இந்திரா அம்மையாருக்கு இருந்த சாணக்கியம் மற்ற இந்திய மத்திய ஆட்சியாளருக்கு இல்லாமல் போனது துரதிஷ்டவசமான விடையம் ... ஈழ மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றோ இல்லை,தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்றோ இந்திரா அம்மையார் ஒருபோதும் நினைத்ததில்லை. அவரை பொறுத்தவரை இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையப்பகுதி. எவ்வாறாயின் கடல் மார்க்க வியாபாரத்திற்கோ இல்லை வான் வெளி வியாபாரத்திற்கோ இலங்கையின் அமைவிடம் முக்கியமான ஒரு பகுதி. அதனால் தானோ என்னவோ இந்து மாகடலின் நித்திலம் என்று இலங்கையை (சிலோன் )அதனை குறிப்பிட்டார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை விடுதலை புலிகளின் ஆரம்ப கால வளர்ச்சியை ஊக்குவித்த அதேவேளை அவர்களுக்கு எதிராக வேறு மாற்று இயக்கங்களையும் வளர்ப்பதில் இந்தியா முக்கியமான கவனம் செலுத்தியது. ஒரே இயக்கமாக இருந்தால் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு பின்னொரு காலத்தில் அச்சுறுத்தலாக முடியலாம் என்ற ஒரே நோக்கம் தான் ஆரம்ப சமகாலத்தில் மூன்று தமிழ் இயக்கங்கள் ஈழத்தில் எழுச்சி பெற்றதற்கான சான்று ..
இந்திரா அம்மையாரை பொறுத்தவரையில் இலங்கை ஆட்சியாளர்களை இந்தியாவின் கையுக்குள் அடக்கி வைப்பதற்காகவே தமிழ் இயக்கங்களை வளர்த்து கொண்டார். வடக்கில் இருந்து சீனாவும் கிழக்கில் இருந்து பாகிஸ்தானும் எதிர் கால இந்தியாவுக்கு அச்சுறத்தலாக அமையக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.
இது அறியாத இன்றைய இந்தியா விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என்று மார்தட்டி கொண்டு தன் தலையில் தானே மண் அள்ளி போட்ட கதைதான் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது . சீனா ஏற்கனவே தனது கட்டுமான பணிகளை அனுராதபுரத்தில் முடித்து ஆழமாக இலங்கையில் காலூன்றி விட்டது. அது தவிர மாலைதீவிலும் அழமாக காலூன்றி விட்டது. எப்போதுமே பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் தான் செயற்பட்டு வருகின்றது. அதனால் தானோ என்னோவோ இப்போது இந்தியா அமெரிக்காவுடன் கை கோர்த்து கொண்டு நடுக்கடலில் முத்து எடுக்க விளைகின்றது ....
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக