திங்கள், 3 செப்டம்பர், 2012

இந்திய தமிழ் தலைவர்களே

நீங்கள் ஈழத்தில் யுத்தம் உக்கிரம் அடைந்து உச்சம் பெற்ற நேரம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நாம் அறிவோம். மாறி மாறி குற்றம் சுமத்துவதும் உங்கள் குடும்ப நலனுக்ககாக அம்மாவும் ஐயாவும் அடித்து கொள்ளுவதும் இடையிடையே உள்ளோம் ஐயா என்று பழநெடுமாறன் சார் சீமான் சார் திருமாவளவன் சார் ராமதாஸ் சார் குரல் கொடுப்பதும் 
விடுங்கள் சார் இரண்டு லட்சம் உயிர்களின் மீது ஏறி நின்று அரசியல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வீர வசனம் யாரும் பேச வேண்டாம். எமக்கு இழைக்கபட்ட துரோகமும் உங்கள் நரி குணமும் நாம் அறிவோம். மூடனாக இருப்பது நம் இனம் அதில் ஏறி நின்று சவாரி செய்கின்றீர்கள்.நீங்கள் எல்லோரும் காக்கை வன்னியன் கூட்டங்கள் என்பதை நாம் அறிவோம். புரிந்தும் புரியாமல் அறிந்தும் அறியாமல் தூங்கும் நம் இனம் தமது வீட்டுக்கு பிரச்சனை வரும் வரை உணர்ந்து கொள்ள போவதில்லை எமது வலியை.

எமக்கென ஒரு தேசம் வேண்டும் அதில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். நம் கனவு இன்று வீணாகி போனாலும் எமது தியாகமும் தாயக பற்றும் உண்மையாக இருந்தால் ஒரு நாள்  தமிழ் ஈழம் காண்போம். எம் கண்கள் உறங்கும் போதிலும் எமது ஆத்மா  சுதந்திர தேசத்தை காணும் வரை அமைதியாக உறக்கம் கொள்ள போவதில்லை.. மண்ணோடு மண்ணாக மறைந்து போன மாவீர செல்வங்கள் நாங்கள் .எமது விதை இன்னும் ஒரு ஜென்மத்தில் முளைத்து பலம் மிக்க வீரிய விருட்சமாய் வளரும். அதில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் கபடத்திற்கும் நிச்சயம் தண்டனையை கொடுப்போம் . தமிழ் வீரம் ஒருபோது அழிவதில்லை...................

இப்படிக்கு
மண்ணில் இருந்து
ஒரு மாவீரம்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக