ஞாயிறு, 1 ஜூலை, 2012

காதலும் காமமும்



காதல் பற்றி இந்த காலத்து கவிஞர்கள் எழுதும் போது பெண்ணை எப்படி எல்லாம் வர்ணிக்கின்றார்கள்? அப்பப்பா தேவதை என்பதென்ன ,நிலவு என்பதென்ன, வானவில் என்பதென்ன, இன்னும்  என்ன என்னவோ சொல்லப்படுகின்றது, அப்படியாயின் காதல் என்பது வெறும் அழகுணர்ச்சி மட்டுமே கொண்டதான ஒரு உணர்வாக தோற்றப்பாடு பெறுகின்றது இல்லையா? அழகான ஒன்றை பார்க்கும் போது எங்களையும் அறியாமல் அதை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் போது அங்கு அந்த காதல் என்பது ரசிப்பதற்கானது என்று மாறி விடுகின்றது.


அதனால் தானோ என்னவோ இந்த காலத்து ஆண்களுக்கு அழகான ஒரு பெண்ணை ரோட்டிலையோ,தெருவில்லையோ,காலேச்சிலையோ,இல்லை அதற்கும் மேலாக முகபுத்தகத்திலையோ, பார்க்கும் போது  அந்த பெண்ணை பற்றிய எந்த ஒரு விடயத்தையும் தெரியாமல் காதல் வந்து விடுகின்றது.அதற்கும் மேலாக காதல் என்ற பெயரில் நடைபெறும் காம விளையாட்டுக்களும் அதிகரித்து விடுகின்றது.(தகவல் செய்திகளும், தொலைக்காட்சிகளும்)
 பண்டைய காலத்து நூல்களில், இன்றும் உலகமே போற்றும்  திருக்குறளிலும் சரி, கீதாச்சாரத்திலும் சரி ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது அவளை அழகுடன் தொடர்புபடுத்தி வர்ணனை செய்யப்படவில்லை.

பெண்கள் வெறும் போக பொருளாகவும் ஆண்களின் இச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மட்டும் பார்க்கப்படுவதால் தானோ என்னவோ இன்றும் முகப்புத்தகத்திலும் சரி, சினிமாவிலும் சரி ஒரு பெண்ணை அழகு என்ற ஒரு சிறிய வட்டத்தில் வைத்து கவிதைகள் புனைகின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு காதலன் தன் காதலியை வர்ணனை செய்யும் போது அவளது அழகை தாண்டி அவளின்அறிவு, கம்பீரம்,பணிவு,அடக்கம்,அன்பு இவைகளையும் தமது கவிதைகளில் வெளிக்கொண்டு வர வேண்டும்.

அப்போது தான் காதல் என்ற மாய வார்த்தையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல நூற்றுக்கணக்கான தவறுகள் திருத்தப்படும். காதல் என்பது அழகு என்ற சிறிய வட்டத்தை  தாண்டி புரிதலுடன் கூடிய ஒரு உணர்வாக தோற்றம் பெறும்.....

நிலாகவி

3 கருத்துகள்:

  1. எனக்கு ஏதோ பாடம் சொல்கிறீர்கள் போல் தெரிகிறது தோழி?....

    பதிலளிநீக்கு
  2. அருமை தோழி ... வாழ்த்துகள் ////....
    எனக்கு இந்த கவிதையை உதரணமாக .
    ஒருவரை ஒருவர்
    காதலியுங்கள்
    ஆனால் அது
    அடிமைதனமாகிவிட வேண்டாம் ...
    உங்கள் ஆன்மாவின் கடலோரோங்களுகிடையில்
    அசைந்துகொண்டு இருக்கும் கடலா இருக்கட்டும் அது .
    அடுத்தவர் கோப்பையை நிரப்புங்கள்...
    அடுத்தவர் கோப்பையிலிருந்து
    குடிக்க வேண்டாம் ..
    சேர்ந்து ஆடிபாடி மகிழுங்கள்
    ஆனால்
    தனித்து இருங்கள்...
    உங்கள் இதயத்தை கொடுங்கள்
    ஆனால்
    அடுத்தவர் இதயத்தை வைத்து இருக்க வேண்டாம் .
    சேர்ந்து நில்லுங்கள்
    ஆனால்
    மிக நெருக்கமாக வேண்டாம்.
    ஓக் மரமும் ,சைபரசு மரமும்
    ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது...
    - ---கலில் கிப்ரான் ..
    ---

    மேலும் அண்ணன் கவிஞர். -பழநிபாரதி.. அவர்களின்
    அழகான பெண்ணை
    அணைத்துக்கொள்ள விரும்பும் சமூகம்
    அறிவான பெண்ணை அணைத்துவிட முயல்கிறது.
    ஐஸ்வர்யா ராய்க்கான பாராட்டுகளுக்கும்
    அருந்ததி ராய்க்கான எதிர்ப்புகளுக்கும் அதுதான் காரணம்.

    -------என்றும் உங்களின் எழுத்தாணி முனையில் .........செந்தில்

    பதிலளிநீக்கு