வெள்ளி, 27 ஜூலை, 2012

காதல் திருமணமும் மணமுறிவும்


இப்போதைய காலகட்டத்தில் காதல் திருமணங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரித்து உள்ளதோ, அதே அளவிற்கு அந்த காதல் திருமணங்கள் முறிவடைந்தும் போகின்றது.
காதல் திருமணத்தை ஆதரிக்கும் கூட்டமாக உள்ள நாங்கள், இப்போது மிகவும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

காதல் திருமணங்கள் அரங்கேறிய வேகத்திலேயே முறிவடைந்து போவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது புரிந்துணர்வு இல்லாமை,கவர்ச்சி மோகம், ஆடம்பர வாழ்க்கையில் மோகம்,ஆணாதிக்க சிந்தனையில் உள்ள ஆணும் சுதந்திரம்,பெண்ணுரிமை பற்றிய தெளிவில்லாத மனநிலையில்  உள்ள பெண்ணும் இன்றைய காதல் ஜோடிகளாக வலம் வருவதால், கல்யாணமான சில காலத்திலேயே மணமுறிவுக்கு வருகின்றார்கள்.

இன்னும் ஒரு முக்கியமான நிகழ்வாக  நான் பார்ப்பது அநேகமான  காதல் திருமணங்களில்  பெற்றோரின் பங்களிப்பு  மிகவும் குறைவாக இருப்பதால் காதலனும் காதலியும் கணவன் மனைவி ஆகும் போது தமது பொறுப்புக்களில் இருந்து தவறுவதும்,பெண்களிற்கு பாதுகாப்பு மிகவும் குறைவாகவும் இருப்பதுடன், காதல் திருமண ஜோடிகளிடையே ஒரு அலட்சிய மனபாங்கு காணப்படுகின்றது.இவ்விதமான மன சிந்தனையும் நாளடைவில்  திருமண முறிவுக்கு காரணமாகின்றது..

காதல் திருமணமோ இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருப்பினும், ஆசைகளை குறைத்து, ஒழுக்க விதியை மாறாமல் தர்ம நியாயப்படி வாழ்ந்தால் தேவையிலா மணமுறிவை குறைக்க முடியும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையவர்
என்பும் உரியர் பிறர்க்கு ...........

1 கருத்து:

  1. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுவதில்லை அவை இருமனம் ஒன்றை ஒன்றை உணர்ந்து மணப்பது....இன்றை நிலையை உணர்த்தும் ஒரு யதார்த்த பதிவு

    பதிலளிநீக்கு