புதன், 13 ஜூன், 2012

என் மாமனுக்காக காத்திருந்தேன்.




மாரியம்மன் கோவில்
மணியோசை கேட்டு
மனசெல்லாம் மத்தாப்பு
பூ ஒன்று பூத்து 
புலர் பொழுதும் நேரம்
உனக்காக பாத்திருந்தேன் 
வண்டி மாடு ஓட்டி செல்லும்
மாமன் இன்று வரல்லையே


லாந்தர் விளக்கொன்றை

லாவகமாய் ஏந்தி
சந்து பொத்தில் மறைந்து நிக்கும்
கரப்பான் தேளை தாண்டி
காதலன் உன்னை காண
காத தூரம் வந்தேன்
அந்த காளையவன் வந்த பாத 
சுவடு ஒன்றையும் காணோம் 

நிமிடமும் மணியாகி
கதிரவன் மேலேறி 
உச்சி வந்திட்டான் என்
பூ பாதம் தணலாச்சு 
காணும் காட்சி மாற்றமாகி
உள்ளம் உருகும் நேரமதில் 
அந்த உத்தமனின் உயிர்ப்பான
குரலை இன்னும் காணலையே 

என்காதல் கரையேற
என்மாமன் வருவானா 
என்சாவின் பாடை தூக்க
தன்கையை தருவானா
இன்னொருத்தி மடிமீது
என்மாமன் சாய்வானா
இன்னொரு ஜென்மத்தில் 
என் மகனாய் பிறப்பானா...

உறவுகளே உங்கள் கருத்துக்களையும் சொல்லலாம்...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக