சுட்டு எரிக்கும் சூரியனும்
குளிர்ந்ததடி பெண்ணே
உன் வசிய புன்னகையால் ..... ஆழ பெருங்கடலும்
அமைதி கொண்டதடி
உன் இனிய குரல் கேட்டு
என் பூமி தாயும்
தலைகுனிந்து நிப்பாளே
உன் பொறுமையின்
குணம் கண்டு
எல்லாம் தெரிந்தும்
கையில் கிடைத்த
பூவே உன்னை கசக்கி
போட்ட பாவி நானே
உடலழகு கண்டு
நான் மயங்கி
நின்றபோதும்
உள அழகை நீ சொல்லி
போவாயே
இளமை வேகத்தில்
நான் செய்த
தப்பை எல்லாம்
அனுசரித்தே நின்றாயே
உன் காதல் எதுவென்று
புரியாமல் நானும்
உன் அழகை குத்தி காட்டி
வருத்தும் வேளையிலே
கண்ணாலே சிரிப்பாயே
என் உயிர் காதலியே
எங்கே நீ எங்கே
அன்று உன் கண்ணீரின்
வலிமையால்
நனையாத நிலவு கூட
நனைந்ததடி
அமைதியாய் நான்
அகங்காரம் கொண்டிருக்க
விடை பெறாமலே
நீ போனபோது
ஆண் திமிரில்
நெஞ்சை நிமிர்த்தி
நின்றேனே
நீ பிரிந்த பின்நாளில்
புரியாத உறவு கூட
புரிந்ததடி கண்ணே
என் காதல் எதுவென்று
நான் அறிந்த பின்னாலே
நீ தானே என் அழகு
தேசம்
தனியாக ஏங்கி
தவிக்கின்றேன்
நான் வந்திடடி
என் இனிய தேவதையே
தாய்மண்னை பிரிந்த தாய்ப் பறவை , அழகு தேசமதைக் காணத் துடிப்பதை இந்த வையகம் காண மறுக்கிறதே ! " என் அழகு தேசம் " சொல்லாக்கம் நன்று, வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு