புதன், 4 ஜூலை, 2012

கரும்புலிகளா நீங்கள் எங்கள் காவல் தெய்வங்கள்




கரும்புலிகளா நீங்கள் அண்ணா
எங்கள் காவல் தெய்வங்கள்
எம்மை காக்க உம்மை அழித்த
அகல் தீபங்கள்



உங்கள் தேகம் வேகும் போது
என்ன எண்ணி கொண்டீர்கள்
உங்கள் ஆவி புரியும் போது
என்ன கனவு கண்டீர்கள்

அண்ணன் சொன்ன வேதம்
உங்கள் காதில் கேட்டதா
இல்லை அந்த அன்னை சொன்ன
கடைசி வார்த்தை வந்து போனதா

அம்மா அப்பா உறவை
 நீங்கள் நினைத்துகொண்டீரா
இல்லை  உங்கள் தம்பி தங்கை
உங்கள் மனக்கண்ணில் வந்து போனாரா

ஈழம் தாயின் கதறல் உங்கள்
மனதை கிழித்ததா
அந்த இரக்கமற்ற பாவிகளின்
முகம் தெரிந்ததா

ஒரு வார்த்தை மீண்டும் வந்து
சொல்லி செல்லுங்கள்
காத்திருப்போம் அண்ணா உங்கள்
குரல் கேட்கவே


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக