சனி, 30 ஜூன், 2012

நட்பு மட்டும்



நான் என் வலைத்தளத்தில் ஐநூறு நண்பர்களை மட்டும் தான் வைத்துக்கொள்ள விரும்புகின்றேன். அந்த ஐநூறு நண்பர்களும் உண்மையானவர்களாகவும், ஒத்த சிந்தனை கருத்து உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எனக்கு ஐயாயிரம் நண்பர்களை எல்லாம் வைத்து சமாளிக்க முடியாது.அத்துடன் என் வலைதளத்தில் உள்ள அந்த ஐநூறு பேருடனும் வாரத்தில் ஒரு தடவையாவது பேச வேண்டும் என்று விரும்புகின்றேன்



எனது விருப்பம் என்னவென்றால் ஒரு ஐநூறு பேராவது நல்ல நண்பர்களாக எமக்கும் எம் ஆக்கங்களுக்கும் ஊக்கம் தருபவராகவும் அவர்களது ஆக்கங்களுக்கு நான் முடிந்த அளவு ஊக்கம் கொடுப்பவளாக மட்டுமே இருக்க விரும்புகின்றேன்.

நட்பு என்பது என்ன என்பதையும், முகம் தெரியாமல் அவர்களுடன் அவர்களின் உண்மையான அக அழகையும் மட்டுமே காண விரும்புகின்றேன். என் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை .எனது எழுத்தையும் அவர்களது எழுத்தையும் கருத்துக்களையும் சீர் தூக்கி பார்க்கும் சுதந்திரம் எப்போதும் உண்டு . அப்படி பட்ட உறவுகளே என்னுடன் உங்கள் கையை சேருங்கள் ......

சில நல்ல உள்ளங்கள் எனது தகவல்களை ஸ்பாம் என்று தெரிவித்த காரணத்தால் எனக்கு தகவல்களை அனுப்ப முடியாது உள்ளது.அதே போல சிலர் என்னை பிளாக் பண்ணி உள்ளார்கள் அதனால் நான் யாரையும் நண்பராக சேர்க்க முடியாது உள்ளது .

ஆகவே அன்பு நண்பர்களே உறவுகளே உண்மை நட்புள்ளவர்கள் மட்டும் கை கோருங்கள்
நிலாகவி

3 கருத்துகள்:

  1. நட்புக்கு முகம் தேவையிலை உண்மையான நட்பு..அழகு ,பணம் ,பதவி ,சாதி ,இவைகள் கடந்து வரும் ,,நான் இலங்கையில் வாழும் தமிழன் என் மக்களை ஆழமாக நேசிப்பவன் ..எனது நட்பு மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இணைக்கலாம்

    பதிலளிநீக்கு