புதன், 5 செப்டம்பர், 2012

ஆசிரிய பெருந்தகையே முதல் வணக்கம்


அறிவு கண்ணை 
அழகாய் திறந்த
ஆசிரிய பெருந்தகைகே
முதல் வணக்கம்
குருதின இந்நாளில்
 நன்றி சொல்லி
நைசாக நழுவி விட
என்றும் நான்
விரும்பவில்லை





தமிழ் கல்வி இங்கே
குறை மாத குழந்தையாய்
தனியே இருப்பதும்
ஆங்கில மோகத்தில்
எம்மினம் அங்கே அடங்கி
கிடப்பதும் ஆசிரிய
குலத்திற்கே எப்போதும்
இழுக்கல்லவவா?

வெள்ளக்காரன் நாட்டில்
பனியுதிர் காலத்திலும்
உறைய வைக்கும் குளிரிலும்
எம்மினிய தமிழுக்காய்
நாம் இங்கு தவிப்பதும்
நம் தேசம் ஏனோ
தமிழை மறப்பதும்
புரியாத புதிராய்
விடைகாணா கேள்வியாய்
என் மனதில்

ஆசிரிய தொழிலுக்கே
அவமான சின்னங்களாய்
சில நஞ்சு செடிகளை
களையெடுப்போம்
பணத்திற்காய் எமதுரிமை
கல்விகண்ணில் கைவைக்கும்
கயவர்களின் துகில் உரிப்போம்
வரலாற்று நாயகனின்
வழிவந்த நாம் வாசல் கதவை
சாத்திவிட்டு மறைந்து
இருப்பது சரியோ

மூத்த மொழியில்
மாற்றம் வேண்டும்
வாழும் வாழ்க்கைக்கான
தோற்றம் வேண்டும்
உலக மொழியாய்
மாற்ற வேண்டும்
மாறா சிந்தையுடன்
தமிழ் குலம் நாம்
வாழும் காலம் வரை
தமிழுக்காய் வாழ்வோம்
தமிழனாய் சாவோம் ................

நன்றியுடன்
நிலா




பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

1 கருத்து:

  1. //மூத்த மொழியில்
    மாற்றம் வேண்டும்
    வாழும் வாழ்க்கைக்கான
    தோற்றம் வேண்டும்
    உலக மொழியாய்
    மாற்ற வேண்டும்
    மாறா சிந்தையுடன்
    தமிழ் குலம் நாம்
    வாழும் காலம் வரை
    தமிழுக்காய் வாழ்வோம்
    தமிழனாய் சாவோம் //

    அருமையான வரிகள் !!!

    பதிலளிநீக்கு