வெள்ளி, 13 ஜூலை, 2012

அவளும் ஒரு தேவதை


அத்தியாயம் ஐந்து

சுமார் ஒரு பத்து மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்திருந்தான் கீர்த்தி. அவனது தலை "விண் விண்" என்று வலித்து கொண்டு இருந்தது. என்ன நேற்று கொஞ்சம் தாரளமாக தண்ணி அடித்து விட்டேனா? இப்படி தலையை வலிக்கின்றதே என்று எண்ணி கொண்டான் கீர்த்தி. இனிமேல் இப்படி ஓவரா தண்ணி அடிக்க கூடாது, என்று சபதம் எடுத்து கொண்டான்அவன் .



மெதுவாக நடந்து சென்று தந்தையின் ரூமுக்குள் எட்டிப் பார்த்தான்,அவர் எதோ கடுமையான சிந்தனையில் மூழ்கி இருப்பது தெரிந்தது அவனுக்கு. இப்போது அவனுக்கு தந்தையிடம் பேசுவதற்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. தந்தையின் கண்ணில் பட்டால் நேற்றைய நிகழ்வுக்காக ஒரு அரை நாள் வகுப்பு எடுப்பார் அவர் என்பது அவனுக்கு தெரியும். மெதுவாக பூனை போல நடந்து சென்று பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான் அவன்.

சிந்தனையில் இருந்து விழித்துக்கொண்டார் நாராயணன். எப்படியாவது இன்று கீர்த்தியிடம் அவனது திருமணம் பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டார் அவர். அவரது அலுவலகத்திற்கு போன் செய்து இன்று தான் அலுவலகம் வர தாமதமாகும் என்றும் மிக முக்கியமான விடயங்கள் ஏதும் இருந்தால் அவற்றை வீட்டிற்கு ஈமெயில் பண்ணும் படியும் கேட்டு கொண்டார் அவர்.

குளித்து முடித்து வெளியில் வந்த கீர்த்தியிடம், "ஏன் கீர்த்தி இன்று காலேச்சு போகாமல் வீட்டில் நிற்கின்றாயா? நான் உன்னிடம் ஒரு முக்கியமான விடயம் பேச வேண்டும்" என்று கேட்டு கொண்டார். கீர்த்திக்கு அதில் அவ்வளவு உடன்பாடு இல்லை. ஆனாலும் தான் நேற்று செய்த வேலையால் அவரிடம் மறுப்பு கூற முடியவில்லை அவனுக்கு .

"சரிப்பா" என்று சுருக்கமாக முடித்து கொண்டான் அவன். அவர் என்ன சொல்ல போகின்றார் என்பதை பொறுத்து இருந்து பார்த்து அதற்கான பதிலை சொல்ல வேண்டும்.நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல அனாவசியமாக வாயை கொடுத்து வாங்கி கட்ட விரும்பவில்லை அவன்.
"சீ நேற்று மட்டும் அப்படி நடந்திராவிட்டால், இப்போது தன் தந்தையிடம் எதிர் கேள்வி கேட்க முடிந்திருக்கும்". "டேய் கீர்த்தி உன்னை நீயே அவமானப்படுத்தி விட்டாயே" என்று தனக்குள் தானே பேசிக் கொண்டான் அவன்.

அவனது தந்தையின் வரவுக்காக கீர்த்தி காத்திருக்கும் போது அவனது மொபைல் மெதுவாக சிணுங்கியது. யாரடா இப்போது கால் பண்ணுவது என்று எண்ணிக்கொண்டு அவனது மொபைல்  எடுத்து  "ஹலோ"என்றான் கீர்த்தி.
மறுமுனையில் இருந்து "ஹலோ" என்றான் நீதன்.
"என்னடா மச்சி இன்று ஏன் காலேச்சுக்கு வரலை" என்றான் அவன் .
"இல்லடா!, அப்பா என்னுடன் பேச வேண்டுமாம்  அதுதான் வரவில்லை" என்றான் கீர்த்தி
"என்னடா சொல்கின்றாய்? வழமைக்கு மாறாக உன் அப்பா உன்னுடன் பேசணும்  என்று சொல்லி இருக்கார், ஏதும் பிரச்சினையாடா?" என்றான் நீதன்
"இல்லை மச்சி! ஒன்றும் இல்லை நான் இன்னும் அவருடன் பேசவில்லை" என்றான் கீர்த்தி.
"ஏதும் பிரச்சனை என்றால் கால் பண்ணு மச்சி நான் வருகின்றேன்" என்றான் நீதன்.
"ஓகே டா வைக்கின்றேன்" என்றான் கீர்த்தி
"ம்ம்ம் ஓகே மச்சி"  என்றான் நீதன்

கீர்த்திக்கு எப்போதும் நீதனில் ஒரு தனிப்பட்ட  பிரியம். மற்ற நண்பர்கள் போல் இல்லாமல் அவன் ஒரு சகோதரன் போல் அவனுடன் பேசுவான். இவனும் அவன் கேட்டால் எது வேண்டும் என்றாலும் செய்ய தயாராக இருப்பான். நீதனுடன் பேசியது அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அவனது தந்தையின் அழுத்தமாக காலடி சத்தம் கேட்டது. உள்ளே வந்த தந்தை அவனை மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்துக்கொண்டார். பின்னர் அவனிடம் பேச தொடங்கிய அவர் "கீர்த்தி நான் உன்னுடன் பேசுவது மிகவும் குறைவு . நான் சொல்வதை நீ அறிவுரையாக எடுத்து கொண்டாலும் சரி இல்லை கட்டளையாக எடுத்து கொண்டாலும் சரி. ஆனால் நான் சொல்வது மட்டும் தான் இனி நடக்க வேண்டும். நேற்று நீ நடந்துகொண்ட விதத்தில் இருந்து  உன்னில் இருந்த ஒரு சிறு துளி நம்பிக்கையும் எனக்கு  போய் விட்டது.அதனால் நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன்" என்றார் அவர்.
"என்னப்பா என்ன முடிவு  எடுத்தீர்கள்"? என்றான் கீர்த்தி
"உனக்கு திருமணம் செய்து வைக்கப்  போகின்றேன், ஏன் பெண்ணும்  கூட பார்த்து விட்டேன், எனது நண்பனின் மகள் தான் இனி உன் மனைவி என்றார்.

அவன் கிரகிப்பதற்கு சிறிது நேர அவகாசம்  கொடுத்த அவர் ஒருமுறை கண்களை மூடி மெளனமாக இருந்து விட்டு ,உனக்கு இதற்கு உடன்பாடு இல்லை என்றால் உனக்கு இனிமேல் இந்த வீட்டில் இடம் கிடையாது "என்று விட்டு மடமடவென்று அறையை விட்டு வெளியேறினார்.

அவர் சொன்னதை கேட்ட அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. மெளனமாக இருந்தான். சிறிது  நேரம் கழித்து அவனது போன் சிணுங்கியது. நீதன் தான் கால் பண்ணியிருந்தான். "ஹலோ மச்சி !உன்னுடன் உடனே பேச வேண்டும், உடனேயே வீட்டை வா" என்றான் கீர்த்தி .

சரியாக அடுத்த பத்தாவது நிமிடத்தில் நீதன் கீர்த்தி வீட்டில் இருந்தான்.
"என்னடா" என்றான் நீதன் .
நடந்தவற்றை சொன்ன கீர்த்தி அவனின் நண்பனின் முகத்தை பார்த்தபடி" இதில் இருந்து தப்ப ஏதும் வழி இருக்கா"? என்றான் .
"ஆமாம் வழி இருக்கு" என்று சொன்ன நீதன் தனது திட்டத்தை விபரிக்க தொடங்கினான். எதுவுமே அறியாத கீர்த்தி அவனது வலையில் மிக எளிதாக விழுந்தான் .

4 கருத்துகள்:

  1. தமிழ் பதிவர்களைக்கான புதிய திரட்டி

    உங்கள் பதிவுகளை பதியுங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஏறக்குறைய இருபது நாட்களுக்கு பிறகு உங்களின் ஐந்தாவது அத்தியாயம் வெளி வந்திருக்கிறது..காலேஜுக்கு போகும் கீர்த்திக்கு இப்போது திருமணம் அவசியமா என்ற கேள்வி எழும்புகிறது...அதுமட்டுமின்றி எல்லா அப்பா மாறும் சொல்லும் அதே சொல்லைத்தான் கீர்த்தியின் அப்பாவும் சொல்கிறார்...வீட்டில் இடமில்லை வீட்டை விட்டு கிளம்பு என்று..எல்லா அப்பாமாறும் பார்க்கும் நண்பனின் மகளைத்தான் கீர்த்தியின் அப்பாவும் பார்க்கிறார்...கீர்த்தி சம்மதிப்பானா அல்லது ஏற்கனவே அவனது கண்களில் பட்ட மீரா அவனது இதயத்தில் இடம்பிடிப்பாளா ..இந்த கேள்விகளுடன் இதயம் அலைபாய்கிறது அத்தியாயம் ஆறுக்காக....!!

    பதிலளிநீக்கு
  3. அடுத்த அத்தியாத்துக்காக இப்பொழுதே இதயம் எங்க ஆரம்பித்து விட்டது...அப்பாவின் நண்பனின் மகளை மணமுடிப்பானா கீர்த்தி....?? எல்லா அப்பாக்களும் பார்க்கும் நண்பனின் மகள்தான் இங்கும் பார்க்கப்படுகிறாள்....?? என்ன இருந்தாலும் காலேஜ் பையனுக்கு திருமணம் செய்து வைக்க போகிறாரே கொஞ்சம் யோசிக்கவேண்டும்...எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை வீட்டை விட்டு போய்விடு இனி இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்கக்கூடாது என்பதுதான்....!! ஏறக்குறைய இருபது நாட்களுக்கு பிறகு வந்த அத்தியாயம் ஐந்து அழகாக இருக்கு...அத்தியாயம் ஆறு எப்படியோ....??

    பதிலளிநீக்கு
  4. அத்தியாயம் நான்கில் குறிப்பிட்டு இருந்தேன்
    மீரா உங்களை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். உங்களுக்கு என்னை தெரியாது என்று பதில் சொன்னான் கீர்த்திவாசன். அவளிற்கு அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை.
    எப்படி தெரியும் ?!என்று கேட்டாள் மீரா. அதை வேறு ஒரு நாளைக்கு சொல்கின்றேன், இப்போது வண்டியில் வருகின்றாயா? என்று வினவினான்!. கீர்த்திவாசன்.
    'இல்லை' நான் பஸ்சிலேயே போகிறேன் என்றாள் மீரா.
    "சரி உன் விருப்பம்"என்று சொல்லி விட்டு தனது காரை நோக்கி நடந்தான் கீர்த்திவாசன்.
    காரில் ஏறிய கீர்த்திவாசனின் மனசு நான்கு ஆண்டுகள் பின்னே நோக்கி சென்றது .
    இப்போது நான்கு வருடத்திற்கு முன்னர் நடந்த கதை போகின்றது

    பதிலளிநீக்கு