அனைவருக்கும் காலை வணக்கங்கள்........
நான் எழுதும் சில விடயங்கள் யாரையாவது புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை என்பதை முதலில் புரிந்து கொண்டு சில கசப்பான உண்மைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தமிழ் நாட்டு சினிமா என்பது தோற்றம் பெற்று 96 வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டது.ஆனால் ஈழத்து சினிமா என்பது ஆரம்பகாலத்தில் விடுதலையை நோக்கிய குறும்படங்களாக உருவாக்கப்பட்டு காலப்போக்கில் மாற்றமடைந்து இப்போது காதல் சம்பந்தமான குறும்படங்களாக மட்டுமே உருவாகிக்கொண்டு இருக்கின்றது.
இந்த காலகட்டத்தில் ஒரு விடுதலையை நோக்கிய ஒரு முழு நீள திரைப்படத்தை எடுக்க தொடக்கி விட்டு முடிக்க முடியாது தடுமாறி நிற்கும் எம் ஈழத்து உறவுகள் சிலரை நான் அறிவேன். அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் தன்மை ஈழத்தமிழர்கள் நாங்கள், விடுதலை வேண்டி போராடியவர்கள் நாங்கள், என்று மார்பை தட்டி கொள்ளும் எந்த ஒரு ஈழ மகனுக்கும் ஏன் ஒரு ஈழ மகளுக்கும் இல்லாமல் போனது மிகவும் ஒரு துரதிஷ்டமான விடையம்.
அது போக ஈழம் ஈழம் என்று பேசி அரசியல் பண்ணும் நம் தொப்புள் கொடி உறவுகள் என சொல்லிகொள்ளும் அந்த தமிழ் நாட்டு தமிழர்கள் கூட கைகொடுக்க மறந்தது அப்பப்பா.....
தாங்க முடியாது உள்ளது.
தட்டு தடுமாறி நாமும் ஒரு ஈழத்து சினிமா கலைஞராக வரவேண்டும் என்ற ஆசையில் தம்முக்குள்ளேயே தமது திறமையை மறைத்து வைத்துக்கொண்டு உலா வரம் எம் சொந்தங்களுக்கு நாம் என்ன செய்து விட்டோம்? தற்போதைய ஒரு ஈழத்து சினிமா கலைஞரை கை தூக்கி விட்டோமா? இல்லை! இல்லவே இல்லை .......
வெளிநாடுகளில் வாழும் நம் புலம் பெயர் ஈழத்து உறவுகள், வேற்று தென்னிந்திய நகரங்களில் இருந்து தமிழ் நாட்டில் தமிழனாக சினிமாவில் நடிப்பது போல நடித்து கொண்டு வாழ்ந்து வரும்
தென்னிந்திய சினிமா முகங்களுக்கு கொடுக்கும் ஊதியம் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை
இந்த பெரிய முகங்களில் ஏதாவது ஒன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் போது அதில் ஒரு பட சம்பளத்தையாவது எம் நாட்டிலும் தமிழ் நாட்டிலும் பசியிலும் பட்டினியிலும் அல்லலுறும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு வேளை உணவுக்காக பயன்படுத்தினார்களா? இல்லை. சும்மா ஒரு கண் துடைப்பு நாடகமாக தாம் வாங்கும் சம்பளத்தில் லட்சத்தில் ஒரு பகுதியை டிரஸ்ட் என்று சொல்லிக்கொண்டு செலவிட்டு கொள்கின்றார்கள். எனது சந்தேகம் என்னவென்றால் டிரஸ்ட் என்று இவர்கள் நடத்துவதும் தமது வருமான வரி சிக்கலில் இருந்து தப்புவதற்கான ஒரு கண் கட்டி வித்தையாகவே நினைக்கின்றேன்......
நாம் செய்யும் கேவலம் கெட்ட விடையம் என்னவென்றால் நம் குழந்தைகளை பட்டினி போட்டு கொண்டு அடுத்தவனுக்கு அமுதம் இடுகின்றோம். இதைதான் நம் மூதாதையர் "பிறர் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும் என்றார்கள்" போல. இந்த கருத்திலும் ஒரு குழப்பம் இப்படி சொன்னவர்கள் மீண்டும் "அப்பன் வீட்டுக்கு வீடு பிச்சை எடுக்க மகன் கந்தவன கடையில் காச்சி கொடுக்கின்றான்" என்றார்கள் . இதையெல்லாம் விடுவோம்
நாம் நம் உறவுகளின் திறமையை உலக்குக்கு கொண்டுவர போராடுவோம். ஒவ்வொரு தனி மனிதனும் நினைத்தால் முடியாது என்று எதுவும் இல்லை. எமக்குள் எம் உறவுக்குள் ஆயிரம் ஆயிரம் கலைஞர்கள் சிறந்த எழுத்தாளர்களாக,பாடலாசிரியராக,இசையமைப்பாளர்களாக,
இயக்குனர்களாக, தயாரிப்பாளர்களாக,வசனகர்த்தாவாக, எடிட்டராக, பாடகராக உள்ளேம்.
வளர்ந்து வரும் நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரு நல்ல சினிமா கலையை உலகுக்கு கொண்டு வருவோம். நாம் எந்த தேசத்தில் இருந்தாலும் நமை இணைக்கும் பாலமாக இந்த தொழில் நுட்ப வளர்ச்சி இருப்பதால் மிக சிறந்த ஒரு படத்தை எடுப்பதற்கு உலகில் உள்ள எல்லா இளம் கலைஞர்களும் போட்டி போட்டு மக்கள் முடிவில் திருப்தி அடைந்து முதல் ஒரு சிறந்த படைப்பை உருவாக்குவோம். இதை வாசிப்பதுடன் மட்டும் நின்று விடாது நடைமுறை படுத்த விரைவோம்...... ஒத்த கருத்துள்ள உறவுகள் உங்கள் கருத்துக்களை இடுவதன் மூலம் எம் கைகளை பலப்படுத்துங்கள். முடிந்த அளவு பகிர்ந்து கொள்ளுங்கள். பார்க்கலாம் எவ்வளவு பேர்
உண்மையாக இருக்கின்றோம் என்று ......
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் பூமியிலே
போகும் இடம் தூரமில்லை சாவு எமக்கொரு பாரமில்லை
நல்லது தோழி ...... என் தனிப்பட்ட விருப்பமும் அதுதான் ஆனால் புலம்பெயர் படைப்பாளர்கள்
பதிலளிநீக்குஎன்ன செய்கிறார்கள் என்றால் எமது மொழியை மறந்து அவர்கள் சார்ந்து வாழுகின்ற நாட்டின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.
எமது அடையாளங்களை மறக்க கூடியதாக பாடல்களை தயாரிக்கிறார்கள் ...
எமது மொழி கலாச்சாரம் சார்ந்து பாடல்கள் குறும்படங்கள் வெளிவரும் போது தான் எமது
தாய்மொழி பெருமை கொள்ளும்..... இந்த புதிய புலம்பெயர் படைப்பாளர்களின் போக்கு ஆங்கில மொழி உலகம் பூராகப்
பரவ வழிவகை செய்ததை போல ஒரு செயல் .... தமிழ் மொழி செழித்தோங்க இது நன்மைபயக்குமா எனத் தெரியவில்லை...
இது எனது தனிப்பட்ட கருத்து..
MMM NALLA KARUTHU ELLORUM ATHAIRIKKA VEENDIYA VIDAYAM
பதிலளிநீக்கு