பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு காரணம் அணியும் ஆடைகளா?
இந்த கேள்விக்கான விடை என்னை பொறுத்தவரையில் இல்லை என்பதுதான்.
நம் முன்னோர் அணிந்த ஆடைகள், இப்போது எம் பெண்கள் அணியும் ஆடையிலும் பார்க்க மிகவும் சிறியதாகவும் சில சமயங்களில் இலை, தளைகளே ஆடையாகவும் இருந்து வந்துள்ளது.
நாகரிகம் ஓரளவு வளர்ந்த பின்னர் எப்படி ஆடையை அணிய வேண்டும் என்று தெரியாத நிலையில், தமக்கு தெரிந்த வகையில் நீளமான துணிகளை உடம்பு முழுவதும் சுற்றி கொண்டான் ஆதி மனிதன்.
காலம் போக போக முழுமையாக ஒரே நீளமாக இருந்த துணியானது மாற்றமடைந்து மேல் சட்டை ,பாவாடையாக மாற்றம் அடைந்து இன்று மினி பாவாடையிலும் லோ கட் பிளவுசிலும் வந்து நிற்கின்றது.இந்த இடைபட்ட கால நிகழ்வில் எங்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்வாங்கப்படுகின்றது தெரியுமா?
அதி நவீனம் என்று நினைத்துகொண்டு வாழும் நாங்கள், எங்கள் மனங்களை குப்பை கூளங்களால் மட்டும் அதிகளவில் நிரப்புவதால் தான் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கப்படுகின்றது.
வளர்ச்சியடைந்த தொழில் நுட்பத்தை வாழ்க்கை பாதையை முன்னோக்கி நகர்த்த பயன்படுத்தாமல் இருப்பதாலும், ஆண்டாண்டு காலமாக போக பொருளாக மட்டுமே பெண்கள் அதிகளவு ஆண் வர்க்கத்தால் பார்க்கப்படுவதாலும், இன்றைய சினிமா சிந்தனையாலும், அழகு மட்டும் தான் ஒரு ஆணை ஈர்க்கும் என்ற முட்டாள் தனமான அதிகளவான பெண்களின் சிந்தனையும் கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமாகின்றது.
ஒரு பெண் எப்போது தன்னை சுற்றி பிறர் கண்ணுக்கு தெரியாத ஒரு முள் வேலியை அமைத்துக்கொண்டு ஒரு துணிவுடன் செயல் பட்டு வந்தால் ஒரு ஆணால் அவ்வளவு இலகுவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட முடியாது.
விழித்திரு என்றும் துணிந்திரு

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக