வெள்ளி, 29 ஜூன், 2012

வெளிநாட்டு மாணவர்களும் பிரித்தானியாவும்



என்ன உறவுகளே தலைப்பு பிடிச்சிருக்கா, சில பல உண்மைகளை நேரடியாக அனுபவத்தில் பார்த்ததை மட்டும் தான் சொல்கின்றேன். வீணாக கோபப்படாதீர்கள் ...
"என்னடா வில்லங்கமா பேசுறா "என்று யோசிக்கின்றீர்களா? இது ஒரு வில்லங்கமான விடையம் தான்.
முதல் முதலில் வெளிநாட்டு மாணவர்களை தன்னகத்தே அரவணைத்து  கொண்ட நாடு பிரித்தானியா.
இப்போது என்னவென்றால் "ஸ்டுடென்ட் விசா" என்றால் சட்ட விதிகளை மிகவும் இறுக்கி உள்ளார்கள்.




அத்துடன் 2012 சித்திரை மாதத்தில் இருந்து  PSW ( POST STUDY WORK)அதாவது நீங்கள் எந்த துறையில் படித்தீர்களோ அந்த துறையில் ஒரு வேலை தகுதி பெறுவதற்காக "ஸ்டுடென்ட் விசா" முடிந்த பின்னர், ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட விசாவை இப்போது முவதுமாக நிறுத்தியுள்ளார்கள். படிப்பு  முடிந்தவுடன் எல்லா மாணவரும் மூட்டையை கட்ட வேண்டியது தான்.
அது மட்டுமா முன்னர் HSMP (HIGHLY SKILLED MIGRANT PROGRAMME ) அதாவது PSW முடிந்தபின்னர் HSMP விண்ணப்பிக்க முடியும். இப்போது பிரித்தானிய கம்பனிகள் ஸ்பொன்சர் பண்ணினால் மட்டுமே HSMP எடுக்க முடியும்.அதுவும் மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் சில வேலைகளுக்கு மட்டும் தான்.....
எதற்காக இப்படி திடீரென இந்த சட்டத்தை இறுக்கிவிட்டார்கள் என்று பார்த்தால்
அட வெளிநாட்டுக்கு படிக்க போகின்ற நம்ம மாதியான எல்லா மாணவர்களின் சேட்டை தான் காரணமாம்.
"அப்படி என்ன குசும்பு பண்ணிட்டாங்க" சொல்லுகின்றேன் கேளுங்கப்பா....

படிக்க என்று போய் விட்டு படிக்கமால் ரோட்டு சுத்தி திரிவதும் ,ஸ்டுடென்ட் விசா முடிய களவாக அகதி விசாவிற்கு வின்னப்பிக்கின்றார்களாம்
"ஸ்டுடென்ட் விசாவில்" வரும் மாணவர்கள் வாரத்திற்கு 20 மணித்தியாலம் மட்டும் தான் வேலை செய்ய முடியும். இவங்க என்னடா என்றால் குறைந்த சம்பளத்திற்கு முழு நாளும் வேலை செய்கின்றார்களாம்
அட பாவமே  சின்ன பசங்க உழைச்சுட்டு போகட்டும் என்று நாம விட்டாலும், வெள்ளை காரனுக்கு வேலை இல்லாமல் போக வேலை திண்டாட்டம் வருகின்றதில்லையா, .அப்போது அரசாங்கம் சும்மா இருக்குமா? சட்ட ரீதியற்ற முறையில் வேலை செய்பவரை எல்லாம் பார்சல் பண்ண வெளிக்கிட்டால் அதில் கூடியளவு ஆட்கள்  "ஸ்டுடென்ட் விசாவில்" வந்தவர்களாம்.
அட இது போக, இந்த மாணவர்கள் வந்தவுடன் சமத்துவ அடிப்படையில் நடைமுறை கணக்கை வங்கிகள் ஓபன் பண்ணி கொடுக்க, இந்த பசங்க செய்யும் குறும்பு தாங்க முடியலை. என்னன்னா பெரியா அளவிலான லோனை வங்கியில் இருந்து எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகிராங்கப்பா.
நம்ம நாட்டில வெளிநாட்டுகாரன் வந்து ஒரு" போன் சிம்" அட "ப்ரீ சிம் "தானப்பா வாங்க கேட்டாலும் அட்ரெஸ் ப்ருவ் கேப்பாங்க இல்லையா? ஆனா இந்த சின்ன பசங்க மிக விலை உயர்ந்த போனை உத்தரவாத அடிப்படையில் வாங்கி விட்டு (24மாதம்) முதல் மாதம் பில் கட்டிவிட்டு பின்னர் தமது நாட்டுக்கு பறந்து விடுறாங்கப்பா
அட இதுக்கும் மேல சில மன்னர்கள் போயி தமது வங்கி கணக்கை ஒரு பெரிய தொகையை வாங்கி கொண்டு வேறு நபருக்கு விற்று விடுவார்களாம் . அந்த கில்லாடிகள் ஒரு மூன்று மாதம் வங்கியை நன்றாக ரன் பண்ணி விட்டு பெரியா கடன் தொகையை எடுத்து விடுவார்களாம் . அப்போ கடனை வசூலிக்க வங்கியால் முடியாதல்லவா?
அப்புறம் இதையெல்லாம் பார்த்த வலது சாரி கட்சி சட்டத்தை இறுக்க வேணும் என்று முடிவு எடுத்து விட்டான்கப்பா .

இதில் என்ன வேதனையான விடையம் என்றால் நம் வரும் சந்ததியும், உண்மையாகவே படித்து முடித்த வெளிநாட்டு மாணவரும் பாதிக்கபடுகின்றார்கள் இல்லையா ?
ஒவ்வொரு தனி மனித சுயநலம் எப்படி அடுத்தவரை எமக்கு தெரியாமலே பாதிக்கின்றது பார்த்தீரா?
அன்புடன் நிலாகவி

3 கருத்துகள்:

  1. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  2. வருத்தமாகத்தான் இருக்கிறது...(நான் பிரித்தானியா வந்திருந்தால் நான்கூட அப்படித்தான் இருந்திருப்பேனோ?!!)

    பதிலளிநீக்கு
  3. தனி மனித ஒழுக்கம் தவறியதால் ஒரு கண்டத்தை சார்ந்தவர் அல்லாது அனைத்துக் கண்ட மக்களையும் சந்தேகப்படும் நிலை வந்தது..இதில் அந்நாட்டைச்சொல்லி வருந்துவதில் பயனில்லை.

    பதிலளிநீக்கு