வியாழன், 25 அக்டோபர், 2012

மூத்த மொழி வந்த நாம் செய்த தவறு என்ன?


கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு முன்பே தோன்றிய மூத்த தமிழ் என்று எழுத்தில் எழுதி மட்டுமே வைத்துக்கொண்டு சந்தோசப்பட மட்டுமே எங்களால் முடிகின்றது. மொழிகளுக்கு எல்லாவற்றிகும் முன்னமே தோன்றிய மொழி வழிவந்த எம்மினத்தால் ஏன் உலகளாவிய ரீதியில் ஒரு சாதனையையும் கட்டிட கலையில் ஆகட்டும், பொருளாதார ரீதியில் ஆகட்டும், போராட்ட ரீதியில் ஆகட்டும்,விஞ்ஞான ரீதியில் ஆகட்டும், முன்னுக்கு  கொண்டு வர முடியவில்லை.

அப்படி எமக்குள்ள திறமைகளையும் சிந்தனைகளையும்  (தஞ்சை பெரும் கோயில். அன்குவார் கம்போடியா ,தாச்மகால். சீனாவில் உள்ள சிவன் கோவில்) காலம் காலமாக களவாட விட்டு விட்டு நாம் தமிழ் மக்கள் எம் இனம் தான் மூத்த இனம் என்று எம் இன குழுக்களிடம் மட்டும் மார் தட்டி கொள்ளுவதால் என்ன இலாபம்? இவ்வாறு ஒரு குறுகிய சிந்தனையில் எம்மை அடக்கி வைத்து வரலாற்றில் இருந்து எம்மை நீக்கி வைக்கும் இல்லை, கெட்டவர்களாக சித்தரிக்கும் சூத்திரதாரிகள் யார்?இதனை பற்றி நாம் எப்போதாவது சிந்தித்து உள்ளோமா?

ஆம் எம் இனம் காலம் காலமாக ஆண்டு வந்த இனம். அப்படி பட்ட இனம் இன்று அடிமைகளாகி நாடு நாடாக அகதிகாளாகி அலைந்து திரிவதன் மர்மம் என்ன? எல்லாவற்றிகும் ஒரே ஒரு விடைதான் ஒற்றுமை இல்லாமையும் துரோகமும் காட்டி கொடுப்பும் தான்.எம்மினத்தின் வரலாற்றை மூடி மறைப்பதில் பெரும் பங்காற்றுவது ஆளும் அரசியலும் வேற்றின சிந்தனையும் தான்.

எமது சமகாலத்திலேயே எம் கண் முன்னாலேயே எழுச்சி பெற்ற ஈழ விடுதலை போராட்டமானது இன்று முற்றாக நசுக்கபட்டு விடுதலை புலிகள் ஒரு பயங்கர வாதியாக சித்தரிக்கபட்ட சம்பவமானது இன்றைய பதிவு நாளைய வரலாறு. விடுதலை போராட்டங்கள் எமது இனத்தில் மட்டும் தான் தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கபடுகின்றது .

நாம் வரலாற்றை புரட்டி பார்த்தால் இஸ்ரேல் போராட்டம் , செச்சினிய போராட்டம் , உகண்டா போராட்டம்.சமீபத்தில் ஏற்பட்ட துனிசியா போராட்டம் எல்லாமே ஒடுக்கபட்ட இனங்களுக்கு எதிரான போராட்டமாகவும் அவை புதிய நாடுகள் உருவாவதற்கு வழி வகுக்கபட்ட பதிவாகவே கொள்ளப்படுகின்றது. இன்றைய பதிவுகள் யாவும் நாளைய  வரலாறு ஆகும் போது அவை உலகளாவிய ரீதியில் ஏற்று கொள்ளப்பட்ட நிகழ்வாகின்றது.

ஆகவே இறுதியாக எமது ஈழ விடுதலை போராட்டமானது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட பதிவானது விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் எதிராளர்கள் என்ற நிலையை தாண்டி எம் மொழிக்கும் எம் இனத்திற்கும் ஏற்பட்ட பின்னடைவாகவே நோக்கப்பட வேண்டி உள்ளது. உலகில் எந்த ஒரு மூலையில் வாழும் தமிழ் மக்களின் பின்னடைவாகவே நோக்கப் பட வேண்டும்.

ஆகவே பெரும் மதிப்புக்குரிய தமிழ் மக்களே, தமிழ் உறவுகளே!
எம்மால் எம் கண்முன்னே அழிந்து போன, இல்லை நசுக்கபட்ட விடுதலை வேட்கையை மீண்டும் கட்டி எழுப்புவதில் எம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. அண்ணன் பிரபாகரன் போல ஒரு ஆழ்ந்த சிந்தனையும் வழி நடத்தக்கூடிய ஆற்றலும் நேர்மையும் உள்ள ஒரு தலைவன் மீண்டும் எமக்கு தேவை. இன்றுள்ள தமிழ் மக்களில் இளமையான ஆற்றல் உள்ள இருபத்து ஐந்து வயதுக்கு குறைந்த நாட்டு பற்று நிறைந்த இளைஞர் யுவதி குளாமை ஒன்றிணைக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. எமது அண்ணனும் விடுதலை போராட்டத்தை எமது இளம் தலைமுறையிடம் தான் ஒப்படைத்தார். எமது மூத்த அரசியல் வாதிகள் எமது இளம் தலைமுறைக்கு கை கொடுக்க வேண்டியதும் அவர்களை வழிநடத்தும் வழிகாட்டியாக இருக்க வேண்டியதும் தலையாய கடமையாகும். எமது ஈழ போராட்டத்தை தலைமை தாங்கியது அண்ணன் பிரபாகரனாக இருந்தாலும் வழிநடத்தியதும் முக்கிய ஆலோசனை வழங்குவதும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் என்பதினை யாராலும் மறுக்க முடியாது.

ஆகவே மதிப்பான இளம் தலைமுறையே, மூத்த தலைமுறையே எமது ஈழ விடுதலையை கட்டி எழுப்ப, எம்மினிய மாவீர செல்வங்களின் மாதமாக கொண்டாடும் இப் பொன் மாதத்தில் உணர்வு பூர்வமாகவும் தூய மன சிந்தனையுடனும் ,இதய சுத்தியுடனும் உறுதி எடுத்து கொள்வோமாக
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம் 

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

2 கருத்துகள்:

  1. //எல்லாவற்றிகும் ஒரே ஒரு விடைதான் ஒற்றுமை இல்லாமையும் துரோகமும் காட்டி கொடுப்பும் தான்//
    சரி. ஒற்றுமை இல்லாமைக்கும், காட்டி கொடுப்பிற்குமான காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி உங்கள் பதிவுக்குள் புதிய உறவாக அடியெடுத்து வைக்கின்றேன்.....எம் இனம் இத்தகைய நிலைக்குள் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக ஒற்றுமையின்மை, துரோகத்தனம் தான் காரணம். இந்நிலையை மாற்றுவதென்பது மணலில் கயிறு திரிப்பதற்கு நிகர் என்றே சொல்லலாம். உங்கள் ஆக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள். தட்டச்சு செய்யும் போது ஏற்படும் தவறுகளை கவனமாக சரிபார்க்க வேண்டும். எம் தாய் மொழியில் ஒரு எழுத்து மாறினாலும் தவறான அர்த்தம் காட்டும். யுவதி குளாமை என்பது யுவதி குழாமை என்று வர வேண்டும். உங்கள் கவித் திறனுக்கும் ஆற்றலுக்கும் மத்தியில் நான் ஒரு சிறு புழு
    எனவே தப்பாக நினைக்காது இதனை சரி பார்த்துக் கொள்ளுங்கள்....மீண்டும் சந்திக்கின்றேன்....

    பதிலளிநீக்கு