புலம் பெயர் தேச தமிழனே
நாற்காலி போட்டி எதுக்கடா
நாடு விட்டு நாடு வந்தாலும்
காலம் முழுதும் வாழ முடிந்தாலும்
உன் பெயர் எப்போதும் அகதி தானடா...
நாற்காலி போட்டி எதுக்கடா
நாடு விட்டு நாடு வந்தாலும்
காலம் முழுதும் வாழ முடிந்தாலும்
உன் பெயர் எப்போதும் அகதி தானடா...
கற்பை வித்து வாழ்க்கை போகுது
சினிமாகாரனுக்கு அபிஷேகம் நடக்குது
மானம் காத்த தமிழன் நீயடா
உன்தேச நாட்டை திரும்பி பாரடா...
சினிமாகாரனுக்கு அபிஷேகம் நடக்குது
மானம் காத்த தமிழன் நீயடா
உன்தேச நாட்டை திரும்பி பாரடா...
விலையில்லா பல உயிரும் போகுது
பிழையில்லா சிறு பிஞ்சும் அழியுது
சிங்களவன் உடலை கிழிக்கின்றான்
நீ உந்தன் மக்கள் உயிரை எடுக்கின்றாய் ...
பிழையில்லா சிறு பிஞ்சும் அழியுது
சிங்களவன் உடலை கிழிக்கின்றான்
நீ உந்தன் மக்கள் உயிரை எடுக்கின்றாய் ...
கனவு கண்டு இன்னும் வாழுறோம்
எமை காப்பாய் என்று நம்பி போகிறோம்
குஞ்சு ஒன்று வாடி கிடக்குது
ஒரு வயிறு சோறுக்காக ஏங்கி தவிக்குது...
எமை காப்பாய் என்று நம்பி போகிறோம்
குஞ்சு ஒன்று வாடி கிடக்குது
ஒரு வயிறு சோறுக்காக ஏங்கி தவிக்குது...
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக