என் இனிய உறவுகளே
நம் மண்ணில் வந்த முத்துக்களே
தமிழ் பேசும் தங்கங்களே
எழுத்தில் போட்டியிடுங்கள்
என் கருத்துக்களில் மோதிக்கொள்ளுங்கள்
பேடி போல மறைந்து நின்று
என் முகபுத்தகத்தை தாக்குவதும்
என் தனிப்பட்ட பக்கங்களை
முடக்குவதும் ஆரோக்கியமான
வளர்ச்சி இல்லையே!
மூன்று மாதமாக எழுதும் எனக்கு
எந்த வலியும் இல்லையே
எழு நாட்களாகதான் இந்த தொல்லையே
டாக் பண்ணுவது பிடிக்கவில்லை
என்றால் அறிவியுங்கள் என்று
பலமுறை சொல்லியும்
கேளாமல் ஸ்பாம் மெசேஜ்
என்று பிளாக் அனுப்பும்
அதியுயர் புத்தி சாலிகளே!
நண்பர் உருவில் இருக்கும்
நச்சு பாம்புகளே !
விடைகாணா வினாவை போல
என் எதிர்கால கனவை
கேள்வி குறியாக்க முடியாது
உங்களால்!
விஞ்ஞான வளர்ச்சியால்
என் முகத்தளத்தை
முடக்க முடியுமே தவிர
என் முகவரியையோ
இல்லை சிந்தனையையோ அல்ல\
அன்புடன்
நிலாகவி
என்னா பாஸ் இப்பிடி கூறிப்புட்டீங்க....:(
பதிலளிநீக்குyaa what can i do
பதிலளிநீக்குHa haa... Cowardice behavior. 4 sure he will not b born to a thamizhachi
பதிலளிநீக்கு