புதன், 18 ஜூலை, 2012

காக்கைவன்னியன் கூட்டங்களே


நான் முகபுத்தகத்தில் வலம் போது சில ஆச்சரியத்தக்க விடையங்களையும் ,சில குதர்க்கமான விடையங்களும், சில வேடிக்கையான விடையங்களையும், சில எதற்கும் பயன்படாத விடையங்களையும் பார்ப்பேன்.



என் மனதில் பட்ட குதர்க்கமான விடையமாக ஈழ விடுதைலை போராட்டமும், தலைவர் பிரபாகரனும் பற்றிய கருத்துக்கள் மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. எதோ விடுதலை போராட்டமானது தனித்து பிரபாகரனால் மட்டும் நடத்தப்பட்டது என்றும் தமிழினம் தலைவரால் அழிந்து போனது என்றும் காக்கை வன்னியன் கூட்டம் கூப்பாடு போடுகின்றது. பணம் மட்டும் பேசும் இன்றைய கேவலமாக சமூகத்தில் உண்மை உறங்கி தான் கிடக்கின்றது. அன்பு முஸ்லீம் உறவுகளை தமிழினத்திற்கு எதிராக திருப்பி விடும் வேலையையும் இந்த காக்கை வன்னியன் கூட்டம் செய்துகொண்டு இருக்கின்றது. தலைவரின்  இறுதி  நேரம் வரையும் அவரது மெய் பாதுகாவலனாக இருந்தது ஒரு தமிழ் முஸ்லிம் உறவு என்பது எம்மில் பலருக்கு தெரியாத உண்மை. பஞ்சம் பிழைக்க அரசியலும் பத்திரிகையும் நடத்தும் போலிகாரனை நம்பி ஏமாறும் மக்கள் கூட்டம் தான் எப்போதும் அதிகம்.

தமிழன் தமிழன் எவண்டா தமிழன்
மகிந்தருக்கு காவடி தூக்குபவன் தமிழனா
மானம்கொட்டு அரசியல் பிச்சை எடுப்பவன் தமிழனா
தாய் நாட்டை மீட்கவும் தமிழ் இனத்தை காக்கவும்
நினைப்பவன் எவனடா அவன்தான் தமிழன்

வீர பேச்சு பேசி கொண்டு நடிப்பவன் தமிழனா
வீழ்ந்த பின்பு குற்றம் சாட்டி பிழைப்பவன் தமிழனா
கூடி நின்று குடியை கெடுத்து ரசிப்பவன் தமிழனா
சிறை உறவிடம் பணத்தை கொள்ளை அடிப்பவன் தமிழனா
ஒழுக்கம் கெட்டு வீதிவெளியில் கிடப்பவன் தமிழனா
தமிழை பேச மறுப்பவன் தமிழனா
தாய் நாட்டை மறப்பவன் தமிழனா
ஈழ தேசம் காணவும் வீர களம் ஆடவும் நினைப்பவன்
எவனடா அவன்தான் தமிழன்

அஞ்சி அஞ்சி ஒழித்து இருப்பவன் தமிழனா
கொடுமை பார்த்தும் ஊமையாய் நடப்பவன் தமிழனா
காதல் சொல்லி காமம் செய்ய துடிப்பவன் தமிழனா
பிஞ்சு மனசில் நஞ்சை ஊற்றி விதைப்பவன் தமிழனா
மாவீரர் பெருமையை பழிப்பவன் தமிழனா
புனித போரை குறையை சொல்லி அழிப்பவன் தமிழனா
தமிழன் வீரம் அறியவும் தன்னை ஆவுதி ஆக்கவும்
நினைப்பவன் எவனடா அவன்தான் தமிழன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக