வெள்ளி, 29 ஜூன், 2012

வலைத்தள நட்பும் நானும்


வலைத்தள நட்பும்  நானும்

என்னன்னா நான் எழுதும் கருத்துக்கு யாரவது விருப்பம் தெரிவிச்சாலோ இல்லை கருத்து தெரிவிச்சாலோ அட அந்த விடயத்தை அவர்கள் உள்வாங்கி தான் அந்த குறியீடை பயன்படுத்தி இருப்பாங்க  என்னு நினைச்சேன்.
அட இப்பதான் புரியுது சில உறவுகளுக்கு அந்த குறியீட்டை பயன்படுத்துவது என்பது பொழுது போக்கு என்னு
"என்னடா இவ காலம் காத்தால சாவடிகிறாளே" என்னு யோசிக்கிறிங்களா இல்லை மேட்டர் இருக்கு
......

நான் இப்பதான் ,ஒரு மூணு மாசமா என் மனதில் தோன்றுவதை சும்மா கிறிக்கிட்டு வாறன். எனக்கு அவ்வளவு நட்பு வட்டம் இல்லை. சரி என்ன பண்ணலாம் என்று யோசிச்சு,
"சரி இருக்கிற நட்பு வட்ட நண்பர்களுக்கு டேக் பண்ணினால் நிறைய பேர் வாசிப்பாங்க" என்று நினைச்சு டேக் பண்ணினேன். அதை பார்த்து அந்த நண்பர்களும் விருப்பம் தெரிவிச்சாங்க .
யாரெல்லாம் விருப்பம் தெரிவிச்சான்களோ, அவங்களுக்கு நானா விரும்பி நட்பாக அனுமதிக்கு அழைச்சா பிளாக் பண்ணிட்டாங்கப்பா ...

"என்ன கொடுமை சரவணா இது"!  ஓகே வலைதளத்தில் சில ஜில் மால் நடக்குது  புரியுதப்பா..
ஆனா ஒருவரை பிளாக் பண்ண முன்னாடி ஒரு ஐந்து நிமிடம் அவர்களின் ப்ரோபில கொஞ்சம் பார்கலாமில்லையோ .... "அவங்க என்ன அக்டிவிட்டியில் ஈடுபடுறாங்க" என்னு
"அட இந்த பிளாக் பண்ணுற நட்புக்கள் எல்லாம் சேபா இருக்காங்களாம்", அட போங்கையா
"எங்க சேபா இருக்க வேணுமோ அங்க கோட்டையை விட்டுடுங்க... நம்மை மாதிரி பதினையாயிரம் மையிலுக்கு அப்பால இருக்கின்ற ஒரு சின்ன வளர்ந்து வர முயலும் எழுத்தாள பெண்ணிடம் சேபா இருகிங்களாம்... ஏன்பா இந்த கொலை வெறி .......

சரி இன்னும் ஒன்னு சொல்லுறேன், என்னை பிளாக் பண்ண முன்னாடி எனக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கப்பா எப்படினா "வணக்கம் முகம் தெரியா உறவே! உங்கள் கொலை மிரட்டல் கண்டு பயந்து விட்டேன். அதனால் என்னை பாதுகாத்து கொள்ளும் முகமாக,உங்கள் நட்பு அழைப்பை  இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நீங்கள்  வாபஸ் பண்ணாவிட்டால் பிளாக் பண்ணி விடுவேன் என்று....
சரியா சமத்து பசங்களா
பாதுகாப்பாய் இருப்போம் , பாதுகாப்பாய் உணர்வோம்

என்றும்  அன்புடன்
உங்கள் நிலாகவி

5 கருத்துகள்:

  1. இப்படியெல்லாமா இருக்காங்க? சரி விடுங்க தோழி..
    அவங்க வேலைய அவங்க பக்கட்டும், நம்ம வேலைய நாம பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. முகநூலில் யாரும் முழுமையாக படிப்பதில்லை. பதிவில் வந்தால் தான் படிப்பார்கள்.
    நன்றி.
    Pleae avoid word verification.

    பதிலளிநீக்கு
  4. Ungalay vittu yaar sentraargal yentru paarkkathe nanba unnutan yaar ullaargal yentru paar nanba
    nilavin kirukalukkaaga wait pannum nanban

    பதிலளிநீக்கு