எனக்கு எப்படியாவது ஒரு சிறந்த தமிழ் படைப்பாளியாக வரவேண்டும் என்று ஒரு ஆசை. ஏன் வெறி என்று கூட சொல்லலாம்.. சரி நான் இருப்பதோ ஒரு புலம் பெயர்ந்த நாட்டில். அதுக்கு என்ன தாராளமாய் வரலாமே என்று நீங்க நினைப்பது புரிகின்றது.. ஆனால் சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா? ஏதாவது அறிவுத்தீனிக்கு புத்தகம் படிக்கலாம், என்றால் யாராவது ஒரு எழுத்தாளனை விரும்பி அவர்களின் இலக்கியங்களை, எழுத்துக்களை படிக்கலாமே என்றால் ஒவ்வொரு எழுத்தாளனும் தமது தனிப்பட்ட சொந்த நலனுக்காக மற்ற எழுத்தாளரை தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்....
அப்போது என்ன நடக்கின்றது என்றால் எங்களை மாதிரி வெளிநாட்டு சூழலில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் சம்பந்தமான தேடல்கள் வருவதே அரிது ... அதையும் தாண்டி ஒன்று இரண்டு பேருக்கு வரும் போது இந்த மூத்த எழுத்தாளர்கள் ஆளாளுக்கு சண்டை பிடித்து, ஒருவரை ஒருவர் சமூக வலைதளத்தில் கேவலமாக எழுதுவதால், யாருடைய எழுத்தை படிப்பது என்ற குழப்பமும், எல்லா எழுத்தாளர்கள் மீது ஒரு வெறுப்பும் வருகின்றது.
ஒரு வீட்டுக்குள் தங்கள் கண் முன்னே உள்ள சொந்த தாயும் தந்தையும் அடிக்கடி சண்டை பிடித்து கொள்ளும் போதே குழந்தைகளால் தாங்க முடியாது போகின்றது .எப்போது இந்த சூழலில் இருந்து வெளியேறுவோம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள் . எங்கோ ஒரு மூலையில் எழுத்து என்று ஒன்றைமட்டுமே வைத்து இணைக்கும் எழுத்தாளர்கள் சண்டைபிடித்து கொள்வதால் தமிழ் மீது ஒரு வெறுப்பும் தமிழ் ஆக்கங்கள் மீது நம்பிக்கை இல்லாத எண்ணமும் வருகின்றது .
எனவே மதிப்புக்குரிய எல்லா மூத்த எழுத்தாளருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்" நீங்கள் உங்கள் தனிப்பட்ட காழ்புணர்வால் போடும் எழுத்து சண்டை எவ்வளவு ஒரு பெரிய சமூக சிக்கலை உருவாக்குகின்றது என்பதை புரிந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது ...
ஒரு ஆசிரியர் நன்றாக இருந்தால் தான் குழந்தைகளுக்கு அந்த பாடம் மீது ஒரு விருப்பும் ஆசையும் ஏற்படும். ஒரு வைத்தியன் கொடுக்கும் ஆறுதல் வார்த்தையில் தான் ஒரு நோயாளியின் மனதில் ஒரு தைரியம் ஏற்படும்.
நன்றியுடன் நிலாகவி
நன் படித்த தெரிந்த வரையில் எழுத்தாளர்கள் நட்புடன் தான் இருக்கிறார்கள்...நீங்கள் கண்டிப்பாக ஏதோ சிறு காரணகளுக்காக தமிழ் மொழி மீது வெறுப்பு கொள்ளுதல் வேண்டம்... உங்கள் பணியை மேலும் சிறப்புடன் செய்ய வாழ்த்துகிறேன், நன்றி ...GT
பதிலளிநீக்கு