சமூகம் என்பது என்னவென்ற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் ஏற்படுகின்றது. ஒவ்வொரு தனி மனிதமும் குழுமமாகி அந்த குழுமத்தின் சேர்கை சமூகமாகின்றது.இன்றைய காலகட்டத்தில்அனேக தனி மனித இயல்பான,து மிகவும் மோசமான மனநிலையில் உள்ளதா,ல் அதாவது போட்டி, பொறாமை, காழ்புணர்ச்சி, வஞ்சகம், சூது, போன்ற இயல்புகள் மேல் ஓங்கி காணப்படுவதால் அந்த மனித இயல்பானது, குழுமமாகி சமூகமாகும் போது ஒரு ஆரோக்கியமில்லாத சமூகமாக உருவாகின்றது .அதனால் இன்றைய சமூகம் பற்றி நாம் மிகவும் வருத்தப்படவேண்டியதில்லை. எங்கள் மனதில் தோன்றும் சில நல்ல விடையங்களை மற்றவருக்கு பங்கம் விளைவிக்காத படி தர்ம நியாய வழிமுறைகளில் செய்வது தப்பில்லை .
அதுவும் ஒரு பெண்ணாக ஒரு விடயத்தை செய்ய தொடங்கினால் அந்த சமூகம் எப்படி பார்கின்றது என்பதற்கு சில உதாரணம் சொல்ல ஆசை படுகின்றேன். இவை யாவும் ஒரு சமூக அலசலின் பின்னரோ அல்லது நேரடியான அனுபவத்திலேயோ எழுதப்பட்டவை . யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை .
>சிறு குழந்தைகளில் இருந்து வருவோம் ஒரு சிறு குழந்தை கொஞ்சம் அடாவடியாக பேசும் தன்மையாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் குறும்புத்தனமாகவோ இருந்தால் மற்றவர்களின் பார்வையில் அது குழப்படி பிள்ளையாக பார்க்கப்படுகின்றது. அதுவே தமது குழந்தையாக இருந்தால் "அட சமத்து, எப்படி பேசுது பார்? ,ரொம்ப சுழி எப்படியும் பிழைத்து விடுவாள் என்பார்கள் .
>வளர்ந்து வரும் போது ஒரு குழந்தை கொஞ்சம் விளையாட்டில் ஆர்வமானவராக இருந்தால் "அட, இந்த விளையாட்டை வைத்து எதுவும் செய்ய முடியாது சும்மா டைம் வேச்ட்டு" என்பார்கள் அதுவே தமது குழந்தையாக இருந்தால்,எதிர்கால சச்சின் என்றோ,,இல்லை முரளி என்றோ சொல்லி கொள்வார்கள்
>சரி ஒரு பொண்ணு கொஞ்சம் சுமூகமாக எல்லோருடனும் பழகினால், ஈசியாக அந்த பெண்ணின் நடத்தை சரி இல்லை என்பார்கள் . அதுவே தமது வீட்டு பெண்ணாக இருந்தால் நம்ம பொண்ணு சோசல் கேர்ள் எந்த கரவு வஞ்சகம் இல்லாமல் யாருடனும் பேசும் என்பார்கள்
>ஒரு பொண்ணு டாக்டருக்கு படிக்க விரும்பினால் ஐயோ பொண்ணுகளா டாக்டருக்கு படித்தால் குடும்பத்தை பார்க்காமல் நேரம் கெட்ட நேரம் ஹாஸ்பிடலில் தான் இருக்கவேண்டும் என்பார்கள் .இதுவே தனது பெண் என்றால் "ம்ம்ம்ம் என் பொண்ணு டாக்டரா இருக்கா" என்று பெருமை பேசி கொள்வார்கள் .
ஒரு தாயாக இருந்து சில வேளைகளில் ஏதும் வேலை ஓரளவு வளர்ந்த ஒரு பன்னிரண்டு பதின்மூன்று வயது ஆண் குழந்தைகளை கொண்டு ஏதும் வேலை வாங்கினால், இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளை கொண்டு வேலை வாங்கின்றதும் இதுவும் ஒரு தாயா ? என்று புரளி பேசுவார்கள். இதுவே தமது குழந்தைகளை கொண்டு தாம் வேலை வாங்கினால் "ம்ம்ம்ம் பொறுப்பாய் என் குழந்தைகளை வளர்கின்றேன்" என்பார்கள்.
ஒரு பெண்ணாக ஏதும் எழுதினால், இவளுக்கு வேற வேலை இல்லை எதோ சும்மா வேலை வெட்டி இல்லாமல் எதோ அலம்புகின்றாள் என்பார்கள்.அதுவே தமது பெண் குழந்தை எழுதினால் எம் பொண்ணுக்கு என்ன எழுத்தாற்றல் என்றும் எம் பொண்ணு எதிர்கால கதாசிரியர் என்றும் பேசி கொள்வார்கள்.
எதோ ஒரு சந்தர்ப்ப வசத்தால் கணவனோ மனைவியோ பிரிந்து வாழ்ந்தால் பெண்ணை பற்றி ஆயிரம் குறை பேசுவார்கள். அதுவே தமது குடும்பம் என்றால் பாரதி கண்ட புதுமை பெண் என்பார்கள் .
இதனால் இன்றைய காலகட்டத்தில் சமூகம் என்பது ஒரு நிலையில்லாத பணத்திற்கு முன்னிரிமை கொடுக்கும் ஒரு ஈன வழிகாட்டியாக இருப்பதால் அந்த சமூகத்தை நாம் மதிக்க தேவையில்லை .
ஆகவே எமது உறவுகளே சமூகம் என்பது எமக்கு வழிகாட்டியாக இருந்தால் அதனுடன் ஒத்து வாழலாம் அதுவே எமக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் அந்த தடையை உடைத்து எறிவதில் தப்பில்லை.
நிலாகவி
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக