இன்னிக்கு ஒரு சூப்பர் ஹாட் விடயத்தை அலசி ஆராய்வோம்
ஹேய் மச்சான் இன்னிக்கு பாப் போகலாமா? தமிழ் நாட்டில இப்போ பெண்களும் பாப் கலாச்சாரத்துக்குள் புகுந்து விட்டார்கள்...... ஏன்பா இப்படி வீணா போயிட்டிங்க? என்று கேட்டா" சீ இது என்னடா நம்ம குரூப்புக்கு ஒத்துவராத காட்டான்" என்று புறம் தள்ளி விடுவார்கள்....
அத்தோடு இது வெஸ்டேர்ன் ஸ்டைல், "நாங்க மேற்கேத்திய ஸ்டைலுக்கு மாறுகின்றோம்" என்று மார் தட்டி கொள்கின்றார்கள்......
மேற்கத்தேய ஸ்டைல் பற்றி என்ன தெரிந்து கொண்டார்கள் இவர்கள்..... தமிழ் சினிமாவில விவேக் (ஒரு வெள்ளைகார பெண்ணை பார்த்து "யாரோ லோட் ஏத்தின லாரிக்கு, நான் அப்பனா" என்று சொல்வதை வைத்து) மேற்கேத்திய பெண்கள் எல்லோரும் தரம் கெட்டவர்கள் என்ற கருத்துக்கு வந்து விட முடியாது........
மிகவும் பண்பாடாக எம்மை போலவே வாழும் தூய்மையான வெள்ளைகார உறவுகளை நான் பார்த்திருக்கின்றேன். இன்னும் பல கிராமப்புற நகர்களில் இன்றும் லண்டன் தெரியாத பண்பாட்டு,கலாச்சார வெள்ளைகார உறவுகளை சந்தித்திருக்கின்றேன்.....
லண்டன் போன்ற பெரு நகரங்களில் பலவித கலாச்சார மக்கள் வாழ்வதால் நம் நாட்டில் வாழும் சில தறுதலைகள்(கெட்டவர்கள் ) போல இங்கும் வாழ்கின்றார்கள். அந்த தறுதலைகளை இங்கு படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வரும் நம் இளைய சந்ததி பார்த்துவிட்டு இதுதான் மேலைத்தேய கலாச்சாரம் என்று நம்புகின்றார்கள்.. அதற்கு ஏற்றால் போல பல இந்திய திரைப்படங்களும் துணை போகின்றன.....
மேற்கத்தேய மக்களிடையே எவ்வளவோ நற்பண்புகள் காணப்படுகின்றன....அந்த நல்ல விடயங்களை பின்பற்ற எம்மினம் எப்போதுமே விரும்புவதில்லை......
1 வெளிநாட்டவர் தம் தாய், தந்தையரை சொத்துக்காகவோ பணத்துக்காகவோ கொடுமை படுத்துவது இல்லை.
2 தாய், தந்தையரை முதியோர் இல்லங்களில் விட்டால் கூட வாரம் ஒரு முறை அவர்களிடம் சென்று நலன் விசாரிப்பார்கள் .
3 பெற்ற குழந்தைகளை ஒருபோதும் அனாதையாக குப்பை தொட்டில் போட மாட்டார்கள்.
4 விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்தால் கூட எல்லா குழந்தைகளையும் சரி சமமாக நடத்துவார்கள்.
5 பெண்ணுக்கும் ஆணுக்கும் சம உரிமையும் உண்டு.
6 பணக்காரன், ஏழை, இனம், மதம், மேல்சாதி,கீழ்சாதி, கருப்பு, வெள்ளை எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் சமமாக நடத்தபடுவார்கள்.
7 அரசியல்வாதி அந்தஸ்தில் உள்ளவன் என்று சட்டம் வேற்றுமை பார்க்காது.
சிந்தித்து பாருங்கள் உறவுகளே ஒரு கலாச்சார சீர்கோடு உள்ள ஒரு நாடு எப்படி ஒரு வல்லரசு ஆகவோ அல்லது அபிவிருத்தி அடைந்த நாடாகவோ இல்லை ஏகாதிபத்திய நாடாகவோ இருக்க முடியும். இன்னும் எம் நாட்டில் தான் கல்வி அறிவில் பின்தங்கியும், எயிட்ஸ் நோயில் முன்னணியிலும் உள்ளோம் .
ஆகவே அன்பு சகோதர சகோதரியே உங்களை நீங்களே மேலைத்தேய கலாச்சாரம் என்று ஏமாற்றாமல் எம்மின கலாச்சார பண்பு மாறாமல் ஒரு சிறந்த போற்றுதற்குரிய சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்...
கலை ,மொழி ,இலக்கியம், போர் ,வீரம், காதல், கலாச்சாரம், பண்பாடு வளர்த்த முதல் இனம் நாங்கள் தான்...........
கல் தோன்றா மண் தோன்றா காலத்தின் முன்னே தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.......
தமிழை வளர்ப்போம் தமிழனாய் வாழ்வோம் தமிழனாய் சாவோம்

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக