வெள்ளி, 22 ஜூன், 2012

அவள் வருவாளா குறும்பட சிறுகதை.

நிலா கவி மணியம் எழுதும் சிறுகதை
அவள் வருவாளா?


வழமையான உற்சாகத்துடன் தனது ஸ்கூட்டியை வேகமாக வீடு நோக்கி ஓட்டினாள் ஸ்வேதா. சரியாக ஐந்து மணிக்கு அவள் இன்டர்நெட் கபேக்கு செல்ல வேண்டும் , ஏனென்றால் அவளது நண்பன் அவளுக்காக ஆன்லைனில் காத்து கொண்டு இருப்பான். அதற்குள் வீட்டுக்கு சென்று ரெடி ஆகவேண்டும் .
இன்டர்நெட் சென்டர் போவது என்றால் அவளது அம்மாவை வேறு சமாதானப்படுத்த வேண்டும்.இப்போது நாட்டில் நடக்கும் விசயங்களை செய்திதாளில் படித்துவிட்டு இண்டர்கபே என்றால் எதோ போககூடாத இடம் என்று அவளது அம்மா எண்ணிக்கொண்டு இருக்கின்றார்.இப்போதுள்ள பத்திரிகைகளும் அப்படிதானே தமது இலாபத்துக்காக ஒரு விஷயத்தை பின்னி பின்னி பல மடங்காக எழுதி விடுகின்றார்கள்.வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் ஸ்கூட்டியை நிறுத்தினாள் ஸ்வேதா.அவசர அவசரமாக முகம் கைகால் அலம்பிக்கொண்டு சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தாள் ஸ்வேதா.அவளது தாயார் வைத்த கத்தரிக்காய் வத்தல் குழம்பும், அப்பள பொரியலும் அவளது பசியை மேலும் அதிகமாக்கியது.மள மள என்று ஒரு கை பார்த்தாள் அவள்.

"அம்மா ஐந்து மணியளவில் நான் இன்டர்நெட் சென்டர் போகவேண்டும்" என்றாள் ஸ்வேதா.
"எதற்கு அங்கு போகிறாய் ஸ்வேதா? ஊர் உலகம் கெட்டு கிடக்கு" என்றாள் அவளது அம்மா.
"இல்லை அம்மா! ஒரு வொர்க் முடிக்கவேண்டும், நாளைக்கு தான் கடைசி நாள்" என்றாள் ஸ்வேதா
"ஓகே, சீக்கிரமாய் வீட்டுக்கு வந்துவிடு" என்று வழியனுப்பி வைத்தாள் அவளது அம்மா.
"ஐயோ இப்பவே மனியாயிடிச்சு, இன்னும் பத்து நிமிடத்தில் இன்டர்நெட் சென்டரில் இருக்க வேண்டுமே , இல்லாவிட்டால் அவளது நண்பனை அவளால் இன்று பார்க்கமுடியாது, போய்விடும்" என்று எண்ணி கொண்டாள் ஸ்வேதா.

ஸ்கூட்டி முன்னோக்கி செல்ல, அவளது எண்ணஅலைகள் பின்னோக்கி சென்றது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், ஸ்வேதா அவளது தோழியருடன் சேர்ந்து இன்டர்நெட் சென்டருக்கு சென்றிருந்தாள்.
"ஹாய் ஸ்வேதா!, நாங்கள் எல்லோரும் சட்ரூம் போகிறோம், நீ என்ன செய்யபோகிறாய்?" என்றாள் அஸ்வதி
இல்லை! எனக்கு ஹோம்வொர்க் இருக்கு,நான் அதை முடிக்கின்றேன்,நீங்கள் சாட்டில் பேசுங்கள்" என்றாள் ஸ்வேதா
ஸ்வேதா தனது ஹோம்வோர்கில் மூழ்கியிருந்தாள்.
"ஹாய் ஸ்வேதா! உன்னை மாதிரி ஒரு உம்மனாமூஞ்சியடி, சாட்ரூமில்" என்றாள் அஸ்வதி
"என்னடி சொல்கிறாய்? எனக்கு புரியவில்லை" என்றாள் ஸ்வேதா
"இல்லடி! நானும் ஒரு ஓன் அவரா பேசி பார்கின்றேன், அவன் பிடி கொடுத்து பேசவில்லை" என்றாள் அஸ்வதி
திடீரென ஸ்வேதாவுக்கு அவனுடன் பேச வேண்டும் போல இருந்தது.

அஸ்வதியருகில் சென்று அமர்ந்து கொண்டாள் அவள்.
"ஹல்லோ" என்றாள் ஸ்வேதா
"ஹல்லோ" என்று பதில் வந்தது
"என் பேர் ஸ்வேதா, உங்கள் பேர் என்ன?" என்றாள் அவள்
"தருண்" என்று பதில் வந்தது
"ஹாய் தருண்"! என்ன பண்ணுகின்றீர்கள்?" என்றாள் ஸ்வேதா
"நான் ஒரு தனியார் கம்பனில், வொர்க் பண்ணுகின்றேன்" என்றான் அவன்
"ஒகே! நான் காலேச்சில், மூன்றாம் ஆண்டு பீ.காம் மாணவி "என்றாள் அவள்
"சரி , நான் எனது இமெயில் தருகின்றேன், முடிந்தால் இமெயில் அனுப்புங்கள்" என்றாள் அவள்
அவளை மேலிருந்து கீழாக பார்த்தாள் அஸ்வதி

"என்னடி நீ பைத்தியமா"?என்றாள் அவள்
"இல்லடி! எனக்கே தெரியலை, தருண் இஸ் எ குட் பெர்சன்" என்றாள் ஸ்வேதா .
ஒவ்வொரு நாளும் அவளது காலேச்சில் உள்ள இன்டர்நெட் ரூமில் மெயில் செக் செய்தாள் ஸ்வேதா
அவளது செய்கையை பார்த்து தமக்குள்ளேயே சிரித்து கொண்டார்கள் அவளது தோழிகள்.
நான்காம் நாள் காலை அவளுக்கு ஒரு மெயில் வந்து இருந்தது. தருண் தான்அனுப்பியிருந்தான்.

"ஹாய் ஸ்வேதா ஹொவ் ஆர் யு?. ஐ ஆம் குட். பட் மை ரியல் நேம் இஸ் ஹரிசரண்". என்று இருந்தது .
அவளுக்கு அவள் கண்களை நம்பவே முடியவில்லை.
"ஹாய் ஹரிசரண், ஐ டிடின்ட் லைய் டு யு. மை நேம் இஸ் ஸ்வேதா. எதற்கு எனக்கு பொய் சொன்னீர்கள்?" என்று பதில் அனுப்பினாள் அவள்.
இவ்வாறு ஆரம்பித்த அவர்களின் நட்பு , இன்று மிகவும் நெருக்கமாகி, ஒருவரை ஒருவர் காதலித்து கொண்டு இருக்கின்றார்கள்,. ஆனால் இருவருமே அதை வெளிக்காட்டவில்லை.
அவளது தோழியருக்கு, அவனை அவளது நண்பன் என்று மட்டும் தான் தெரியும்.

"ஏன் ஸ்வேதா? இருவரும் ஆன்லையினில் பேசத்தொடங்கி, ஒரு வருடம் ஆகி விட்டது ,எனக்கு உன்னை பார்க்க வேணும் போல உள்ளது" என்று நேற்று மெயில் அனுப்பி இருந்தான்.இன்று இருவரும் முகம் பார்த்து பேச போகின்றார்கள்.அதையும் அவன்தான் சொன்னான்.

இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் போய் விடுவேன், என்று எண்ணி கொண்டு தனது ஸ்கூட்டியின் வேகத்தை அதிகபடுத்தினாள் ஸ்வேதா. எதிரில் தெரிந்த சிக்னல் திடீரென பச்சையில் இருந்து மஞ்சளுக்கு மாறியது. அவளது ஸ்கூட்டியின் வேகத்தால் அவளால் அதை நிறுத்தமுடியவில்லை,அவளையும் மீறி அவளது ஸ்கூட்டி முன்னே பாய்ந்தது .
குறுக்கு ரோட்டில் இருந்து வேகமாக வந்த கார், அவளது ஸ்கூட்டியை வேகமாக இடித்து தள்ளியது.

காரில் இருந்த அவனுக்கு மிகவும் கோபமாக இருந்தது, இந்த பொண்ணுக்கு வேறு வாகனம் கிடைக்கவில்லையா? போய் விழுவதற்கு ,என்று அலுத்துக்கொண்டான் அவன். போலீசுக்கும், அம்புலஞ்சுக்கும் தெரிவித்துவிட்டு தனது வண்டியை ஒட்டிக்கொண்டு சென்றான் அவன்.

அவன் வீட்டுக்கு போய் சேரும்போது , மணி ஆறை தாண்டி விட்டு இருந்தது. இனிமேல் ஸ்வேதா ஆன்லைனில் இருக்க மாட்டாள், என்று தெரியும் அவனுக்கு. "அவள் முதலிலேயே சொல்லி இருந்தாள், அவளது குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கம் என்றும், அவளது வீட்டில் கணணி இல்லை என்றும், அவள் வெளியில் வந்து தான் பேசுவதாகவும் எனவே குளித்து விட்டு வந்து சாப்பிட்டு விட்டு, ஸ்வேதாவிற்கு மெயில் அனுப்பவேண்டும் "என்று எண்ணிகொண்டான் அவன்.

"ஹாய் ஸ்வேதா ! என்னை மன்னித்துவிடு . நான் வரும் வழியில் ஒரு ஆக்சிடன்ட், அதனால் இன்று உன்னை முகம் பார்த்து பேசமுடியாது, போய் விட்டது .உன்னை எனக்கு பாக்கணும் போல இருக்கடா. எனக்கு தெரியும்," நீ என் தேவதை". எப்படி நீ இருந்தாலும் உன்னை நான் மனசார காதலிக்கிறேன்,உன்னை பார்த்து இதை சொல்லவேண்டும், என்று நினைத்தேன். ஆனாலும் என்ன? எங்களை இணைத்த இந்த சட் மூலம் சொல்கிறேன், உன்னை தவிர நான் யாரையும் காதலிக்க மாட்டேன், திருமணம் செய்யவும் மாட்டேன், இந்த மெயிலை பார்த்துவிட்டு , உன் முகத்தில் தெரியும் நாணத்துடன் உன்னை நாளை சாயங்காலம் சந்திக்கிறேன்.
அன்புடன்
உனது காதலன்
ஹரிசரண்
திரும்பவும் ஒருதடவை மெயிலை சரிபார்த்து விட்டு அனுப்பினான் அவன்.

அடுத்தநாள் மணி ஐந்து ஆனதும் மிகவும் ஆவலுடன் கணணியை ஆன் செய்தான் ஹரிசரண். அரைமணியாகியும் அவள் வரவில்லை, அவனுக்கு எதுவுமே புரியவில்லை,.ஐயோ! நான் ஏதும் தப்பாக ஈமெயில் பண்ணிவிட்டேனா? என்று அவனுக்குள் கேள்வி எழும்பியது, இல்லையே! அவளும் காதலித்து கொண்டுதானே இருந்தாள், தன்னுடன் பேசும் போது ஒரு கனிவுடனும், அக்கறையுடனும் தானே பேசிக்கொண்டு தானே இருந்தாள்.ஏன் இப்படி? என்ற கேள்வி அவனுள் எழுந்தது.இப்படியே இருந்தால், அவனுக்கு மண்டை வெடித்து விடும் போலவே இருந்தது.

கணணியை ஆப் செய்துவிட்டு காரை எடுத்துகொண்டு தனது நண்பர்களை பார்க்க கிளம்பினான்.அவனது நண்பர்கள் எல்லோருமே எப்போதுமே கலகலப்பானவர்கள்.அவர்களுக்கு கவலை என்றால் என்னவென்றே தெரியாது.எதையும் ஈசியாக எடுத்துகொள்வார்கள், அவர்களுடன் பேசியது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக குறைந்தது.

வீட்டுக்கு வந்ததும் மீண்டும் ஒரு ஈமெயில் அனுப்பினான்.
"ஹாய் ஸ்வேதா",நேற்று நான் அனுப்பிய ஈமெயில் பார்த்து கோபமா? நட்புடன் மட்டும் தான் பழகினியா? நான் தப்பாக நினைத்து விட்டேனா ? அப்படி என்றால் ஐ ஆம் ரியலி சாரி டா, நட்பாய் என்னுடன் பேசம்மா. நீ என்னை புரியும் போது, நாங்கள் நேரடியாக சந்திப்போம். உனக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். ஏன் என்றால் நான் என்பது நீ மட்டும் தானே!,நாளை மாலை ஆன்லைன் வா சட் மட்டும் பண்ணு, முகம் பார்க்க வேணாம்.
என்றும் நட்புடன் கூடிய காதலுடன்
ஹரிசரண்
இப்போது அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது,

அடுத்த நாள் மாலையும் அவள் வரவில்லை,அவனுக்கு மிகவும் கோபமாக வந்தது,
ஹாய் ஸ்வேதா ஏன் இப்படி பண்ணுறாய்?.உனக்காக நான் உருகுவது உனக்கு எக்காளிப்பாய் இருக்கா?, நான் நினைத்தால் ஆயிரம் பெண்கள் எனக்கு பின்னால் வருவார்கள். ம்ம் எனக்கு புரிகிறது! உலகில் உள்ள எல்லா லவ் பண்ணும் ஆண்களும் சொல்லும் வார்த்தை என்று நீ சிரிப்பது, பட் உனக்கு சொல்லாத உண்மை இப்போ சொல்கிறேன்.என் அப்பா தமிழ் நாட்டில் உள்ள பணக்காரர்களில் ஒருவர், அண்ட் நான் அவரின் ஒரே சன் ஹரிசரண் பூவதி,பூவதி ஆடை உற்பத்தி கம்பனி நீ நிட்சயம் கேள்விபட்டு இருப்பாய்.தட் இஸ் அவ கம்பனி,நீ நம்பாவிட்டால் போன் பண்ணி விசாரி,அப்படியும் நம்பாவிட்டால் நேரடியா போய் உன் பேர் சொல்லு, அப்புறம் உனக்கு புரியும், நான் கம்பனி விடயமா லண்டன் போகிறேன், திரும்பி வர ஆறு மாதம் எடுக்கும்,அதற்குள் நீ ஈமெயில் அனுப்பினால் மட்டுமே நான் உன்னை தொடர்பு கொள்ளுவேன்
மாறா காதலுடன்
ஹரிசரண்
என்று ஒரு ஈமெயில் அனுப்பினான் அவன்.

அவனை யாருமே இப்படி பாதிச்சதில்லை.எப்படி இவளால் மட்டும் முடிந்தது?,அவனுக்கு இன்றுவரை பதில் தெரியவில்லை,ஏதும் முன் ஜென்ம தொடர்பா? அதுவும் அவனுக்கு புரியவில்லை,நண்பர்கள் அவனை இன்சல் பண்ணுவதும்,அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.ஹரிசரண் எப்போதும் அவமதிப்பை தாங்க மாட்டான்,ஆனால் ஸ்வேதா விடயத்தில் எல்லாமே எதிர்மறை தான். அவனை நன்றாக புரிந்த நண்பர்கள் ஏன் அவனது தாய் தந்தை கூட அவனின் காதலை ஏற்று கொண்டு உள்ளார்கள்,பட் ஸ்வேதா மட்டும் ம்ம்ம்ம் நீண்ட பெருமூச்சு விட்டான் அவன்.

அவனுக்கு நம்பிக்கை இருந்தது.எப்படியும் அவள் புரிந்து கொள்வாள் என்று. ஆறு மாதமாக அவன் வேலை பளு காரணமாய் அவன் நிறைய நேரம் கணனியில் டைம் செலவழிக்கவில்லை,ஆனாலும் ஸ்வேதாவும் இவ்வளவு பிடிவாதமாய் இருப்பாள், என்று அவன் நினைக்கவில்லை,ஊர் போனதும் அவளை தேடி போகவேண்டும் என்று நினைத்தான் ஹரிசரண்

நாளை லண்டனில் இருந்து கிளம்புகின்றான் ஹரிசரண், ஏர்போர்ட் வந்ததும் ஆவலுடன் கட்டியணைத்த தாய் தந்தையை அன்புடன் அணைத்து கொண்டான் அவன்,வீட்டுக்கு வந்து உடை மாற்றி விட்டு கணனியின் முன்னர் அமர்ந்து கொண்டான்.

ஸ்வேதா அனுப்பிய மேசேச்சை கொண்டு அவளது கணனியின் ஐ . பி அட்ரெஸ் எடுத்துகொண்டான், அவனின் ஒரு நண்பனின் உதவியுடன் அந்த கணணி இருக்கும் இடத்தை கண்டு பிடித்தான் அவன் .அது ஒரு இன்டர்நெட் சென்டர்,

நாளை இன்டர்நெட் சென்ட் போய் விசாரிக்க வேண்டும், என்று எண்ணிகொண்டான். அந்த இன்டர்நெட் சென்டர் அவனது வீட்டில் இருந்து ஒரு இரண்டு மைல் தொலைவில் தான் இருந்தது.அங்கு சென்று அவளை பற்றி விசாரித்தான் அவன்.

அவள் ஒரு ஆறு மாதங்களின் முன்னர் வந்து சட் பண்ணியது, அவர்களின் ரெகார்ட் இல் இருந்து தெரிந்தது, அத்துடன் இப்போது அவள் வருவதில்லை என்றார்கள்,சில வேளை அவளுக்கு மணமாகி விட்டிருக்கலாம் என்றார்கள். ஏனென்றால் தனக்கு திருமணம் மிக விரைவில் நடக்க போவதாக ,அவள் தனது ஒரு நண்பியுடன் பேசியதை , தான் கேட்டதாக சொன்னார் அந்த கடைகாரர். அந்த நண்பியும் இப்போது இங்கு வருவதில்லை என்றார் அவர். அவருடன் மீண்டும் துருவி விசாரித்ததில் அவள் இந்த டவுனில் உள்ள எதோ ஒரு காலேச்சில் படித்தது தெரிந்தது,

பணம் பண்ணும் நோக்கில், மூலைக்கு மூலை வந்து முளைத்து நிற்கும் காலேச்சில், எதில் போய் அவளை தேடுவது?ஆனால் எப்படியும் அவளை தேடவேண்டும், என்று நினைத்து கொண்டான்.அவனுக்கு இப்போது ஒரு சிறு சந்தேகம் வந்தது, அவளுக்கு ஒரு வேளை திருமணமாகி இருக்குமோ?எப்படி இருந்தாலும் அவன் மனம் கவர்ந்தவளை நேரடியாக வாழ்த்தி ,அவளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று எண்ணி கொண்டான்,அவள் ரொம்ப ரோசக்காரி உதவியை கட்டாயம் மறுப்பாள்,அவனின் கொம்பனியில் ஒரு வேலையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

முதல் மூன்று காலேச்சில் அவள் படிக்கவிலை. இன்னும் நான்கு காலேச் மட்டும் தான் இருந்தது. நம்பிக்கையை கைவிடாது அங்கும் போனான் அவன்,காரில் சென்று அவன் ஒரு பெண்ணை பற்றி விசாரிப்பதை பார்த்து அங்கு உள்ளவர்களின் மனதில் ஓடும் பலவிதமான கற்பனையை பற்றி அவன் கவலை படவில்லை.

ஐந்தாவது காலேச்சில் நுழைந்தான் அவன்

ஹலோ சார்! "எனக்கு ஒரு லேடி பற்றி தெரிய வேண்டும்" என்றான்
"நீங்க போய் ரெகார்ட் ரூமில் கேளுங்கள்" என்றார் அவர்,
அங்கு சென்று அவளது பேரை சொன்னான் அவன்
"எதுக்கு அவங்களை நீங்க கேக்கிறிங்க" என்றாள் அவள்
"நான் அவங்களின் ரொம்ப தெரிந்த நண்பன்,பட் ஒரு ஆறுமாதமாய் தொடர்பில் அவங்க இல்லை, திருமணமாகி இருக்கலாம், என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள், அதுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்" என்றான் அவன்
அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த பொறுமை பறந்தது அவளுக்கு,

