ஞாயிறு, 15 ஜூலை, 2012

விவாகரத்துக்களும் ,சமூக சீர்கேடும்


வணக்கம் உறவுகளே :
இன்றைக்கு நான் விவாதிக்க எடுத்துக்கொண்ட விடயம் கொஞ்சம் எதிர்மறையானதாக இருக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.ஆனால் நம் சமுதாயத்திற்கு தேவையான ஒன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன்.என்ன ரொம்ப பீடிகை போடுகின்றேன் என்று நினைக்கின்றீர்களா கொஞ்சம் அப்படிதான் ......



சரி விடயத்திற்கு வருவோம் அதிகரித்து உள்ள விவாகரத்துக்களும் சமுதாய சீர்கேடும்......

இப்போது நமது நாடுகளில் குறிப்பாக (இந்திய ,ஸ்ரீலங்கா) போன்ற நாடுகளில் விவாகரத்துக்கள் மிக உயர்ந்த அளவுகளில் அதிகரித்து உள்ளது. இதற்கான காரணங்களை நாம் உற்று நோக்குவோமானால்

தொழில்நுட்பம்

பொறுமை என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி மிகவும் குறைந்து விட்டது . இப்போது நாங்கள் அதிகளவில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் நாம் நினைக்கும் விடையத்தை மிக இலகுவாக பெற கூடியதாக உள்ளது . ஒரு கம்பியூட்டர் இருந்தால் இந்த உலகத்தையே கையுக்குள் கொண்டுவர கூடியதாக உள்ளது. அதனால் நமது நேரமும் தேவையும் இலகுவாகின்றது.நமது தேவையை இலகுவாக்க கொண்டு வந்த தொழில்நுட்பம் போல உயிர் உள்ள கணவனோ மனைவியோ விரைவாக செயல் படவில்லை என்றால் ஆரம்பத்தில் கோபம் ஏற்பட்டு நாளடைவில் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற எண்ணம் தோன்றுகின்றது. அதன் விளைவாக பிற ஆண்களுடன் தனது கணவனையும்   பிற பெண்களுடன் தனது மனைவியையும் ஒப்பிடும் தன்மை ஏற்படுகின்றது. இந்த தன்மையானது காலப்போக்கில்  வீணான சந்தேகத்தையும்  இகோவையும்  ஏற்படுத்துகின்றது.அதன் முடிவு கடைசியில் விவாகரத்தாகின்றது .  இதனால் தான் அதிகளவில் ஐடி துறையில் வேலை செய்பவர்கள் விவாகரத்துக்களை அதிகளவில் ஏற்படுத்துகின்றார்கள்.

அடுத்ததாக கல்வியறிவு 

கல்வியறிவு கூடும் போது ஒரு ஆரோக்கியமான சூழல் தான் உருவாக வேண்டும் ஆனால் இப்போது கல்வி அறிவானது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஒரு திமிர் குணத்தையும், விட்டுகொடுக்கா  தன்மையையும், எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையையும் உருவாக்குகின்றது. கல்வி என்பது ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து தனக்காகவும் மற்றவருக்காகவும் வாழவேண்டும் என்ற ஒரு அறிவை கொடுக்கும் விடையமாக பார்க்கபடாமல் வெறும் பணம் பண்ணுவதற்கு  மட்டுமே போடப்பட்ட முதலாக பார்க்கப்படுவதால் இந்த கல்வி அறிவு என்பதே இன்றைய காலகட்டத்தில் ஒரு கேள்வியாக தொக்கி நிற்கின்றது.

அழகு என்ற மாயை 

ஒரு திருமணமாக ஆணோ இல்லை ஒரு பெண்ணோ வெளியிடங்களில் வேலை செய்யும் போது பல தரப்பட்ட பேருடன் வேலை செய்யவேண்டி உள்ளது .அவர்கள் வீட்டில் கழிக்கும் நேரத்திலும் வேலையிடத்தில் கழிக்கும் நேரம் அதிகமாகின்றது. இதனால் யாரும் அழகாக பார்பதற்கு லட்சணமான பெண்ணோ இல்லை ஆணோ சிரிக்க சிரிக்க பேசும் போது மனம் தடுமாறிபோகின்றது.( ஆனந்தவிகடனின் 2006 கணக்கெடுப்பின் படி 78% ஒரு சராசரி ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணத்திற்கு முன்னரோ இல்லை பின்னரோ வேறு ஒரு பெண்ணுடனோ இல்லை ஆணுடனோ தொடர்பு ஏற்படுகின்றது ).

மூன்றாம் நபர்களின் தலையீடு 

ஒரு குடும்பம் என்று வந்தால் அவர்களின் பிரச்சனைகள் தேவையில்லாமல் வேறு நபர்களுடன் பகிரப்படும் போது அநேகமான நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.

அன்பை பரிமாறும் தன்மை 

 இன்றைய கால கட்டம் ஒரு இயந்திர மயமாதல் போல காட்சி தருவதால், குடும்ப உறவுகளுக்கிடையில்   ஒரு அன்னியோன்னிய பரஸ்பர அன்பு காணமல் போய்  விட்டது. கணவன் மனைவி இருவரும் எதோ ஒரு எதிர்பார்ப்பில் இருப்பதாலும் அனேக திருமணங்கள் விவாகரத்தாகின்றது. (ஒரு குழந்தைக்கு கூட "சுவீட் தருகின்றேன்  முத்தம் தா" என்று கேட்கும் பெற்றோர்கள் தான் அதிகம்). ஆண்களாக இருந்தால் பெண் என்பவள் இப்படிதான்  இருக்கவேண்டும் என்று ஒரு சிந்தனையுடனும் பெண்களாக இருந்தால் ஆண் என்பவன் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனையிலும் திருமண பந்தத்துக்குள் கால் எடுத்து வைப்பதால் அந்த எதிபார்ப்புகள் கிடைக்காமல் மாற்றம் அடையும் போது விவாகரத்து ஆகின்றது .

ஒரு விவாகரத்தால் உங்கள் குழந்தைகளும் உங்கள் சகோதரங்களும் உங்கள் சமூகமும் பாதிக்கபடுகின்றது. எங்களால் முடிந்தவரை பெருகி வரும் விவாகரத்துக்களையும் சமூக  சீர்கேட்டையும் குறைப்போம். சில தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் விவாகரத்து தேவையானதாக உள்ளது. அதற்காக சில சில சின்ன காரணுங்களுக்காக விவாகரத்தை தேட வேண்டாம் .

ஆகவே எனதருமை உறவுகளே நட்புக்களே எதையும் எதிர்பார்காதீர்கள். ஒவ்வொருவருக்கு ஒரு தனிப்பட்ட சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அளியுங்கள். நல்ல ஒரு சமூகத்தை கட்டி எழுப்புங்கள் ...

அன்பு என்பது யாதெனில் எல்லோரும் இன்புற்று இருக்க செய்வது

அன்புடன்
நிலாகவி

2 கருத்துகள்:

  1. எனதருமை உறவுகளே நட்புக்களே எதையும் எதிர்பார்காதீர்கள். ஒவ்வொருவருக்கு ஒரு தனிப்பட்ட சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அளியுங்கள். நல்ல ஒரு சமூகத்தை கட்டி எழுப்புங்கள் ..
    வாழ்த்துகள் தோழி..உங்களுடன் செந்தில் ...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு மிகவும் அருமையாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் ......

    பதிலளிநீக்கு