உங்களின் நிலாகவி மணியம் எழுதும் தொடர்கதை.
அவளும் ஒரு தேவதை-----அத்தியாயம் இரண்டு
அவளும் ஒரு தேவதை-----அத்தியாயம் இரண்டு
வேகமாக ஓடிய மீரா சரியாக பத்து நிமிடத்தில் பஸ்ராப்பை வந்தடைந்தாள். 'ஒ தனது பஸ் போயிருக்குமா? இல்லையா?' என்று அவளுக்குள் ஒரே குழப்பம்.
'இன்றும் நீ தாமதமாக வந்தால் உனது சம்பளத்தில் கட்' என்ற தலைமையதிகாரியின் குரல் அவளது காதுக்குள் ஒலித்துகொண்டே இருந்தது. இப்போது உள்ள சம்பளமே அவளது அன்றாட செலவுக்கு போதுமானதாக இல்லை. அதில் இன்னும் சம்பளம் கட் என்றால் ம்ம்ம்ம் அவளுக்கு நினைக்கும் போதே மனதில் பகீர் என்று அடித்துகொண்டது. மாத கடைசியில் அவளது தோழியிடம் வாங்கிய போனமாத கடன் வேறு ....
அவளது குழப்பத்திற்கு எல்லாம் விடையாக அவளது பல்லவன் பஸ் தன்னில் நிரப்பகூடிய அளவு மனிதர்களை நிரப்பிக்கொண்டு வந்தது.எதையும் கவனிக்கும் நிலையில் மீரா இல்லை. எப்படியாவது அதில் தான் முண்டியடித்து கொண்டு ஏறினால் போதும் என்ற மனநிலையில் இருந்தாள் அவள்.
பஸ்க்குள் ஏறிய மீராவுக்கு சரியாக மூச்சுக் கூட விட முடியவில்லை . அவ்வளவு நெருக்கம். பெண்களின் கூந்தலில் உள்ள மல்லிகைபூவின் வாசனை, அவரவர் தமது வசதிக்கு ஏற்ப வாங்கி போட்ட செண்டின் வாசனை, மீனவ பெண்களின் கூடை வாசனை, வியர்வை நாற்றம் எல்லாமே ஒன்றாக கலந்து ஒருவித மயக்கத்தை கொடுத்தது மீராவிற்கு. என்ன செய்வது ஒரு காலத்தில் எதுமே தெரியாத மான்குட்டியாக தான் இருந்தாள் மீராவும்.அவளையும் அறியாமல் எங்கோ செல்லும் மனதிற்கு கடிவாளம் போட்டு கொண்டு சிந்தனையை ஒருமுகபடுத்தினாள் மீரா.
'ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ' என்று முனகியபடி ஒருவாறு நகர்ந்த பஸ் மெயின் டவுனை வந்தடைந்ததும் பஸ்சில் இருந்து கிட்டதட்ட எல்லோருமே இறங்கியது போல இருந்தது மீராவுக்கு. யன்னலோரம் ஒரு சீட் கிடைக்கவே அதில் வந்து அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள் மீரா. இயற்கையின் அழகிற்கு முன்னால் எதுமே இல்லாதது போல இருந்தது மீராவிற்கு.காலைசூரியன் , வேகமான பஸ் , அவளின் முகத்தருகே கதை சொல்லும் தென்றல் , இடையிடையே ஒலிக்கும் ஓட்டல் வானொலியின் சினிமா பாடல்கள்.........
அவளது சிந்தனையை இடை வெட்டியது ஒரு சொகுசு கார். ம்ம்ம் இந்த காரை அவள் எப்போதும் பார்க்கின்றாள் . அவள் வரும் பஸ் ரூட்டில் அந்த கார் கடந்த ஒரு மாதமாக மட்டும் வந்து கொண்டு இருக்கிறது. அவன் ம்ம்ம் அவனையும் அவள் கடந்த ஒருமாதமாக பார்த்துக்கொண்டு இருக்கிறாள். வரும் சிக்னலில் நிற்கும் போது இன்று நன்றாக அவனை பார்க்கவேண்டும் என்று மனதில் குறித்து கொண்டாள் மீரா. சிக்னல் வந்ததும் அவனை நன்றாக பார்த்தாள் மீரா. அவளால் தன் கண்களை நம்பவே முடியவில்லை . அவனும் அவளை பார்த்து நன்றாகவே புன்னகைத்தான்.
அத்தியாயம் 3 அடுத்த வாரம் தொடரும்
உறவுகளே உங்கள் கருத்துகளை சொல்லிவிட்டு செல்லுங்கள்..
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக