக்கும் செய்திகளில் எப்போதாவது தென்படும் செய்திகளாக புனர்வாழ்வு அளிக்கபட்ட போராளிகள் விடுதலை என்றும் அவர்கள் மீள குடியேற்றபட்டு உள்ளார்கள் என்றும் வாசித்து ஒரு செய்தியாகவே அதை மறந்து விடுகின்றோம்.மீள் குடியேற்ற பட்ட போராளிகள் சம்பந்தமான மேலதிகமான தகவல்களோ இல்லை.அவர்கள் வாழ்வாதாரம் பற்றியோ எம்மில் யாருமே கவலை கொள்வதில்லை, எமக்கு பிடித்ததெல்லாம் கிளுகிளுப்பு செய்திகளும், சினிமாகாரர்களின் கேடுகெட்ட தகவல்களும், கிரிக்கெட் செய்திகளும் மட்டும்தான்.
நாம் மனிதனாக தோற்றம் பெற்று ஏறக்குறைய 160 000 ஆண்டுகள் முடிவடைந்த போதிலும் இன்றும்  எமது எண்ணங்களும் சிந்தனைகளும் "எனது" என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கி விட்டதற்கு மிக பெரியளவிலான பங்களிப்பை வழங்குவதில் எமது தமிழ் ஊடகங்கள் முன்னணியில் உள்ளன.

எமது தேசத்தை மீட்கவும் எமது இனத்தை விடிவின் பாதையில் எடுத்து செல்லவும் தம்மையே அர்பணித்த ஆயிரம் ஆயிரம் போராளிகள் இன்று தமது விடியலை இழந்து புனர்வாழ்வு என்ற போர்வையில் அவர்களை மனதளவில் ஊனமானவர்களாக்கி வெறும் உடலளவில் வாழும் மனிதர்களாக நமது சூழலில் வாழ விட்டிருக்கும் ஸ்ரீலங்கா காட்டு மிராண்டி அரசியலும் அதற்கு துணைபோகும் வல்லாதிக்க சக்திகளும் வேண்டுமென்றே புனர்வாழ்வு அளிக்கபட்ட போராளிகள் காணமல் போவதையும் தற்கொலை செய்து கொள்வதையும் உலகின் பார்வையில் இருந்து மறைத்து விடுகின்றார்கள்.இதுவே ஒரு திட்டமிட்ட இன அழிப்பு என்பதினை ஏனோ எம்மினம் மறந்து இப்போது சுதந்திரம் கிடைத்துவிட்ட உணர்வில் கேளிக்கையிலும் சமுதாய சீர்கேட்டு நடவடிக்கையிலும் ஈடுபட்டு கொண்டு உள்ளார்கள்.

எம்மினத்தின் ஒரு சாரார் அடிப்படி வசதி ஏதும் இல்லாமல் பனியிலும்,மழையிலும்,வெயிலும் ஒரு நேர உணவு இன்றியும்,மறைப்பதற்கு ஆடை இன்றியும் ,குழந்தைகள் கல்வி வசதி இன்றியும் இன்றும் வாழும் போது,எந்த ஒரு போராட்டத்தை காரணம் காட்டி நாடு விட்டு நாடு அகதிகளாக புலம் பெயர்ந்து வெளிநாட்டவர்களிடம் பிச்சை எடுத்து, இன்று வெளிநாட்டு பிரஜைகளாக வாழும் நாம், எம் குழந்தைகளை நுனி நாக்கில் ஆங்கிலமும், பிற மொழிகளை பேச வைப்பதிலும் ,அவர்களுக்கு ஒரு ராஜ வாழ்கையை அமைத்து கொடுப்பதிலும் எமது வாழ் நாளை முழுக்க முழுக்க செலவிடுகின்றோம். ஆனால் எமது பெரும்பான்மை  குழந்தைகளோ இங்குள்ள ஆடம்பர மோகத்தில் எமது காலாச்சார பண்பாடுகளை மறந்து எமக்கு தீராத வேதனையை மட்டும் தான் திருப்பி தருகின்றார்கள்.இவ்வாறாக கேடு கேட்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கு கோடி கணக்கில் செலவிடும் நாம் எங்கோ ஒரு மூலையில் உண்ண ஆகாரம் இல்லாமல் எதிர்காலத்தில் இந்த நாட்டையே தூக்கி நிறுத்தி விடக்கூடிய ஆற்றல் கொண்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவிட மறுக்கின்றோம்.இவ்வாறாக ஒரு குறுகிய சிந்தையில் வாழும் நாம் ஒரு ஒரு கணமேனும் எமது கடந்த காலங்களை நினைத்து பார்க்க மறந்து விடுகின்றோம்.

எனவே மதிப்புக்குரிய தமிழ் மக்களே
நாம் எமது ஈழ தேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வரும் போது ஒரு கைபெட்டியுடன் மட்டும் தான் வந்திருந்தோம். இன்று உலகமே வியக்க தக்க வகையில் புலம் பெயர் நாடுகளவில் வணிக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு தாக்கத்தை விளைவிக்க கூடிய சக்தியாக மாற்றம் அடைந்துள்ளோம். எந்த ஒரு போராட்டத்தையும் போராளிகளையும் காரணம் காட்டி இந்த நிலையை அடைந்தோமோ அந்த போராட்டத்தையும் போராளிகளையும் எட்டி உதைக்க நினைப்பது மனிதனாக நாம் பிறந்ததற்கும் மனிதன் என்று எம்மை நிலை நிறுத்தி கொள்ளுவதற்கும் ஏற்புடையதானதன்று.
ஆகவே எமது பாசமிகு தமிழ் மக்களே நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த அளவு எம் மண்ணை நேசித்த போராளிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உதவிகளை செய்வோம்.நீங்கள் செய்யும் உதவியானது சரியான நபர்களிடம் சென்றடைவதும் அவர்களின் செயற்பாடுகளை தொடர்ந்து கவனிப்பதும் தமிழ் மக்கள் உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக