புதன், 4 ஜூலை, 2012

தமிழ் இனத்தின் சாபக்கேடு

பண்டை காலம் தொட்டு வீரத்தையும் காதலையும் நம் தமிழ் பாரம்பரியம் இரு கண்களாக போற்றி வந்திருக்கின்றது. அந்த வழியில் வந்ததால் தானோ என்னவோ அநேகமான தமிழ் இதிகாசங்களிலும் , புராணங்களில் வீரத்திற்கும், காதலுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் தான் இன்று வரையும் தமிழ் திரைப்படங்களிலும் காதலையும் வீரத்தையும் சேர்த்தே காட்ட முற்படுகின்றார்கள். திரை படங்களில் வரும் காதலையும் ஹீரோயிசத்தையும் நாகரிகத்தையும் பின் பற்றும் நம் உறவுகள் நம் ரத்தத்திலேயே ஊ(ற்)றி வளர்த்த வீரத்தை மறந்து போனது தான் வேதனையான விடையம். 
 

ஈழ திருநாட்டில் மூன்று லட்சம் மக்கள் படுகொலை செய்யப்படும் போது இந்திய தமிழ் மக்கள் ஏழு கோடி பேரில் ஒரு கோடி பேராவது தமது ஒத்துழைப்பை கொடுக்க தவறி விட்டார்கள்.வீரம் நிறைந்த தமிழ் நாட்டு மக்கள் இப்போது சுயநலவாதிகளாக மாறியிருப்பதும், வந்தாரை வாழ வைத்த தமிழ் நாடு இப்போது தன் வலுவிழந்து கிடப்பதும் மிகவும் வருத்தத்திற்கு உரிய விடையமாகும்.

எங்கு வலுவிழந்து கிடக்கின்றது? என்று உங்கள் சிலருக்கு கேள்வி எழுவது புரிகின்றது.
நான், நீங்கள் எல்லோரும் உதாரணம் காட்டும் சென்னை பட்டணத்தை சொல்லவில்லை. அந்த பட்டணம் மட்டும் தான் தமிழ் நாடு என்பது இல்லை.தினசரி பத்திரிகைகளையும் , செய்திகளையும் உண்மைசம்பவங்கைளை ஒளிபரப்பும் சில தொலைக்காட்சிகளையும் தவறாமல் பார்க்கும் சில பல நல்ல உள்ளங்களுக்கு புரியும் நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று.

இந்திய திரையுலக நடிகர்களுக்கும்,கிரிக்கெட்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை எமது கோவில்பட்டி மண் வளர்த்த கொக்கிக்கும் ,பல சிறந்த வீர வீராங்கனைகளுக்கும் முன்னுரிமை தர தவறி விட்டதும், ஏழு கோடி பேரில் ஆக குறைந்தது எழுபதினாயிரம் பேராவது பெரிய மேதைகளாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக கூடியவர்களாக இருப்பார்கள் அவர்களை இனம் காண தவறியதும் எம்மினத்துக்கு கிடைத்த சாபக்கேடு.
மேடை பேச்சில் மயங்காதே ,வீர தமிழனே வீறு கொன்டு எழு
நாளை நாமே நம் நாட்டை ஆளுவோம் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக