புதன், 25 ஜூலை, 2012

திருமணங்களும், பெயருக்கடி பட்டங்களும்


 நாங்கள்  எல்லோரும் ஒரு வார விடுமுறையில் இருந்து வந்தவுடன் எமது கடித பெட்டியில் கடிதங்கள் நிரம்பி இருந்தது . அதில் வந்த ஒரு திருமண அழைப்பிதழ் எனக்கு ஒரு கேள்வியை என் மனதில் ஏற்படுத்தியது. மணமகன் பெயருக்கருகில் இருந்த பட்டமும் மணமகள் பெயருக்கருகில் இருந்த பட்டமும் தான் அது.



இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் தான் இவ்வாறு பட்டங்களை மணமகன், மணமகள் பெயருக்கடியில் அநேகமானவர்கள் இடுகின்றார்கள்.இப்படி பட்டங்களை இடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட குடும்பங்கள் சொல்லி கொள்ள முயல்வது என்ன? சத்தியமாக எனக்கு புரியாது உள்ளது. அந்த பட்டங்கள் ஏதாவது, மணமாகும் தம்பதியருக்கு எதிர்காலத்தில் சிலவேளைகளில் குடும்பத்திற்குள் ஏற்படும் பிணக்குகளை தடுக்க போகின்றதா? இல்லை ஏதாவது அதிகப்படியான வசதி வாய்ப்பை பெற்று தரப்போகின்றதா? இல்லை வரும் குலம் இந்த வழிவம்சம் என்று சொல்ல போகின்றதா?

பாமர மக்களிடையே அந்த ஒரு மாதிரி எண்ணம் இருந்தால் அதை நாம் ஓரளவு ஏற்று கொள்ளலாம். ஏன் எனில் அந்த வம்சம் மேலும் மேலோங்கவும் அவர்களின் பெயரின் பின்னால்  இடும் பட்டங்கள் கூடிய கல்வியறிவையும், மேலான சமூக சிந்தனையும் உருவாக்கும் பட்சத்திலும், அந்த சமூக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று ஒரு சிந்தனை என்னுள் இருப்பதாலும் மட்டுமே என்னால் ஏற்று கொள்ள முடிகின்றது.

அது தவிர படித்த நல்ல நிலையில் வாழும் ஒரு நடுத்தர வசதி வாய்ப்பு உள்ள ஒரு சமூகத்திடையே இவ்வாறான எண்ண போக்கு உருவாவது எதிர்காலத்தில் சீதன அதிகரிப்புக்கு வழி வகுப்பதுடன், போலியாக பல  பட்டங்களை இடுவதற்கும் , இன்னும் ஒரு ஏமாற்றி பணம்  பார்க்கும் வியாபர கல்யாணத்திற்கும், இந்த தனிப்பட்ட பட்டங்களை வழங்க சில கம்பனிகள் தோன்றுவதற்கும் சில வேளைகளில் வழிவகுக்கும் என்பது என் கருத்து.

கல்வி அறிவும் நாம் வாங்கும் பட்டமும் எங்கள் குடும்பத்தையும் எமது சமூகத்தையும் முன்னேற்ற பயன்படுத்த பட வேண்டுமே ஒழிய கல்யாண சந்தையில் பேரம் பேச பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாக பார்க்கப்பட கூடாது. திருமணம் என்பது இரு மனங்களின் கலப்பே தவிர இரு பட்டங்களின் கலப்பாக இருக்க கூடாது.

2 கருத்துகள்:

  1. இப்ப நடப்பதெல்லாம் திருமணம் இல்ல சகோ..எல்லாமே வியாபாரம் தான் என்ன செய்வது சமூகம் வியாபாரத்தில் முன்னேரி வருகிறதல்லவா

    பதிலளிநீக்கு
  2. கல்வி அறிவும் நாம் வாங்கும் பட்டமும் எங்கள் குடும்பத்தையும் எமது சமூகத்தையும் முன்னேற்ற பயன்படுத்த பட வேண்டுமே ஒழிய கல்யாண சந்தையில் பேரம் பேச பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாக பார்க்கப்பட கூடாது. திருமணம் என்பது இரு மனங்களின் கலப்பே தவிர இரு பட்டங்களின் கலப்பாக இருக்க கூடாது.
    --------- super..congrats ..with kind regards ..senthil......

    பதிலளிநீக்கு