ஏன் சார்! நீங்க எல்லோரும் இப்படி இருக்கிறீங்க? நீங்க பணக்காரர் எப்படியும் பேசுவீங்க, திருமணமா? யாருக்கு சார்? என்று சத்தம் போட்டாள் அவள்
"அவனுக்கு எதுவுமே புரியவில்லை, என்ன நடந்தது"? என்றான் அவன்
"சார் ஸ்வேதா எனக்கு நல்ல நண்பி , வசதி கொஞ்சம் குறைவு, ஆனால் ரொம்ப நன்றாக படிப்பாள், எல்லாமே வீணாகி விட்டது உங்களை மாதிரி பணக்காரர்களால்," என்றாள் அவள்

"இல்லை! எதுவும் சரி பண்ணலாம், அதற்கு தான் நான் வந்திருக்கின்றேன் , இப்போது அவள் எங்கே என்று சொல்லுங்கள், திருத்தமுடியாத தப்பு என்று எதுவும் இல்லை, அவளுக்காக நான் எதையும் செய்வேன்" என்றான் மிகவும் உடைந்த குரலில்

"அப்படியா சார்" !என்று ஒரு வெறுமையான சிரிப்பை சிரித்துவிட்டு தொடர்ந்தாள் அவள்
ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் ஒரு ஆக்சிடன் நடந்தது தெரியுமா சார்? பத்திரிகையில் கூட வந்ததே, விபத்து என்று முடித்து விட்டார்கள்,ஏனென்றால் ஒரு கார்காரன் மிக வேகமாக ஓட்டினான்,ஆனால் அவனும் உங்களை மாதிரி ஒரு பணக்காரன் சார் ....... ஏன் சார் இந்த பணக்காரர்கள் மட்டும் வீதி ஒழுங்கை மீறலாமா? என்றாள் அவள்

"இல்லை சொல்லுங்க என்ன ஆச்சு"? என்றவன் ஏற்கனவே பாதி செத்து விட்டு இருந்தான்
"அந்த விபத்தில் என் அன்பு தோழி இறந்துவிட்டாள்" என்று சொல்லி விட்டு கண்ணீர் வடித்தாள்
அவள் சொன்னதை அவனால் கிரகிக்க கூட முடியவில்லை,
அவனுக்கு தலையை சுற்றுவது போல இருந்தது. "என் கண்மணியை நானே கொன்று விட்டேனா? ஐயோ என் ஸ்வேதா! நான் தான் அந்த கொலைகாரபாவி, என் உயிர் காதலியை கொன்ற பாவி நான்தான், ஸ்வேதா! உன் ஹரிசரண் வந்து இருக்கின்றேன், என்னையும் உன்னுடன் அழைத்து கொண்டுபோ" ,என்று தன்னை மறந்து அரத்தியபடி வந்த வீதி வழியே நடந்து சென்றான் அவன் .
ஆம் அவன் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் ஆனால் தன்னிலை மறந்து ....

உறவுகளே உங்கள் கருத்துகளை சொல்லிவிட்டு செல்லுங்கள்..

5 கருத்துகள்:

  1. இப்படி ஒரு கட்பனைதிரமை உங்களுக்குள் இருக்குமுன்னு
    நான் நினைக்கல
    நீங்க உண்மையில எல்லோர் முன்னிலையில் பாரட்டபடவேண்டிய ஒருவர்
    CHAT பட்டி வித்தம் விதமாக கதை எழுதுவார்கள் ஒரு அழகான காதலை எப்படி அழகாக சொல்லி முடிச்சிருகிங்க .................
    பாரட்டுக்கள் உங்கள் முயற்சி தொடரட்டும் வெற்றி பாதையில்

    பதிலளிநீக்கு
  2. சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது. முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான கற்பனையுடன் எதிர்பார்த்திராத சோகமான முடிவோடு கதை மனதை நெகிழ வைத்து விட்டது.உங்கள் எழுத்தாற்றலுக்கும் திறமைக்கும் இன்னும் நீங்கள் நிறைய எழுதுங்கள்.சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக விரைவிலேயே இனம் காணப்படுவீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான கற்பனையுடன் எதிர்பார்த்திராத சோகமான முடிவோடு கதை மனதை நெகிழ வைத்து விட்டது.உங்கள் எழுத்தாற்றலுக்கும் திறமைக்கும் இன்னும் நீங்கள் நிறைய எழுதுங்கள்.சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக விரைவிலேயே இனம் காணப்படுவீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு