செவ்வாய், 22 ஜூன், 2021

புலம்பெயர் தேசத்தில் ஒன்றுபட்டது தமிழினம்.



மார்ச் மாத மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லை என்று வாக்களித்த தென்னாசிய பிராந்திய நாடாக உள்ள பாகிஸ்தான் , பங்களாதேஷ் , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின்  தூதரகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துச்செல்ல  பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும், நாடுகடந்த அரசாங்கமும், உலக வரலாற்று மையமும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்த பேச்சுவார்த்தையில் ஈடுபபடுகின்றது என்ற நற்செய்தியானது புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமைக்கு வித்தாக அமைகின்றது.


ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இணைந்த பணித்திட்டத்தை மேற்கொண்ட இந்த அமைப்புகள் மீண்டுமொருமுறை இணைந்து செயற்படுகின்ற விடயமானது தமிழ்மக்களிடைய பெரியதொரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. 


விடுதலைப்போராட்டத்தின் அர்ப்பணிப்பில் உருவாகிய அமைப்புகள் எப்போதும் ஒற்றுமையாக காலத்தின் தேவை கருதி செயற்படுவார்கள் என்பதையே குறித்த இந்த செயற்பாடானது எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.


குறித்த இந்த போராடத்திற்கு உலகம் தழுவிய தமிழ்மக்கள் சார்ந்த அமைப்புகள் அனைத்தும் ஆதரவை வழங்குமென தமிழ்மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள். 


முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது ஒன்றுபட்ட தமிழர்கள் மீண்டுமொருமுறை  ஒன்றாக இணைந்து தமது ஒற்றுமையை,தமிழினத்தின் எழுச்சியை  உலகிற்கு எடுத்துக்காட்டுவார்கள் என்றே அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.



0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக