ஞாயிறு, 1 ஜூலை, 2012

விலைமாதுக்களா நாங்கள் ?




அன்பு கவிஞர் தமிழ் தாசனின் "ஒரு விலைமாது விடுத்த கோரிக்கை" கவிதை வாசித்தேன். மிகவும் அருமையாக ஒரு விலைமாதுவின் எண்ணம், செயல், வலி, கற்பனை ஆகியவற்றை உள்ளம் உருகும் படி எழுதி இருந்தார். அந்த கவிதை உண்மையில் என் மனதை ரணமாக்கியது. அந்த கவிதையை நான் வர்ணிப்பததாக யாரும் போர்க்கொடி தூக்க வேண்டாம்.


ஒவ்வொரு தமிழ் மகளுக்கும் இல்லை, அனைத்து பெண்களுக்கும் ஒரு பெண் என்ற வகையில் ஒன்று சொல்லி கொள்ள ஆசைப்படுகின்றேன். ஆணுக்கு பெண் சமமாக கல்வியிலும் வீரத்திலும், ஆளுமையிலும்,தன்னம்பிக்கையிலும் சிறந்து விளங்கும் நாம் எதற்காக எம்மை நாமே இழிவு படுத்தும் தொழில்களை செய்ய வேண்டும்.ஆண் ஆதிக்க சிந்தனை மேல் ஓங்கி இருந்த காலத்தில் ஆணாதிக்க சிந்தனையால் உருவாகிய ஒரு தொழில் தான் விலைமாது என்ற தொழில். அரச சாம்ராச்சியத்தில் அந்தப்புரம் என்று பெயர் சூடி கொண்டாடினார்கள்.எந்த ஒரு ஆணாக இருந்தாலும், சரி பெண்ணாக இருந்தாலும் சரி கடுமையாக தமது வாழ்கையில் போராடினால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.சரித்திர நூல்களையும் வரலாற்று நூல்களையும் புரட்டி பாருங்கள். ஒவ்வொரு வெற்றியாளனும் பட்ட வலியும், வேதனையும் அவர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்களில் சிவப்பு மையாக இருக்கும்.

வலிக்காமல் வாழ்க்கை இல்லை பெண்களே!,பெண்களுக்காக மட்டுமே என்று திணிக்கப்பட்ட தொழில்களில் இருந்து நீங்கள் நினைத்தால் மட்டுமே அதில் இருந்து வெளியே வர முடியும்.
உங்களை மீண்டும் முடக்கி வைக்க சமுதாயம் சொல்லும் விதவை, விபச்சாரி, முதிர்கன்னி, வாழாவெட்டி, ஓடுகாலி, நடத்தை கெட்டவள் என்ற பதங்களை நாம் நீக்க தர்ம நியாயமாக போராடுவோம்...........
மாது உன்னை இழிவு செய்யும் மூடரை நாம் கொளுத்துவோம்.......

நிலாகவி மணியம்

2 கருத்துகள்:

  1. வலிக்காமல் வாழ்க்கை இல்லை பெண்களே!,பெண்களுக்காக மட்டுமே என்று திணிக்கப்பட்ட தொழில்களில் இருந்து நீங்கள் நினைத்தால் மட்டுமே அதில் இருந்து வெளியே வர முடியும்.
    உங்களை மீண்டும் முடக்கி வைக்க சமுதாயம் சொல்லும் விதவை, விபச்சாரி, முதிர்கன்னி, வாழாவெட்டி, ஓடுகாலி, நடத்தை கெட்டவள் என்ற பதங்களை நாம் நீக்க தர்ம நியாயமாக போராடுவோம்...........
    மாது உன்னை இழிவு செய்யும் மூடரை நாம் கொளுத்துவோம்.......

    ----------உண்மையும் யாத்ர்துமும் உள்ளது உங்களின் வலி சுமந்த இந்த வரிகள் இந்த உலகத்துக்கு ஒரு சவுக்கடி .... வாழ்த்துகள் தோழி ......செந்தில் ...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் தளத்திற்கு முதல் வருகை இது.மிகவே மகிழ்ச்சி...உண்மையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அந்த விலை மாதர் வர்க்கம் மீண்டும் மீண்டும் முயன்று இதிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறீர்கள்.வலி மிக்க முயற்சி,ஆனால் முயன்றால் சகதியிலிருந்து வெளியேறலாம்.அருமையான பதிவு சொந்தமே.

    http://athisaya.blogspot.com/2012/06/blog-post_30.html

    பதிலளிநீக்கு