வெள்ளி, 15 ஜூன், 2012

என் அம்மாவா இப்படி ஒரு சிறுகதை...

நிலாகவி மணியம் எழுதும் சிறுகதை

என் அம்மாவா இப்படி?

பவித்திராவிற்கு ஒரே அழுகை அழுகையாக வந்தது. நான்கு வருடமா ரொம்ப உண்மையாக காதலித்து  மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது
அவளுக்கு.காதல்  பண்ணும் போது எப்போதுமே செல்லமா கொஞ்சும் அரவிந்த் இப்போ சுத்தமா மாறியிருப்பதை அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை.மாமியார் வீட்டில் அவளுக்கு நின்மதி என்பது கிடைக்காமல் போய் விட்டு இருந்தது . இவ்வளவிற்கும் அவர்களின் காதல், இரு வீட்டினரின் சம்மதத்துடன் தான் நிறைவேறியது.

ஆனால் இப்பொது எல்லாம் அரவிந்தின் அம்மாவிற்கு ஏனோ பவித்திராவை பிடிக்காமல் போய் விட்டது. பவித்திராவின் குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்.பவித்திராவிற்கு தேவையான வரதட்சனை  எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து தான் அனுப்பி வைத்தார்கள். இருந்தும் அவளை ஏன் பிடிக்காமல் விட்டது? என்று அவளுக்கு புரியவில்லை. எதற்கு எடுத்தாலும் குறை சொல்வதை அவளால் தாங்க முடியாது இருந்தது.

அவளது வீட்டில் எப்போதுமே எட்டு மணிக்கு தான் அவள் எழுந்திருப்பாள். எழுந்தவுடன் அவள் அம்மா அவளுக்கு "நித்திரை பாயில் தேநீர்" கொடுப்பார்கள். இங்க எதுவும் கிடைப்பதுமில்லை ,அவளை தூங்க விடுவதுமில்லை.

அவள் எழும்பி வரும் நேரம் காலை பத்து மணி  ஆகி இருக்கும். காலை சாப்பாடும் அதையும் அவள் தான் செய்து சாப்பிட வேண்டி இருந்தது.அரவிந்த் அதிகாலையில் எழுந்து எட்டு மணியளவில் வேலைக்கு கிளம்பி இருப்பான். கூடுதலான நேரம் அவனை அவள் காலை வேளையில் சந்திப்பதே மிகவும் அரிதாக இருந்தது.

திருமணமான முதல் மாதம் எல்லாவற்றையும் அவளது மாமியார் செய்து வைத்து அவளை எழுப்பி "நித்திரை பாயில் தேநீர்" கொடுத்தார்கள். அவளுக்கும் முதல் மாதம் அவளது வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அடுத்த மாதம் காலை சாப்பாடு  மட்டும் செய்து கொடுத்தர்கள். மூன்றாம் மாதம் எதுவே செய்வதில்லை அதில் அவளில் குற்றம் வேறு சொல்கிறார்கள்.

அவளுக்கு பிடித்த தொலைக்காட்சி  நிகழ்ச்சி கூட பார்க்க முடியவில்லை. அவளுக்கு பிடித்த உடையை அணிய முடியவில்லை. காதலிக்கும் போது " நீ உன்னை மாற்ற தேவையில்லை,உன் வீட்டில் எப்படி இருக்கிறாயோ, நீ அப்படியே என் வீட்டில் இருக்கலாம் என்று சொன்ன அரவிந்த்" இப்போ எதை பற்றி அவள் கதைத்தாலும் அமைதியாக  இருப்பது, அவளுக்கு எல்லையிலா ஆத்திரத்தை கொடுத்தது.

இன்று அரவிந்த் வந்ததும் அவனுடன் வாழ்வதா ?இல்லை! என் அம்மா அப்பா வீட்டில் நிரந்தரமாய் வாழ்வதா ? என்று முடிவெடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் பவித்திரா.

அரவிந்த் வேலையில் இருந்து வந்ததும் "நாம ஏன் தனி குடித்தனம் போக கூடாது" என்றாள் பவித்திரா.
அரவிந்துக்கு ஒரே சிரிப்பாக வந்தது. தனிக்குடித்தனமா ?என்ன விளையாடுறியா? என்று கேட்டான் அவன்.
"ம்ம்ம் நான் உண்மையாதான் பேசுறன் நாங்கள் தனிக்குடித்தனம் போகலாம்" என்றாள் பவித்திரா
"உன்னையே உன்னால் பாத்துக்க முடியலை, இதில் தனிக்குடித்தனம் வேறயா?" என்று நக்கலாக கேட்டான் அரவிந்த்.
"என்னை பாத்துக்கு தெரியாத நான், உனக்கு தேவையில்லை,எவ்வளவு செல்லமாக இருந்தேன் எங்கள் வீட்டில்,. ராணி மாதிரி என்னை கவனித்து கொள்வார்கள் என் அம்மா வீட்டில்" ! என்று சொல்லிவிட்டு கோபமாக வீட்டை விட்டு வெளியேறினாள் பவித்திரா.

அவளது பிறந்த வீட்டிற்கு சென்ற பவித்திரா தாயிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினாள். அமைதியாக கேட்டுக்கொண்ட தாய் அவளுக்கு எதுவுமே சொல்லவில்லை.மறுநாள் காலையில் பவித்திரா எட்டுமணியளவில் எழுந்து தாயிடம் தேநீர் கேட்டாள்.

அதற்கு அவளது அம்மா அவளையே தயாரித்து குடிக்க சொன்னது சிறு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவள் அதை வெளிக்காட்டவில்லை." காலை நேர சாப்பாடும்  மதியம் சாப்பாடும் எல்லாவற்றையும் பவித்திராவே செய்யவேண்டும்" என்று அவளது அம்மா சொன்னபோது அவளுக்கு சரியான கோபம் வந்தது.

அதை தவிர அவளுக்கு பிடித்த தொலைக்காட்சி  நிகழ்ச்சி கூட அவளது வீட்டில் பார்க்க முடியவில்லை.எல்லாவற்றுக்கும் மேலாக அவள் ஒரு நாள் தங்குவதாக இருந்தாலும் வீட்டுக்கு வாடகை தரவேண்டும் ,என்று சொன்னது அவளுக்கு பெரும் இடியாக இருந்தது அவளுக்கு தான் இன்னும் வேலை கிடைக்கவில்லையே, எப்படி காசு கொடுப்பது என்று அவளுக்கு புரியவில்லை.

பவித்திரா மிகுந்த கோபத்துடன் அவளது அம்மாவிடம் கேட்டாள், "நான் உனது பொண்ணு இல்லையா? என்னிடமே வீட்டில் தங்க காசு கேக்கிறியே, அவ்வளவு பணத்தாசை உனக்கு வந்து விட்டதா?" என்று
அதற்கு அவளது அம்மா , நீ இந்த வீட்டை விட்டு திருமணமாகி போய் விட்டாய் இனிமேல் உன் கணவர் தான் உனக்கு எல்லாம் செய்ய வேண்டும் நீ இங்கு இல்லை எங்கும் உன் கணவனை விட்டு தனியே போய் தங்க முடியாது அப்படி நீ தங்கினால் அதற்கு மிகவும் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்றாள்.
"பெத்த பெண்ணிடமே இவ்வளவு தூரம் பேசும் உன்னுடன் ஒப்பிடும் போது , எனது மாமியாரும் கணவனும் எத்தனையோ மடங்கு மேல், இனிமேல் அவர்களை விட்டு விட்டு ஒருபோதும் உன் வீட்டு வாசல் படி மிதிக்கமாட்டேன் "என்று சொல்லி விட்டு அவளது பிறந்த வீட்டை விட்டு வெளியேறினாள் பவித்திரா .

அருகில் அமர்ந்திருந்த பவித்திராவின் அப்பாவிற்கு எதுவுமே புரியவில்லை.
என்னம்மா லக்சுமி இது எல்லாம் ? என்று கேட்டார்.
"இல்லை அப்பா நான் ரொம்ப செல்லம் கொடுத்து, என் மகளை கெடுத்து விட்டேன்".
என் பொண்ணு கஷ்ரப்படக்கூடாது ,என்று அவளிடம் எதையும் சொல்லி கொடுக்காமல் வளர்த்து விட்டேன் .

அவள் மாப்பிள்ளையுடன் சண்டைபிடித்து கிளம்பியவுடன் சம்மந்தி எனக்கு போன் போட்டு எல்லாவற்றையும் சொன்னார் . அப்போது தான் தெரிந்தது, எப்படி நான் என் பெண்ணை வளர்த்து விட்டேன் என்று!."ஒரு பெண் குழந்தையாய் பிறந்தால் தெரிய வேண்டிய அடிப்படை கடமையை"! ,அதாவது வீட்டு வேலை, ஒழுங்கு ,பெரியோரை மதிக்கும் பண்பு எதையும் அவளுக்கு நான் சொல்லி கொடுக்கவில்லை,என் தவறால் என் குழந்தையின் எதிர்காலமே பாதிக்க படபோவதை ,நான் அறியவில்லை.

இப்போ ஒரு வெறுப்பு அவளுக்கு என்னில்! "ஆனால் எப்போதாவது ஒருநாள் அவளுக்கு அது புரியும் என்று சொல்லி கண்ணீர் வடித்தாள் "அவளது அம்மா.தனது மனைவியை ஆதரவுடன் அனைத்து கொண்டார் கார்த்திகேயன் .

உங்கள் கருத்துகளை எதிர்ப்பார்க்கின்றோம்...

5 கருத்துகள்:

  1. அருமை. படிப்பினையூட்டும் கதையைப் படைத்திருக்கிறீர்கள்.இப்படி நல்ல கருத்துக்களை கருவாக வைத்து கதைகளை எழுதுவீர்களென எதிபார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. அருமை. படிப்பினையூட்டும் கதையைப் படைத்திருக்கிறீர்கள்.இப்படி நல்ல கருத்துக்களை கருவாக வைத்து கதைகளை எழுதுவீர்களென எதிபார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. அருமை. படிப்பினையூட்டும் கதையைப் படைத்திருக்கிறீர்கள்.இப்படி நல்ல கருத்துக்களை கருவாக வைத்து கதைகளை எழுதுவீர்களென எதிபார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. பரவா இல்லை நிலா நல்ல முயற்சி எழுதுங்கள்,எழுத எழுத எழுத்து சூடு பிடிக்கும்,விஷய ஞானம் போதாது இன்றைக்கு ட்ரெண்டுக்கு தகுந்தா மாதிரி டிடெக்டிவ் நாவல் அதுல சமுதாய செய்தி ,அழகான காதல் ரசம் இப்படி ட்ரை பன்னுங்க எனக்கு கதை எழுத வரும்,அது சினிமாவுக்கு மட்டும் உங்கள் அளவுக்கு எழுத பொறுமை இல்லை,இந்த ஒரு கதைதான் படிக்க முடிந்தது அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் - வாழ்த்துக்கள் அன்புடன் ஓம்

    பதிலளிநீக்கு