இப்போ ஆபிசிலும் சரி காலேச்சிலும் சரி,கிரிக்கெட் தெரியாத ஒரு பெண்ணையோ,பையனையோ பார்க்க முடியவில்லை. "அட என்னடா இந்த பெண்ணு சுத்த விவரம் கெட்டவளா இருக்காளே" என்று புலம்புவது புரிகின்றது...ஏன்னா கிரிக்கெட் என்றால் என்ன என்று தெரியாத, பிறந்த ஒரு வயது குழந்தை கூட திரையில் தெரியும் அந்த விளையாட்டை புரியாத போதும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றது...
அடடா அதுக்கு என்ன இப்போ என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. என் வருத்தம் என்னவென்றால் இந்திய சனத்தொகை இப்போது 1.22பில்லியன். ஆஸ்திரேலியன் சனத்தொகை வெறும் 19.8 மில்லியன். அதிலும் இந்த 20:20 மச்சுக்கு விளையாட நம்ம நாட்டு மக்களுக்கு திறமை இல்லை என்று வெளிநாட்டில் இருந்து விளையாட்டு வீரரை ஸ்பொன்சர் செய்யுறாங்கப்பா.
இப்ப ஒரு விஷயம் எனக்கு புரியலை. என்னடா நம்ம ஆளுங்க கிரிகெட் மச் என்றாலே பசி, தூக்கம், குடும்பம், பிள்ளை, குட்டி எல்லாத்தையும் மறந்து அதிலேயே ஊறி இருப்பாங்களே அவங்களுக்கு கூடவா தங்கள் பிள்ளைகளை ஒரு சிறந்த கிரிக்கெட்டு வீரராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய் விட்டது . அட அதை விடுங்கப்பா பிறந்த குழந்தை கூட பிறந்ததில் இருந்து ஒரு விஷயத்தை பார்த்து வளருதே அதனிடம் கூடவா அந்த திறமை வாராமல் விட்டு விட்டது .
இல்லை! இதில் எங்கோ தப்பு உள்ளது. என்னன்னா அதில நீங்கள் என் பார்வையாளனாக மட்டுமே இருக்கின்றீர்கள். ஒரு பங்காளனாக வரலாமே. நீங்க வலிந்து உழைத்த பணம் எங்கோ ஒரு நாட்டிற்கு முதலாவது புரியவில்லையா? இத்தனை மக்கள் வாழும் ஒரு நாட்டில் உங்களை வளர விடாமல் அரசியல் சதி பண்ணுகின்றதே, பணக்கார வர்க்கம் ஆளுமை படுத்துகின்றதே புரியவில்லையா?
பிரித்தானியா கண்டு பிடித்த ஒரு விளையாட்டு தான் கிரிக்கெட். ஆனால் அவர்கள் அந்த விளையாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தராமல் அதை நம்ம போல உள்ள நாட்டில் உள்ளவர்களிடம் தள்ளி விட்டு குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் கால் பந்திற்கு போய் விட்டார்கள். நாம இது புரியாமல் எமது பொன்னான நேரத்தை இதில் செலவழிக்கின்றோம்....அதிலும் எந்த பிரதிபலனும் இன்றி .....
நேரம் பொன்னானது அதை மண்ணாக்காதே.....
அடடா சொல்ல மறந்துட்டேன், கிரிக்கேற்று எதிராக எழுதி விட்டேன் என்று தப்பாக நினைத்து கேஸ் போட்டுதாதிங்கப்பா
நிலாகவி மணியம்
பிரித்தானியா கண்டு பிடித்த ஒரு விளையாட்டு தான் கிரிக்கெட். ஆனால் அவர்கள் அந்த விளையாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தராமல் அதை நம்ம போல உள்ள நாட்டில் உள்ளவர்களிடம் தள்ளி விட்டு குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் கால் பந்திற்கு போய் விட்டார்கள். நாம இது புரியாமல் எமது பொன்னான நேரத்தை இதில் செலவழிக்கின்றோம்....அதிலும் எந்த பிரதிபலனும் இன்றி .....
பதிலளிநீக்குநேரம் பொன்னானது அதை மண்ணாக்காதே.....
-----------யதார்த்தம் ...உண்மை தோழி...வாழ்த்துகள் ...
உங்களின் எழுத்துகள் இந்த சமுகத்திற்கு எந்த வகையிலும் பயன்படும்......இன்னும் மெம்மேலும் உங்களின் கருத்துகளை கொஞ்சும் அழகு தமிழில் எனக்ளுக்கு அள்ளி அள்ளி தருமாறு மிக அன்புடன் கேட்டு கொள்கிறான் தோழி...வாழ்த்துகளுடன் உங்கள் செந்தில்..................
பதிலளிநீக்கு