சனி, 23 ஜூன், 2012

அவளும் ஒரு தேவதை---தொடர்கதை---அத்தியாயம் நான்கு.

உங்களின் நிலாகவி மணியம் எழுதும் தொடர்கதை.
அவளும் ஒரு தேவதை---தொடர்கதை---அத்தியாயம் நான்கு.

பயந்த முகத்துடன் நின்ற மீராவை பார்த்ததும் கீர்த்திவாசனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தனது வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் வந்தான்.


"ஹல்லோ மீரா" என்ன பதட்டம்? என்று மிகவும் தெரிந்தவன் போல வினாவினான். மீராவிற்கு எதுவுமே புரியவில்லை. எப்படி சார் என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும்? என்று கேட்டாள்.

மீரா உங்களை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். உங்களுக்கு என்னை தெரியாது என்று பதில் சொன்னான் கீர்த்திவாசன். அவளிற்கு அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை.

எப்படி தெரியும் ?!என்று கேட்டாள் மீரா. அதை வேறு ஒரு நாளைக்கு சொல்கின்றேன், இப்போது வண்டியில் வருகின்றாயா? என்று வினவினான்!. கீர்த்திவாசன்.

'இல்லை' நான் பஸ்சிலேயே போகிறேன் என்றாள் மீரா.
"சரி உன் விருப்பம்"என்று சொல்லி விட்டு தனது காரை நோக்கி நடந்தான் கீர்த்திவாசன்.

காரில் ஏறிய கீர்த்திவாசனின் மனசு நான்கு ஆண்டுகள் பின்னே நோக்கி சென்றது .

அப்போது அவனை எல்லோரும் செல்லமாய் "கீர்த்தி " என்று. அழைப்பார்கள் . கீர்த்தி நான்காம் ஆண்டு பி . இ மாணவன். அவனை சுத்தி எப்போதும் ஒரு கூட்டமே இருக்கும். அவனின் கெட்டிதனத்தால் அல்ல.,.அவனின் குறும்புத்தனமான செய்கையாலும், அவனிடம் உள்ள பணத்தாலும் மட்டுமே.

டேய் கீர்த்தி இன்று நாம் சினிமா பார்க்க போலாமா? என்று ஆவலுடன் கேட்டான் நீதன்.
ம்ம்ம்ம் போகலாமே ! என்றான் கீர்த்தி.

எப்படிடா போறது ? இன்றைக்கு ப்ராடிகல் கிளாஸ் இருக்கேடா!, என்றான் மாதவ்.
"அதை பற்றி கவலைபடாதே நம்ம தலை மச்சான் கீர்த்தி பார்த்துக்கொள்வான் " என்றான் நீதன்.

"நான் பார்த்து கொள்கிறேன், நீ போய் டிக்கெட் வாங்கி வா" என்றான் கீர்த்தி.
"ப்ளாக்கில் டிக்கெட் வாங்கு" என்றான் நீதன்.

"ஓகே" என்று சொல்லிவிட்டு மாதவ் நகர, கீர்த்தி அருகில் வந்த நீதன் கீர்த்தியிடம் "பிரின்சிபால் ரூம்முக்கு போன் போட்டு, ப்ரடிகல் பாடம் எடுக்கும் ஆசிரியையின் அப்பாவிற்கு ஆக்சிடன்ட்! என்று சொல்லு" என்றான்.

கீர்த்தி பப்ளிக் போன் பூத்தை நோக்கி விரைந்து சென்றான். "தான் செய்யும் காரியம் , எவ்வளவு தூரம் மற்றவரை பாதிக்கும்" என்ற உணர்வு அவனுக்கு வரவில்லை .

ஏனெனில் அவன் அவனது நண்பர்களுடன் சேர்ந்து எல்லா விதமான கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமை பட்டு இருந்தான். "சினிமா முடிந்த பின்னர் எல்லோரும் சேர்ந்து பாப் போகலாம் "என்றான் நீதன். நண்பர்கள் குழாம் பலத்த கரகோசத்துடன் அதை வரவேற்றனர். கீர்த்தி தனது பாக்கெட்டில் இருந்து எட்டாயிரம் ரூபாயை எடுத்து நீதனிடம் கொடுத்தான். அந்த பணத்தை கண்டதும் தானும் எப்படியாவது இப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் நீதன். அதற்கு எப்படியாவது கீர்த்தியை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் அவன்.

இதை எதையுமே அறியாத கீர்த்தி அவனுடன் வழமை போலவே இருந்தான். பாப்பில் மிகவும் அழகான பல பெண்கள் வந்து இருந்தார்கள்.
இரவு வெளிச்சத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான தேவலோக மங்கைகளை நினைவுபடுத்தினார்கள். நீதன் எல்லா பெண்களுடனும் சேர்ந்து தனக்கு தெரிந்த டான்ஸ் ஆடினான். அவனை பார்க்கும் போது , காக்க வலிப்பு வந்தவர் காலை கையை உதறுவது போலவே இருந்தது. கீர்த்திக்கு பெண்களுடன் சேர்ந்து டான்ஸ் செய்வதில் அவ்வளவு விருப்பம் இல்லை. உயர்ரக மதுபானம் மட்டும் தான் அவனுக்கு சொர்க்கம். நள்ளிரவு வரையும் அங்கு அவர்கள் இருந்தார்கள்.

"கீர்த்தி நீ இனிமேல் கார் ஓட்ட வேண்டாம்" என்றான் மாதவ்
"ஓகே மச்சி" என்றான் கீர்த்தி
"கால் டாக்ஸிக்கு போன் பண்ணடா" என்றான் நீதன்
"என்னால் இப்போது எதுவும் பேசமுடியாது ,நீ கால் பண்ணு" என்றான் கீர்த்தி
கால் டாக்ஸி வந்ததும்,முண்டி அடித்துக்கொண்டு ஏறி அமர்ந்து கொண்டார்கள் அவர்கள் .

வீட்டுக்கு வந்த கீர்த்திக்கு வெளி வராண்டாவிலேயே படுத்து தூங்க வேண்டும் போலவே இருந்தது. அவனது அப்பா அவனை கைத்தாங்கலாக அழைத்து சென்று படுக்க வைத்தார்.

அவன் நிலைமையை பார்த்த அவனது அப்பாவிற்கு கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது.அவரிற்கு அளவுக்கு மீறிய பணம் ,சொத்து ,உறவு எல்லாமே இருந்தது. ஆனால் அவரின் மகனிற்கு அன்பு காட்டவும் ஆதரவாய் பேசவும் அவனின் தாயார் இல்லை.அவனது அம்மா இறந்த பின்னர் தான் அவன் இவ்வாறு மாறியிருக்கிறான் .இவனிற்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் இவன் திருந்தகூடும் என்று எண்ணி கொண்டார் அவர்.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் அவரது இனிய நண்பர் ராமச்சந்திரருக்கு போன் பேசி அவரது மகள் சிந்துவுக்கு தன் மகனை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னார் அவர்.
ராமச்சந்திரனுக்கும் அதில் மிகவும் விருப்பம் இருந்தது.
"மாப்பிளை என்ன சொல்லுகின்றார்?"என்று கேட்டார் ராமச்சந்திரன்.
"அவன் என்ன சொல்வது? நான் சொன்னால் அவன் ஏற்றுக்கொள்வான்" என்று வாக்குதி கொடுத்தார் அவனது அப்பா.
அப்போது பாவம் அவருக்கு தன் மகன் எப்படிபட்டவன் என்று முழுமையாக தெரியவில்லை....
அத்தியாயம் 5 அடுத்த வாரம் தொடரும் 

உறவுகளே உங்கள் கருத்துகளை சொல்லிவிட்டு செல்லுங்கள்..

2 கருத்துகள்:

  1. அத்தியாத்துக்கு அத்தியாயம் மெருகேறிச்செல்கிறது உங்கள் கதை...வாசகர்களின் இதயத்துடிப்புகள் இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும் தொடரின் அடுத்த அத்தியாத்தை படிக்கும் வரை...கடவுள் எல்லோருக்கும் கொடுப்பதில்லை கற்பனை திறமையை உங்களுக்கு தந்திருக்கிறார் குறைவில்லாமல்...அதை நிறைவாக பயன்படுத்துங்கள் நிலாகவி உங்களுக்கு பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்..வாழ்க வளர்க நின் எழுத்துப்பணி..

    பதிலளிநீக்கு