சனி, 8 செப்டம்பர், 2012

நாட்டுவோம் எங்கள் புலி கொடியை.


ஈழத்தில் விளைந்த
எம்மின கொழுந்தை
நாலு சுவருக்குள்
நாற்காலி கனவுக்குள்
வீழ்ந்து கிடக்கும்
பாதக கூட்டம்
பந்தாடி விளையாடும்
நிலையை கண்டும்
கவி வடிக்க வாராமல்
அவர்கள் வலி புரியாமல்

சிப்பி சிரிப்பழகி
சிங்கார பேச்சு அழகி
தங்க நிற அழகி
தாமரை தோல் அழகி
விந்தை செயல் அழகி
விண்வெளியில் ஒரு அழகி
என் காதல் தேவதையே
என் நினைவின் நாயகியே
கண்ணின் கனிமொழியே
கண்டம் விட்டு கண்டம்
பாய்ந்த காதல் தீ மழையே
என்று புனையும்
புல்லுருவி கவிந்தகைகளே

நம் தேசம் அங்கே
நலிந்தே கிடக்குதையோ
வீர பெண்மகளின்
குருதி உறையுதையோ
கொடிய விச பாம்புகளின்
குட்டி பல வளருதங்கே
வீர தமிழச்சி மண்ணில்
வீழ்ந்துவிட கூட முடியலையே
காட்டு மிராண்டிகளின் கைபிடியில்
சிக்கிதான் மாளுதங்கே

வேளாங்கண்ணியில் சிங்கள
பொதுமக்கள் தாக்குதலாம்
ஆயிரமாயிரம் அறிக்கைகள்
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும்
கேடுகெட்ட மானிடமே
எம்மினம் அழியும்போதும்
எம் குழந்தை அலறும்போதும்
எங்கே நீ போய் இருந்தாய்
பஞ்சனை கட்டிலில் படுத்து
இருந்தாயா பல்லக்கு காவடியில்
உலகமெங்கும் அலைந்தாயா
இன்று
எம் கற்பு அழியும் போதும்
வஞ்சக சிறைக்குள் வாடி நாம்
கிடக்கும் போதும்
எங்கே உங்கள் மனிதநேயம் ?

எம் அண்ணன் போல ஒரு
வீரமகன் வருவானடா
எம்மினிய உறவுகளுக்கு
விடிவொன்று தருவானடா
வஞ்சக பாவிகளே வாழவந்த
கூட்டங்களே
காட்டி கொடுத்த கயவர்களே
கணக்கு ஒன்று இருக்கின்றது
காட்டுவோம் ஒரு தீர்வு
நாட்டுவோம் எம் கொடியை.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

1 கருத்து:

  1. எம் இனிய தலைவன் வருகைக்காக காத்து நிற்கின்றோம். ஆணவங்களின் செருக்கடக்க வருவான் என் தலைவன்.

    பதிலளிநீக்கு