உங்களின் நிலாகவி மணியம் எழுதும் தொடர்கதை.
அவளும் ஒரு தேவதை-----அத்தியாயம் ஒன்று
அன்றைய பொழுது மிகவும் அழகாக விடிந்திருப்பதாக எண்ணி கொண்டு தனது கையை மெதுவாக உயர்த்தி சோம்பல் முறித்தபடி படுக்கையில் இருந்து எழுந்தாள் மீரா.
மெதுவாக நடந்து சென்று யன்னலை திறந்தவளின் கண்களின் தெரிந்த பசுமையான புல்வெளியையும் நடுவே தெரிந்த ரோஜா தோட்டமும் எப்போதும் போலவே அவளின் மனதில் எல்லையில்லா அமைதியையும் ஆனந்தத்தை கொடுத்தது. அவளின் மனதில் ஏதோதோ சிந்தனைகள் முட்டி மோதியது
'ஹாய் மீரா 'குரல் கேட்டு சிந்தனையில் இருந்து விளித்து கொண்டாள் மீரா.
"வேலைக்கு நேரம் ஆகுது சாந்தி எழும்புவதற்கு முன்னர் நீ ரெடியாகு"என்ற காயாவின் குரலில் இருந்த அன்பில் அவளை பார்த்து மென்நகை பூத்தபடி பாத்ரூம் நோக்கி நடந்தாள் மீரா.தனக்கு பிடித்த சினிமா பாடலை முணுமுணுத்தபடி சவரை திருகினாள் மீரா. மீரா பாத்ரூமுக்குள் நுழைந்து ஒரு ஐந்து நிமிடத்திற்குள் வெளியில் இருந்து சாந்தியின் குரல் கேட்டது.
"ஹாய் மீரா, ஹாய் மீரா" என்றாள் சாந்தி. "என்னடி சாந்தி" என்ற மீராவின் குரலில் நிச்சயம் எரிச்சல் இருந்தது. "ப்ளீஸ்பா, எனக்கு இன்று இண்டர்வியு இருக்கு,கொஞ்சம் சீக்கிரம் வா"என்று கெஞ்சினாள் அவள்.
"சரி வருகின்றேன்" என்ற மீராவிற்கு தன் நிலையை எண்ணி கோபமும் கவலையுமாக இருந்தது . "லேடீஸ் கோஸ்டல் என்றால் ஜாலியா இருக்கலாம்" என்று சொன்ன தங்கையின் குரல் அவள் காதில் ஒலித்தது. அவளையும் அறியாமல் கண்ணில் இருந்து பெருகிய கண்ணீர் சவரின் தண்ணீருடன் ஒன்றாக கலந்தது.
பாத்ரூமை விட்டு மடமடவென்று வெளியே வந்த மீரா தனது சிறிய ரூமுக்குள் உள்ள அலுமாரியில் இருந்து ஒரு அழகிய பிங்க் கலரில் உள்ள காட்டின் சுரிதாரை எடுத்து அதற்கு ஏற்ப பிங்க் கலரில் வளையல், தோடு, மணிக்கூடு ,ஒரு சின்னமாலை அணிந்து கொண்டு வந்தாள். அவளை பார்த்த காயாவின் கண்ணில் ஒரு ரசிப்பு தெரிந்தது. 'ஹாய் மீரா உண்மையாக நீ ரொம்ப அழகாய் இருக்கா நான் ஒரு ஆணாக இருந்தால் உனக்கு நான் தங்க மாளிகை கட்டுவேன்' என்று சொல்லி அன்புடன் அனைத்து கொண்டாள். 'ரொம்ப நன்றியடி காயா நீ இல்லாவிட்டால் நான் ரொம்ப கஷ்ரப்பட்டு இருப்பேன்' என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள் மீரா. வேலைக்கு கொண்டு செல்லவேண்டிய நோட்ஸ் புக்கை எடுத்து வைத்தாள் மீரா.
'நான் கண்டீன் போகின்றேன் உனக்கு ஏதும் வாங்கி வரவா 'என்று கேட்டாள் மீரா .எனக்கு ஒரு தக்காளி சாதம் மட்டும் என்றாள் காயா. காலை நேர உணவுக்காக ஒரு பார்சல் இட்டியிலும் மதிய நேர உணவுக்காக இரண்டு தக்காளிசாத பார்சலும் வாங்கி கொண்டாள் மீரா.
அவசர அவசரமாக காலை உணவை முடித்து கொண்டு தனது கான்பாக்கை எடுத்துகொண்டு பஸ்ராப்பை நோக்கி ஓடினாள் மீரா.

அத்தியாயம் 2 அடுத்த வாரம் தொடரும்
உறவுகளே உங்கள் கருத்துகளை சொல்லிவிட்டு செல்லுங்கள்..
எவ்வித எதிர்பார்ப்பையும் வைக்காமல் தொடரும் இத் தொடர்??___சுவரில் வீழ்ந்த ஒரு துளிக் கண்ணீர்.
பதிலளிநீக்குசற்றே விறு,விறுப்பாய் எழுத முயற்சிக்கவும் ஐயா!
நன்றி-
தொடருங்கள்---
மிகவும் நன்றி உங்கள் கருத்துக்கு. தொடர்ந்து வாசியுங்கள். முதல் பத்து நிமிடத்தில் படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்வது கூடாது ... பிறகு சொல்லுங்கள் ஏற்று கொள்கின்றேன்.இது எனது முதல் தொடர் கதை. ஒரு வளர துடிக்கும் புலம் பெயர் தேசத்து தமிழ் உறவு .......
பதிலளிநீக்கு