கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கவியின் மலர் என்ற தோழியின் தொகுப்பில் இருந்து என் மனதை பாதித்த சில கருத்தை முன் வைக்க விரும்புகின்றேன். அந்த தொகுப்பின் சாராம்சம் என்னவென்றால் எல்லோராலும் நன்றாக டென்னிஸ் வீராங்கனையாக அறியப்பட்ட சானியா மிக்ஸா எப்படி ஆணாதிக்க சிந்தனையால் பாதிக்கப்பட்டார் என்பது தான். ஒரு அந்தஸ்தில் உள்ள ஒரே பெண்ணே இவ்வாறு பாதிக்க படும் போது .......வேறு சூழல் சொல்லி விரும்பவில்லை /
சானியா மிக்சாவிற்கு நான் ஆதரவு குரல் கொடுத்து விட்டேன் என்பதை தாண்டி ஒரு பெண்ணாக "கவியின் மலர்" பதிவு செய்த கருத்துக்கு மதிப்பளிக்கின்றேன் ....
கடந்த ஒரு ஆறு மாதங்களின் முன்னர் "நீயா நானாவில்" ஒரு சுவாரசியாமான நிகழ்வு நடந்தது...
நவநாகரிக ஆண்களும் நவநாகரீக பெண்களும் அதில் கலந்து கொண்டார்கள்.
அங்கே வருகை தந்திருந்த ஆண்கள் எல்லோரும் முற்பது வயதுக்கு குறைந்த இளம் வாலிபர்கள்....
அவர்களிடம் கோபிநாத் முற்பத்திமூன்று சதவீத இட ஒதுக்கீடு பற்றி கேட்கும் போது யாருமே பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை ......
ஒரு ஆணை அவனது நடை ,உடை, பாவனையை வைத்து அவன் மேலான சிந்தை கொண்டவன் என்றோ அல்லது சமத்துவ வாதி என்றோ நாங்கள் கருதி விட முடியாது... இவ்வாறு ஆண்கள் இருப்பதற்கான காரணத்தை நாம் எல்லோரும் சேர்ந்து ஆண்கள் மீது தூக்கி போடுவதும் தவறுதான். ஆண் எப்போதுமே ஒரு மிதவாத சிந்தனை உள்ளவனாகவும் மேலாதிக்க தன்மை உள்ளவனாகவுமே காணப்படுகின்றான்.ஆனால் அவனை ஒரு அன்பு வழியில் நடைமுறை படுத்தவும், நெறிப்படுத்த வேண்டியதும் பெண்களின் கடமையாகும் .
பெண் விலங்கை உடைக்க, அடிமைத்தனமான சிந்தனையை போக்க நாமே முயற்சி எடுக்க வேண்டும் . உங்கள் மகனுக்கோ,சகோதரனுக்கோ சிறுவயதில் இருந்தே ஊட்டி வளருங்கள் ஆணும் பெண்ணும் சரி சமம் என்று....... பிறகு பாருங்கள், இல்லை பேசுங்கள் பெண்ணியம் பற்றியும், சுதந்திரம் பற்றியும்
பெண்களே உங்காளால் மட்டும் தான் முடியும்! சாவி உங்களிடம் பக்குவமாக திறப்பது உங்கள் கடமை .
நிலாகவி மணியம்
பெண்களே உங்காளால் மட்டும் தான் முடியும்! சாவி உங்களிடம் பக்குவமாக திறப்பது உங்கள் கடமை......
பதிலளிநீக்கு........உண்மை தோழி ........
வாழ்த்துகளுடன் செந்தில் ...........
sania mirza vai avar kanavar adaki vaithaar enru solvathai vida avar samoogam adakki vaithathu enru solvathey sari
பதிலளிநீக்கு