ஆயிரம் ஆயிரம் கனவுகள் சுமந்து
கண்ணின் மணி போல கருத்துடன பார்த்து நாளும் பொழுதும் வளர்த்தாயே தாயே- உன் கனவை என்மனதில் சுமக்கும் சேயே
யன்னல் வழியோரம் ஒரு பார்வை காட்டி
நெஞ்சில் ஒருகோடி கனவுகள் தேக்கி
பள்ளி அனுப்பி வைத்தாயே அம்மா
உன் நினைவை மறந்த கிள்ளையும் நானே
என் தேசம் இருளான நிலை கண்டு நானும்
என்னையே நான் மறந்து போனேன்
வீர வேங்கையாய் வெகுண்டு எழுந்து நின்றேன்
அண்ணனின் கைபிடிக்கும் ஒரு குழந்தை ஆனேன்
களமாடும் போதினிலும் தாயே - உன்
நினைவு என்னை வாட்டிவிடும் போதும்
நிறம் மாற பூ போல நானும் ஒரு
தடம் மாறாமல் தான் தனியே நின்றேன்
கயவன் என்னை நெருங்கி விட்ட போதும்
அந்த குப்பி தன்னை பிடுங்கி விட்ட போதும்
என் மார்பில் வெடி குண்டு பட்டு விட்ட போதும்
என் தேச கனவு அது கலையவில்லை அம்மா
ஒரு மலராய் நான் இன்று உதிர்ந்து விட்ட போதும்
பலசெடியாய் மறுஜென்மம் எடுத்து இங்கு வருவேன்
என் தாயே உன் மடியில் ஒரு கணமே தூங்கி
மீண்டும் புலியாய் களமாடி வீழ்வேன் ........................
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.
மீண்டும் புலியாய் பிறப்பேன் தலைப்பே தலைவணங்க வைத்தது அம்மாவுக்கு ஆறுதல் தரும் வரிகள் அற்புதம்.
பதிலளிநீக்கு