திங்கள், 16 ஜூலை, 2012

ஏமாற்றப்படுவது ஆண்களா பெண்களா ?


ஆண்கள் கவிதை வடிக்கும் போது தாங்கள் பெண்களால் ஏமாற்றப்பட்டது போல நிறைய கவிதைகள் எழுதுகின்றார்கள். அதுவும் போதாது என்று தாஷ்மகால் காதலின் சின்னம் என்றும் அதை ஒரு ஆண் தன காதலை நிலைநாட்ட கட்டியதாகவும் பெண் தன காதலை நிலை நாட்ட எதுவும் செய்யவில்லை என்றும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் ஏமாற்றப்படுவது ஆண்களா பெண்களா 


அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அனேக மக்களின் வாழ்க்கைதரம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாலும் கல்வி அறிவு மிகவும் பின்தங்கி இருப்பதாலும் பெண்கள் இப்போதும் சமையல் அறை தான்  தமது ராச்சியம் என்று நம்பிக்கொண்டு இருப்பதாலும் என் கருத்துப்படி பெண்களே அதிகமாக ஏமாற்றப்படுகின்றார்கள். 

எப்படியாயின் கல்யாணத்திற்கு பின்னர் அநேகமான பெண்கள் வீட்டில் இருந்துகொண்டு வீட்டு வேலையை செய்துகொண்டு இருக்கும் நிலையில் எந்த ஒரு தேவைக்கும் அவளது கணவனை சார்ந்து இருக்கும் தோற்றம் பெறுகின்றது . ஒரு ஆணின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை கொண்டு நடத்த முடியாத சிக்கல் ஏற்படும் போது பெண் தனது ஆசைகளை கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் விட்டு கொடுக்கின்றாள். அவள் அப்படி விட்டு கொடுத்து வாழ்ந்தால் தான் தாய் எனவும் உயர்வானவள் எனவும் நம் முன்னோர் உருவகப்படுத்தி இருப்பதால் அவள் தனது உண்மையான விருப்புக்களையும் ஏமாற்றங்களையும் மறைக்கின்றாள். எனவே ஒரு சாதாரண ஒரு நடுத்தர குடும்ப பெண்கள் எல்லோரும் ஒரு ஏமாற்றத்துடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதை வாயை திறந்து வெளியில் சொல்ல கூட அச்சம் . எதோ ஒரு திரையை முகத்தில் போட்டு கொண்டு வாழ்கின்றார்கள். என் கருத்துப்படி இங்கு அதிகம் ஏமாந்து போவது பெண்கள் தான் .

எனக்கு ஒன்று இன்னமும் புரியலை ,ஆனா ஊனா ன்னா எதற்கு என்னவென்றாலும் தாய் தான் விட்டு கொடுக்க வேண்டும் தந்தை விட்டுகொடுத்தால் என்ன குடும்பம் விழங்காமல் போய் விடுமா என்ன?, இல்லை அறிவு வந்த பிள்ளைகள் தாய்க்காக விட்டு கொடுக்க கூடாதா என்ன ?

அது தவிர கல்யாணம் ஆகி எதோ ஒரு சந்தர்பத்தால் தனித்து வாழும் பெண்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகின்றார்கள். தாம் ஏமாற்ற பட்டு விட்டதை கூட வெளியில் சொல்லாமல் தப்பு செய்யும் ஆண்கள் மேலும் தப்பு செய்ய இவர்களே வழி வகுக்கின்றார்கள். எதாவது ஒரு சந்தர்பத்தில் ஏமாந்து விட்டால் எதிர் கேள்வி கேளுங்கள். முடங்கி இருக்கும் உங்கள் அறியாமை மேலும் பல தப்புக்கு வழிவகுக்கும் . தப்பு செய்பவனை விட தப்புக்கு வழிவகுத்தவனுக்கு தான் தண்டனை அதிகம் . சோ பெண்களே உசார் தப்பு யார் செய்தாலும் தப்புதான். சமூகத்தில் இருக்கும் கரையான்களை களைவோம். எதற்கும் தயங்காமல் சட்டபடி நடவடிக்கை எடுங்கள் ...

அட கடைசியா நம்ம ஆண்களும் ஒரே ஒரு விடயத்தில் ஏமாறுகின்றார்கள். திருமணமாகாத அழகான பெண்களின் வார்ததையிலும் நடிப்பிலும் தான்பா .....

என்ன உண்மையா இல்லையா ஆண்களே?

4 கருத்துகள்:

  1. //பெண் தன் காதலை நிலை நாட்ட எதுவும் செய்யவில்லை// இதற்கான பதிலை

    http://swaminathanmadhumalar.blogspot.in/2012/06/later-chola-kings-sembiyanmadhevi.html

    என்ற விலாசத்தில் காணலாம்.
    -மு.சுவாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  2. நான் அப்படி சொல்லவில்லை இந்த கால கவிஞர்கள் அப்படி கூறுகின்றார்கள் என்று சொன்னேன்

    பதிலளிநீக்கு
  3. நிலா நிங்கள் கூறியாது போல் வாழ்க்கையில் ஏமாற்றப்படுவது ஆணா, பெண்ணா என்றால் என் கருத்துப்படி இருவரும் தான் சரியான புரிதல் இல்லாதது தான் இதற்கு காரணம் என்று நான் சொல்வேன்.இதில் நாம் பண்பாடு கலந்துள்ளதால் சரியான ஒரு முடிவுக்கு வரமுடியாத சூழல் பண்பாடு வகுத்தது ஆண்ணாக இருந்தாலும் அக்கால குடும்ப வாழக்கை ஒரு சிலரை தவிர மற்றவர்கள் ரெம்ப சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தனர் ஆனா இப்ப என்ன? எதற்கு எடுத்தாலும் இருவரும் குறை கூறுவதி்லே காலம் கடந்து இதில் யார் யாரை ஏமாற்றுவது .....................????

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தினகரன் அண்ணா ,
    ஆண்கள் அநேகமான நேரங்களில் வெளிசூழலில் தமை ஈடுபடுத்தி கொள்வதாலும் எதையும் மீண்டும் மீண்டும் அசை போடும் தன்மை இயல்பிலேயே குறைவாக காணப்படுவதாலும் சார்ந்து வாழும் இயல்பு மிக அரிதாக காணப்படுவதாலும் பெண்கள் தான் அதிகளவில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பாதிக்க படுகின்றார்கள் இல்லை ஏமாறுகின்றார்கள்

    பதிலளிநீக்கு