சனி, 4 ஆகஸ்ட், 2012

தந்தை பெரியாரின் வரலாற்று தவறு என்ற பதிவிற்கு எனது விளக்கம்



அன்பின் எனதருமை அண்ணாக்கள் பாரதி கார்த்திக், Razana manaf  மற்றும் அனைத்து அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் வணக்கம். 


தந்தை பெரியார், சாதி, கடவுள், ஈழபடுகொலை, எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்றாக போட்டு குழப்பவேண்டாம். சாதி என்பது இல்லை .அதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. கடவுளின் பெயரால் நடைபெறும் அக்கிரமத்தை தட்டி கேட்க வேண்டும் என்று நானே உடன் பட்டு இருக்கின்றேனே என் கடைசி பந்தியில். 

சாதி ஒழிப்பு போராட்டம் ஆரம்பித்து ஒரு நூற்றாண்டு ஆகியும் இன்னும் அதை அடியோடு வெட்ட முடியவில்லையே தமிழ் நாட்டில். ஆனால் உங்களுக்கு இன்னும் ஒன்று நம் ஈழத்தில் நடந்த தெரியாத விடையம் சொல்ல வேண்டும். ஈழத்திலும் சாதியம் தலை விரித்து ஆடிய காலம் உண்டு தெரியுமா? உயர்சாதி, கீழ்சாதி என்று. அதை இப்போது எமது விடுதலை போராட்டம் 85 சதவீதத்தால் குறைத்து விட்டது. அதன் காரணம் கல்வி அறிவு பகுத்துணர்வு மனித நேயம் மட்டுமே தவிர வேறு எதுவும் இல்லை.


கடவுளின் பெயரால் ஏமாற்றும் கூட்டத்தை வளர்த்து விடுவதும் ஆளும் வர்க்கம் தானே அண்ணா. தமிழ் நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் பெருன்பான்மை மக்களை சாதி, மதம் என்ற பெயர் பதங்களை வைத்து அரசியல் பேசும் அரசியல் வாதிகள் தானே அதிகம் அண்ணா. தந்தை பெரியாரும் ஒரு அரசியல் வாதி அவர் எம் தமிழ் உறவுகளுக்கு (ஈழ திருநாட்டில் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே தமிழ் இன படுகொலை நடை பெற்று கொண்டு  இருந்தது நிதர்சனமான உண்மை அவர் வழி வந்த கலைஞர் காலத்தில் தான் உச்சம் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும்)  பெரியார் ஆகட்டும் இல்லை கலைஞாரகட்டும் என்ன செய்து விட்டார்கள். அரசியல் பேசி நம் உறவுகளை கொன்றே  போட்டு விட்டார்கள். 


எங்கு அக்கிரமம் நடை பெறுகின்றதோ அங்கு நான் வருவேன் என்பது கீதாச்சாரம்... அக்கிரமத்துக்கு எதிராக குரல் கொடுத்த  மனித தெய்வங்களை  மண்ணோடு மண்ணாக கூட இருந்தவரே குழி பறித்தது வரலாறு. அது அல்லாவுக்கு ஆகட்டும், இல்லை ஏசுவுக்கு ஆகட்டும் நம் ஈழத்திருமகனுக்கு  ஆகட்டும் நடந்த உண்மை அது தான் .....


உண்மையான சில மனித தெய்வங்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது தான் எமது ஆறுதல் . தயவு செய்து அரசியலையும் கடவுள் என்ற பெயரையும் போட்டு குழப்ப வேண்டாம்.


கடவுள் மனிதனிக்கு மேலான சக்தி. அதை மதம் என்ற பெயரில் பிரித்து மனிதன் செய்யும் அரசியலும் அட்டூழியமும் வசைபாடலும் கொஞ்சமும் பிடிக்கவில்லை....


சாதி ஒழிப்பு என்று சொல்லியே சாதி கலவரத்தை தூண்டுவதாக என் எண்ணம். தமிழ் நாட்டில் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி கொடுங்கள், வறுமை கோடு, ரேசன் அட்டை, காலேச்சு சீட்டு, வெட்டுப்புள்ளி, இவற்றை மாற்ற முற்படுங்கள். அப்போது ஒழியும் மூட நம்பிக்கையும் சாதியமும், மதமும் 


ஈழ போராட்டம் ஆயுத போராட்டமாக ஆரம்பிக்க முதல் காரணியாக இருந்த விடையம் சிங்களவன் எமது கல்வி மீது கை வைத்தது தான் அதாவது வெட்டு புள்ளி முறை அறிமுக படுத்தபட்ட விடையம் (தரப்படுத்தல்). உங்கள் கல்வியில் ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்கம் கைவைத்து கொண்டு இருக்கின்றதே அதை பார்த்தும் பார்க்காமல் இன்னும் பழங்கதை பேசி எமக்குள் சண்டை பிடிப்பதால் என்ன இலாபம்? அநியாயத்திற்கு எதிராக உண்மையில் குரல் கொடுத்தவன் பின்னால் திரளாமல் விட்டது எவ்வளவு கொடுமையான விடையம்?


ஆகவே அரசியல் வாதிகளையும் அரசியல் பேச்சையும் நம்பாமல் எம் இனம், எம் மொழி, "தமிழ் ஒன்றே அன்றி வேறு இல்லை என்ற சிந்தனையுடன் "யாவருக்கும் கல்வி"எம் தமிழ் உறவுகள் எங்கு வாழ்ந்தாலும் எம்மால் முடிந்த அடிப்படை கல்வியை இலவசமாக கொடுப்போம் .. எம் மண்ணையும் எம் இனத்தையும் மீட்க போராடுவோம் என்று உறுதி எடுப்போம்.
அன்புடன் நிலாகவி 

3 கருத்துகள்:

  1. அரசியல் வாதிகளையும் அரசியல் பேச்சையும் நம்பாமல் எம் இனம், எம் மொழி, "தமிழ் ஒன்றே அன்றி வேறு இல்லை என்ற சிந்தனையுடன் "யாவருக்கும் கல்வி"எம் தமிழ் உறவுகள் எங்கு வாழ்ந்தாலும் எம்மால் முடிந்த அடிப்படை கல்வியை இலவசமாக கொடுப்போம் .. எம் மண்ணையும் எம் இனத்தையும் மீட்க போராடுவோம் என்று உறுதி எடுப்போம்.
    ------யதார்த்தமான உண்மை தோழி .........வாழ்த்துகளுடன் உங்கள் செந்தில்......

    பதிலளிநீக்கு
  2. life is not depend upon the cast, community or blind spirituality it is depend of only Humanity & Wisdom of knowledge...thanks many to share & inspire me as myself to insist to write good things :)

    பதிலளிநீக்கு
  3. சகோதரி அருமையான ஒரு கட்டுரை, ஆனால் நம் நாட்டில் அழிக்கப்பட்டிருந்த சாதி மத வேற்றுமை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எல்லாமே மீண்டும் தலை தூக்க தொடங்கி விட்டது, இன்னும் அரசியல்வாதிகளை மக்களின் விடுவிற்கு துணை நிற்பார்கள் என்று நம்புவது ஊன்மையிலையே முட்டாள் தனம், அரசியல் வாதிகளுக்கு ஆட்சியும், சுவிஸ் வங்கியில் காசும் சேரனும் அதை விட மக்கள் என்பது வெறும் நாடகம் அவர்களுக்கு அதன் அங்கத்தவர்கள்தான் இந்த மக்கள் நம் அரசியல் வாதிகளுக்கு, நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இன்னும் ஜாதி மதம் பற்றி விவாதிப்பது வேதனைக்குரியவிடயம், இதை விட விவாதிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விடயங்கள் நிறையவே இருக்கின்றன, மொழி வளர பாடுபடுவோம் என்று நீங்கள் எழுதிய இந்த கட்டுரையில் எவளவு அழகாக ஒருவர் ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்திருக்கிறார், இப்படியானவர்கள் முதலில் ஆங்கில பகட்டில் இருந்து வெளி வர வேண்டும், ஆங்கிலயேனுடன் உங்கள் ஆங்கில திறமையை காட்டுங்கள் பாராட்டுகின்றேன், தமிழர்களுடன் உங்கள் தமிழ் திறமையை காட்ட முயற்சியுங்கள் வரவேற்கின்றேன், மதம் மனிதனை நெறிப்படுத்த உருவாக்க பட்டவை சரியாக அதை பின் பற்றினால் கவலை இல்லை, மதம் பிடிக்கும் ஆனால் எனக்கு மதவாதம் பிடிக்காது அது தேவையும் இல்லை, ஜாதி சரியாக பார்த்தால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதே தாழ்ந்தவர்கள் என்று எம்மால் ஒதுக்கப்பட்டவர்களாலயே என்பது தெளிவாகும், ஆகவே அவர்களின் உழைப்பிலயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதனால் நமக்கில்லை தகுதி அவர்களை தூற்ற, மனதில் கொள் மானிடா, நீ மனிதனாய் இரு மனித உருவில் மிருகமாய் மாறாதே, மற்றவருக்கு நீ உதவாட்டாலும் பறவாய் இல்லை உபத்திரவமாவது பண்ணாமல் இரு, நீ நலம் வாழ ஏன் பிறரை வதைக்கிறாய், உனக்கு தெரியுமா ஒன்று நீ மரணித்த பின்னர் உன் மாட மாளிகையில் உன்னை யாரும் அடக்கம் செய்யப் போவதில்லை, உன்னால் ஒதுக்கப் பட்டவன் வெட்டும் ஆறடி குழியே உன் வீடு,பார்த்தாயா அவன் எவளவு உன்னிலும் பார்க்க உயர்ந்தவன் என்று, உனக்காக ஒரு வீடு அவன் சமைத்து கொடுக்கிறானே நீ உறங்க நிரந்தரமாய்......

    பதிலளிநீக்கு