புதன், 2 ஜனவரி, 2013

என்ன செய்துவிட்டாய் தமிழா

புதுவருடம் என்று
புது மாலை சூட
சாதனை என்ன
செய்துவிட்டாய் தமிழா






காணி நிலம் இல்லை
சொந்தபந்தம் இல்லை
வெள்ளைகார நாட்டில்
அகதி என்ற சொல்லை
மாற்றிவிட இல்லை
எமது ஈழ தாயின்
அடிமைநிலை மாறவில்லை
என்ன செய்துவிட்டாய் தமிழா
இப்படி நீ இறுமாப்பு கொள்ள

ஒரு வாய் சோற்றுக்கு
எம்மினம் வாட
விஷ்கி  வைன் போதையில்
நீ குலுங்கி ஆட
வெள்ளைகார நாகரிகம்
என்று நாம் கூற
அடிமையாக்கி வைத்தவனின்
காலடியில் ராஜ வாழ்க்கை
மானமுள்ள தமிழனா நீ

வீரமுள்ள குழந்தை ஒன்று
மீண்டும் வரும் நேரம்
கூறுகெட்ட பாவிகளின்
கொட்டம் அடங்கும் காலம்
மாலை சூட்ட நச்சு பாம்பு
நீயும் அங்கே வருவாய்
களத்து வீரர் உன்னுடைய
குடலை மாலையாய் அணிவார்

2 கருத்துகள்: