"கவி புலவன்" என எல்லோராலும் போற்றப்படும் பாரதியாரின் இந்த குறிப்பிட்ட கவிதை என்று சொன்னாலும் சரி, பாடல் என்று சொன்னாலும் சரி. எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. இந்த கவிதையை "அகரமுதலி " என்ற நண்பனா ,நண்பியா, புலவரா தெரியவில்லை பதிவு செய்துள்ளார். இதற்கு நூற்றி அறுபத்து ஏழு பேர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள் . முன்னூற்று பதினெட்டு பேர் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்....
இதில் வரும் அர்த்தம் புரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு கொஞ்சம் சொல்லி தரவும் ..........
இந்த வரி நடையை பார்க்கும் போது ஒரு விரக்தியும் வெறுமையும் தெரிகின்றது.அத்தோடு ஒரு தெளிவான கருத்தை முன் வைக்க முயலவில்லை. எல்லாமே கனவு என்றால் நாம் இந்த மானிடப்பிறப்பில் செய்வதற்கு ஒன்றும் இல்லை அல்லவா? "சாதிகள் இல்லையடி பாப்பா" "காணி நிலம் வேண்டும்" என்று பல புரட்சித்தனமான கவிதையை முன் வைத்த பாரதியார் அதே சம காலத்தில் இப்படிப்பட்ட தெளிவில்லா ,விரக்தியான, வெறுமையான முன்னுக்கு பின்னுக்கு முரணான ஒரு பாடலை முன்வைத்திருப்பது சரியா என்று கூட எனக்கு தெரியவில்லை.... பாரதியார் பாடிவிட்டார் என்பதற்காக அவரின் எல்லா எழுத்தும் சரி என்று நாம் சொல்லி விட முடியாது இல்லையா?
சிந்திக்க தெரிந்த விலங்கினம் தான் நாங்கள்இந்த வரி நடையை பார்க்கும் போது ஒரு விரக்தியும் வெறுமையும் தெரிகின்றது.அத்தோடு ஒரு தெளிவான கருத்தை முன் வைக்க முயலவில்லை. எல்லாமே கனவு என்றால் நாம் இந்த மானிடப்பிறப்பில் செய்வதற்கு ஒன்றும் இல்லை அல்லவா? "சாதிகள் இல்லையடி பாப்பா" "காணி நிலம் வேண்டும்" என்று பல புரட்சித்தனமான கவிதையை முன் வைத்த பாரதியார் அதே சம காலத்தில் இப்படிப்பட்ட தெளிவில்லா ,விரக்தியான, வெறுமையான முன்னுக்கு பின்னுக்கு முரணான ஒரு பாடலை முன்வைத்திருப்பது சரியா என்று கூட எனக்கு தெரியவில்லை.... பாரதியார் பாடிவிட்டார் என்பதற்காக அவரின் எல்லா எழுத்தும் சரி என்று நாம் சொல்லி விட முடியாது இல்லையா?
சிந்தித்து வாழ்வோம் சிந்தையில் மகிழ்வோம்
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ பல தோற்றமயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளம்வெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதினால்
நானும் பொய் தானோ இந்த ஞாலமும் பொய் தானோ
காலமென்றே ஒரு நினைவும் காட்சி ஒன்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அதில் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைந்ததெல்லாம்
காண்பமன்றோ
பாடல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பாடப்பட்டிருக்கலாம். அதனால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
பதிலளிநீக்குநல்ல பதிவு. நன்றி.
Please avoid word verification process.
பாரதியாரின் வாழ்க்கைச் சரிதம் ’பாரதி’என்ற பெயரிலேயே படமாக வந்தது. அதில் இந்தக் கவிதை வரிகள் பாடலாக இளையராஜா இசையில் உள்ளது. அதைப் பார்த்தால் உங்களுக்கு அர்த்தம் புலப்படும் என்று நினைக்கிறேன். அந்தப் பாடலின் விஷுவல் லிங்க்: http://www.youtube.com/watch?v=nx91opkZ09I
பதிலளிநீக்குஇதற்கு எனது பதில் மெளனம்தான்...
பதிலளிநீக்கு