கரும்புலிகள் நாளான இன்று நாம் ஒரு நல்ல நோக்கத்தை நோக்கி பயணிப்பது, தமிழர்களாகிய நம் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் உண்மையில் நம் மாவீரர் செல்வங்களுக்கு கொடுக்கும் மரியாதையாகவும் இருக்கும்.
உங்கள் குழந்தைகள் ஆசைபட்டு விட்டார்கள் என்பதற்காக அவர்களின் எல்லா விதமான விருப்பத்தையும் நீங்கள் நிறைவேற்றி வைப்பது உண்மையில் உங்கள் மீது உங்கள் குழந்தைகள் வைக்கும் பாசத்தை அதிகரிக்கும் என்று நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு தேடலும் இல்லாமல் ஒரு பொருளோ இல்லை அவர்கள் நினைக்கும் விடயங்களோ கிடைக்கும் போது,அந்த விடயத்தில் அவர்களுக்கான ஒரு மதிப்பும் ஒரு ஈடுபாடும் குறைந்து விடுகின்றது . அந்த பொருளை எவ்வளவு விலை கொடுத்து நீங்கள் வாங்கி இருப்பிர்கள் என்பதோ இல்லை, அந்த பொருளை வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டங்களை நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் என்பதோ அவர்களுக்கு தெரியாமல் போய் விடுகின்றது. அதனால் உங்களின் பிள்ளைகள் ஒரு விட்டேற்றியாகவும் ,ஒரு பிடிவாதமான, கோபக்கார குழந்தைகளாகவும் வளர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது.
ஆகவே மதிப்புக்குரிய பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை ஒரு நல்ல சிறந்த குழந்தைகளாக வளர்ப்பது உங்கள் கடமை.
தேவையானவற்றை காலம் நேரம் அறிந்து வாங்கி கொடுங்கள்
வீணாக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செலவழிக்கும் பணத்தில் ஒரு வேளை கூட உணவுக்கு கூட வழியில்லாது .இருக்கும் கோடான கோடி குழந்தைகளின் உணவுக்காக செலவழியுங்கள் .... நானும் என்னால் முடிந்த உதவியை எப்போதும் செய்து கொண்டு இருக்கின்றேன்.....
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக