புதன், 5 செப்டம்பர், 2012

பிடிச்சிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.


உன்னோடு நானும்
என்னோடு நீயும்
கைகோர்த்து நடக்கும்
நேரம் கன்னியர் உன்னை
நோட்டம் விடுவதும்
நீ என்னை மட்டுமே
நோட்டம் விடுவதும்
என் விழிபார்வையில்
நீயே உருகி போவதும்
பிடிச்சிருக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு

இருளான எனது
இரவிற்கு வானவில்லால்
கோலம் போட்டதும்
வற்றியிருந்த ஆற்றில்
இன்று வசந்தமுல்லை
பூத்து மணப்பதும்
தொலைதூர நிலவு
என்னை உன் நிழலோடு
நடக்க விட்டதும்
பிடிச்சிருக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு

முகம் காண முகவரியில்
நெடுநேரம் அலைஒலியில்
தடம் மாறி போகாமல்
ஒரு வார்த்தை பிசகாமல்
அன்பு சங்கிலியில்
இதயத்தை ஒருநொடியில்
இறுக்கி பிணைத்ததும்
கவிநேர சிந்தனையும்
நம் தலைவன் வழியிடையும்
உன்குரலில் தெரிவதும்
பிடிச்சிருக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு

தூய காதலில்
எனக்காகவே நீயும்
உனக்காகவே நானும்
மன்மதன் அம்பை
தொடாமலே
அருகே இருந்தும்
வரைமுறை மீறாமல்
என் இனம் விடியாமல்
மணம் வேண்டாம்
என்ற உன் துணிவும்
என் மனதில் நீங்காத
ஓவியமாய் உன் முகமும்
காலங்கள் கடந்தாலும்
உனக்காக காத்திருக்கும் என்
இரவு தனிமையும்
பிடிச்சிருக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு

அன்புடன் நிலா

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக