சும்மா ஒரு பாட்டு வடிவம் முயற்சி செய்தேன் பாருங்கள் உறவுகளே....................
ஆண் : மழைசாரல் தீண்டும் போதும் நெஞ்சம் அலை பாயுதே
மானே உன்னை தீண்ட மனசும் கொஞ்சம் ஏங்குதே
என் மல்லிகைபூவே மாமன் மகளே கிட்டவாடி
இந்த காளை நெஞ்சு கொதிச்சு போச்சு முத்தம் தாடி
பெண்:மழைசாரல் தீண்டும்போது உள்ளம் கொள்ளை போகுதே
தாவணி ஈரம் பட்டு நெஞ்சு குழி ஏங்குதே
என் களவாணி கறுத்தானே கிட்ட வாடா
இந்த குமரி வேகம் குறையும் மட்டும் முத்தம் தாடா
ஆண்: கண்ணாலே காதல் சொல்லி அடங்காத காளை
என்னை கையாலே வளைச்சு போட்டாயே திருடி நீதானே
எறும்பூர கல்லும் தேயும் அடி உன் கள்ள பார்வையாலே
நானும் தேஞ்சே போனேனே என் பூ விழி நீதானே
பெண்:காதல் வேண்டாம் என்ற போதும் என்னில் வந்து
ஒட்டி கொண்டாயே அட போக்கிரி நீதானே
உந்தன் குறும்பு சிரிப்பு பார்த்து என்னை மறந்தே
போனேனே என் பெண்மையின் இலக்கணம் நீதானே
ஆண் : தேன்சிந்தும் மலரே உனை குடிக்கும் வண்டு நான்தானே
கடிகார முள்ளை போல ஒட்டி கொள்ளேண்டி என் காதல் தேவதையே
நடுசாமம் ஆகி போச்சு அடி தூக்கம் கூட தொலைஞ்சு போச்சு
பெண்ணே உன்னாலே கனவில் வந்து அணைத்து கொள்ளேண்டி என் பூமாலையே
பெண்:வாழும் வாழ்க்கை நீதானே என் வசந்த காலமும் நீதானே
பஞ்சில் வெண்மை போல கலந்தே இருப்பேன் நான் தானே
என் உயிரின் மூச்சு நீயாய் ஆச்சு அட என் ஆயுள் முடிவும் நீளமாச்சே
என் ராமன் நீதானே காதல் வேலி தாண்டி வரேன் அன்பே உன்னாலே
கன்னி முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...அழகாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்..
பதிலளிநீக்குசூப்பர்
பதிலளிநீக்கு